Published:Updated:

`வேர்டு பேங்க்’வேட்டைக்காரர்கள்!

`வேர்டு பேங்க்’வேட்டைக்காரர்கள்!

`வேர்டு பேங்க்’வேட்டைக்காரர்கள்!

`வேர்டு பேங்க்’வேட்டைக்காரர்கள்!

Published:Updated:

‘‘அன்னிக்கு ஏர்போர்ட்ல நானும் ஹர்பித்தும் நின்னுட்டு இருந்தோம். அப்போ, ‘ஹேய் நீங்க ஹர்பித், ஹர்பிதாதானே? ப்ளீஸ் ஒரு செல்ஃபி எடுத்துக்கவா?’னு நிறைய பேர் கேட்டாங்க. எங்க மம்மி, டாடி கண்ணுல ஸ்பார்க்ஸ்!’’ என்று ஹர்பிதா சொல்ல, ‘‘யெஸ், ஐ ரிமெம்பர் தட் டே!’’ என தலையாட்டுகிறார் ஹர்பித்.

`வேர்டு பேங்க்’வேட்டைக்காரர்கள்!

கொஞ்சம் தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் என கொஞ்சும் ஸ்டைலில் பேசும், ஒன்பது வயதாகும் இந்த இரட்டையர், சர்வதேச வெற்றியாளர்கள். ஆஸ்திரேலியாவின் தொலைக்காட்சி சேனலான `சேனல் 10’ நடத்தும், 8 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கலந்துகொள்ளும் ‘தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ’எனும் (வார்த்தைகளுக்கான எழுத்துகளை சரியாக சொல்லுதல்) போட்டியில் டாப் 12 பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள். கடினமான, நீளமான, உச்சரிக்கச் சுலபமில்லாத வார்த்தைகள் எதைச் சொன்னாலும் சரியான ஸ்பெல்லிங்கை நொடிகளில் சொல்லி அசத்தும் இந்தச் செல்லங்கள்... தமிழ்ப் பசங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த இரட்டையரின் பெற்றோர் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து 8 வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் சென்னைக்கு விசிட் அடித்தவர்களிடம் ஒரு ஸ்பெஷல் பேட்டி.

‘‘மிகக்கடினமான இந்தப் போட்டியில ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 18,000 பேர் கலந்துகிட்டாங்க. 55 கட்டங்களுக்குப் பிறகு, கடைசியா 52 பேரை தேர்வு செஞ்சாங்க. அந்த 52 குட்டீஸுக்கும் இடையில நடந்த போட்டியில இப்ப டாப் 12 லெவல்ல இவங்க ரெண்டு பேரும் இருக்காங்க!’’

- இரட்டையர்களின் அப்பா பாண்டியன் அண்ணாமலைக்கு ஆனந்தப் பெருமிதம். இவர் ஆஸ்திரேலியாவில் சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்ட்.

‘‘பொதுவா குழந்தைகளுக்கு சேமிக்கக் கத்துக் கொடுப்போம். அந்தச் சேமிப்பு பல வகைகள்ல இருக்கும். ஆனா, நாங்க சொல்லிக் கொடுக்காமலே இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து, வார்த்தைகளை சேமிக்கக் கத்துக்கிட் டாங்க. கிட்டத்தட்ட 50 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட வார்த்தை வங்கியை (word bank), தங்களோட ஐபாட்ல சேமிச்சு வெச்சிருக்காங்க’’ என்று பாண்டியன் நிறுத்த, அம்மா பிரியா பாண்டியன் தொடர்கிறார்...

`வேர்டு பேங்க்’வேட்டைக்காரர்கள்!

‘‘நான் ஒரு ஃபிஸியோதெரபிஸ்ட். இவங்க ரெண்டு பேரும் முழு ஆரோக்கியமான குழந்தைகளா இருப்பாங்கனு, இவங்க பிறந்த ரெண்டு வருஷம் வரைக்கும் எனக்கு நம்பிக்கை வரல. காரணம், இவங்களை கருவில் சுமந்தப்போ கர்ப்பகாலத்தில் உடல்ரீதியா எனக்கு சில சிக்கல்கள் இருந்துச்சு. ஆஸ்திரேலியாவுல இருந்து பிரசவத்துக்காக இந்தியா வந்தேன். வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில, 8 மாசத்துலயே சிசேரியன் மூலமா பிறந்தாங்க. ரெண்டு பேரும் சேர்ந்தே 2 கிலோ 200 கிராம்தான் இருந்தாங்க. அதனால குழந்தைகளோட ஆரோக்கியமும் மூளை வளர்ச்சியும் எப்படி இருக்குமோனு பயந்தோம். ஆனா, ரெண்டு வயசுக்குப் பிறகு அவங்ககிட்ட நிறைய மாற்றம் தெரிய ஆரம்பிச்சது. வளர வளர ரெண்டு பேரும் கணக்கில் மிகுந்த ஆர்வம் காட்டினதால, மென்டல் மேத்ஸ் கிளாஸ்ல சேர்த்து விட்டோம் வார்த்தைகளோட இவங்க தேடல் தொடங்கின இடம்தான் ஆச்சர்யமானது!’’ என்ற தங்கள் அம்மாவை இடைமறித்து, ‘நாங்க சொல்றோம்!’ என்று குறும்பும், குதூகலமுமாக முன் வருகிறார்கள் ஹர்பித், ஹர்பிதா.

‘‘அம்மா எங்களுக்கு தினமும் கதை சொல்லுவாங்க. அதுல இருக்கிற வார்த்தை களுக்கு அர்த்தம் என்ன, ஸ்பெல்லிங் என்னன்னு அம்மாகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அதையே நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மாத்தி ஒருவர் கேட்டு விளையாடுவோம். அப்படியே நிறைய வார்த்தைகளை, கடினமான, நீளமான வார்த்தைகளையும் அதுக்கான அர்த்தத்தையும் தெரிஞ்சுக்கிற ஆர்வம் வந்தது. டிக்‌ஷனரி, நெட்னு தேடித் தேடிக் கத்துக்க ஆரம்பிச்சோம். இப்ப எங்க வேர்டு பேங்க்ல அனிமல்ஸ், ஆர்ட்ஸ், மியூசிக், டெக்னாலஜினு பல பிரிவுகளில் வார்த்தைகள் சேமிச்சு வெச்சிருக்கோம்!’’

- ஐபாடும் கையுமாக ஹர்பித் பேச, ‘‘வேர்ட்ஸ் மட்டுமில்ல, கராத்தேவும் கத்துக்கிட்டு இருக்கோம். யெல்லோ, ப்ளூ, கிரீன், ஆரஞ்சுனு ஆல் கலர்ஸ்லயும் பெல்ட் இருக்கு. ஆனா, வீட்டுல சண்டை போட மாட்டோம்!’’ எனச் சொல்லிக் கொண்டே செல்லமாக ஹர்பித்தை ஒரு குத்துவிடுகிறார் ஹர்பிதா.

‘‘கர்ப்பகாலத்திலேயே எனக்கு டயாபடீஸ் வந்தது. இப்ப வரைக்கும் அதுக்கான ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன். டயாபடீஸுக்காக நான் பரிசோதனை, சிகிச்சை, மாத்திரைகள்னு எடுத்தப்போ, குழந்தைகளுக்கு நோய்கள் பத்தியும் உடல் உறுப்புகள் பத்தியும் தெரிஞ்சிக்கற ஆர்வம் ஏற்பட்டது. மருத்துவத் துறை பற்றி நிறைய தெரிஞ்சுக்க ஆசைப்படுவாங்க. ரெண்டு பேருக்குமே அறுவை சிகிச்சை நிபுணர் ஆகணும்கிறதுதான் லட்சியம்!’’ என்று பிரியா தன் பிள்ளைகளைப் பார்க்க, ‘‘யெஸ் யெஸ்!’’ என்கிறார்கள் அவரின் இரட்டைப் பெருமைகள்!

பொன்.விமலா படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism