Published:Updated:

மரங்களைப் பாதுகாக்கும் ‘பட்டாம்பூச்சி’!

மரங்களைப் பாதுகாக்கும் ‘பட்டாம்பூச்சி’!

மரங்களைப் பாதுகாக்கும் ‘பட்டாம்பூச்சி’!

மரங்களைப் பாதுகாக்கும் ‘பட்டாம்பூச்சி’!

Published:Updated:

டுத்த 100 நாட்களுக்கு நீங்கள் காட்டில் வசிக்க வேண்டும் என்றால் ஏற்பீர்களா? ஆனால், கிட்டத்தட்ட 740 நாட்கள் காட்டில் அல்ல, ஒரு மரத்தில் மட்டுமே வசித்தார் ஜுலியா என்ற அந்தப் பட்டாம்பூச்சிப் பெண். அதுவும் தனக்காக அல்ல, மரங்களுக்காக!

ஆந்திராவில் நடந்த செம்மரக் கொள்ளை யையும், செந்தமிழர் கொலையையும் மறந்திருக்கமாட்டோம். இந்தியாவில் மட்டு மல்ல, அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியக் காடுகளிலும் இந்தக் கொள்ளை நடந்தது, மிகப் பெரிய அளவில்! வெறும் 3% செம்மரங்கள் மட்டுமே மிச்சமிருந்த நிலையில், அதையும் அழிக்க நினைத்தது பேராசைக்காரர்களின் கோடரி. ‘பசிபிக் லம்பர்’ என்ற நிறுவனம்தான் அந்தக் கொடூர கோடரி... 1,000 வயதைக் கடந்த மரங்களைக் குறிவைத்துக் குத்தியது. பல வேடிக்கை மனிதர்களைப் போலல்லாமல், மிகவும் வித்தியாசமான ஒரு போராட்டத்தை தொடங்கியது அந்தப் பட்டாம்பூச்சி. 1997ம் வருடம், சுமார் 1,500 வயதுடைய ஒரு செம்மரத்தை தேர்ந்தெடுத்து, அதற்கு ‘லூனா’ என்று பெயரிட்டு, 738 நாட்கள் அந்த மரத்திலேயே தங்கி தன் போராட்டத்தை நடத்தினார், அப்போது 41 வயதான ஜூலியா.

மரங்களைப் பாதுகாக்கும் ‘பட்டாம்பூச்சி’!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜூலியா, எந்த ஒரு தொண்டு நிறுவனத்தையும் சாராதவர். ஆனால், இந்த அறப்போராட்டத்தில் அனைத்து மனிதர் களையும் தன் நிறுவனம் ஆக்கினார். உயிர்வாழத் தேவையான அளவு உணவை மட்டும் உண்டார். ஸ்லீப்பிங் பேக், சோலார் போன், அடுப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளை மட்டுமே வைத்திருந்தார். காற்று, மழை, பூச்சிகள் தொல்லை என்று எதுவுமே அவரை அசைக்கவில்லை. அவர் அனைத்தையும் ரசித்தார். மரக்கிளைகளிலேயே நடந்தார். குட்டிக் கூடாரம் அமைத்து உறங்கினார். கயிறு மூலமாக 8 பேர் கொண்ட குழு அவருக்கு உணவளித்தது. முடிவு... வேறென்ன? வெற்றிதான்!

பசிபிக் லம்பர் நிறுவனம், முதலில் ஜூலியாவை கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஹெலிகாப்டர், காவலர்கள் என இன்னும் பல வழிகளில் அவருக்குத் தொல்லை கொடுத்தது. ஆனால் அவரின் அசாத்திய உறுதியினைக் கண்டு வியந்தது, பயந்தது, கடைசியில் பணிந்தது. ஆம்... ஊடகம், பத்திரிகைகள், இணையம் என்று பறந்திருந்த ஜூலியாவின் ஆதரவாளர்கள், அந்த நிறுவனத்துக்கு அச்சத்தை தந்தார்கள். இறுதியில் பசிபிக் லம்பர் நிறுவனம் ஜூலியாவிடம் ஒப்பந்தம் செய்துகொண்டது... அனுமதியின்றி எந்த ஒரு மரத்தையும் வெட்டாது என்று!

ஜூலியா இப்போது ஓர் ஆண்டில் சுமார் 250 நிகழ்ச்சிகள் வரை பங்கேற்கும் தன்னம்பிக்கைப் பேச்சாளர். சுற்றுச்சூழலுக்குப் பாதகமான எந்தப் பொருளையும் இவர் உபயோகப்படுத்துவது இல்லை. ‘லெகசி ஆஃப் லூனா’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள இவர்தான், 2000-ம் ஆண்டு வெளிவந்த ‘பட்டர்ஃப்ளை’ ஆவணப்படத்தின் சாராம்சம். இவரை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான், ‘எ ஃப்ரெண்ட் ஆஃப் எர்த்’ நாவல். ஜூலியாவின் உறுதியால் கவரப்பட்ட சில பாடகர்கள், அவருக்காக பாடல் இயற்றியுள்ளனர். நல்லவர்களுக்கு முன்னோடியாக இன்னும் பறந்துகொண்டிருக்கிறது இந்தப் பட்டாம்பூச்சி!

ஜூலியா தற்போது சுற்றுச்சூழல் பாதுகாவல ராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும் தன் பயணத்தைத் தொடர்கிறார். ``சர்க்கிள் ஆஃப் லைஃப்’’ என்ற அமைப்பிலும் பணியாற்றி வருகிறார். 2000-ம் ஆண்டில் ஈக்வடார் காடுகளை அழிக்க நினைத்த எண்ணெய் நிறுவனத்துடன் போராடி சிறையும் சென்றிருக்கிறார். பேச்சில் மட்டுமல்ல... தன் வாழ்விலும் இயற்கையுடன் இணைந்தே வாழ்கிறார்.

பா.நரேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism