Published:Updated:

நல்லாசிரியர் ராஜ்மா!

நல்லாசிரியர் ராஜ்மா!

நல்லாசிரியர் ராஜ்மா!

நல்லாசிரியர் ராஜ்மா!

Published:Updated:

நீலகிரி மாவட்டம், கேத்தி பஞ்சாயத்து... பச்சைப் பசேல் என தேயிலைத் தோட்டங்களும் முட்டைகோஸ், கேரட் வயல்களும் நிறைந்த இயற்கை அன்னையின் மடி! இப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவரும் படுகர் இனத்தில், 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள் பள்ளிக்குப் போவதே பெரிய காரியம்! இதற்கு நடுவே, ஆசிரியர் ஆகி, கேத்தொரை கிராமத்தின் முதல் பட்டதாரி பெண் என்றும் பெயரெடுப்பது சாதனைதானே! நீலகிரி மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரே பெண்மணி ராஜம்மாள். சுருக்கமாக ‘ராஜ்மா'!

நல்லாசிரியர் ராஜ்மா!

சென்னை, தாம்பரம் கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியராகவும் சாரணியர் இயக்க பயிற்றுநராகவும் பணிபுரிந்து அண்மையில் ஓய்வுபெற்ற ராஜம்மாளை, மேற்கு தாம்பரத்திலிருக்கும் குட் லைஃப் சென்டர் ஆதவற்றோர் இல்லத்தில் சந்தித்தோம். ஆசிரியப் பணி போக, மீதி நேரத்தை இந்த இல்லத்துக் குழந்தைகளுக்குச் சேவை செய்வதில் செலவிடுகிறார் ராஜ்மா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அம்மா, அப்பா யாருன்னே தெரியாத குழந்தைங்க... இவங்களை மோட்டிவேட் பண்ணி, சமூகத்தில் முக்கியமான இடத்தில் நிறுத்தணும். அதுக்காக உழைக்கிறதில் அளவிட முடியாத மகிழ்ச்சியும் திருப்தியும் எனக்கு! வேறு எந்தப் பொழுது போக்கும் கிடையாது’’ என்று ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளிடம் பரிவு காட்டிய ராஜ்மா தொடர்ந்தார்...

``படிக்காத என் அப்பா ராமச்சந்திரனும் அம்மா சரசுவும்தான் என்னுடைய இவ்வளவு பெருமை களுக்கும் அடித்தளம், பின்புலம் எல்லாம்! 50 வருஷம் முன்னால எங்க கிராமத்தில் பொம்பளைப் புள்ளைங்க பள்ளிக்கூடத்துக்குப் போறது பெரிய அதிசயம். ஆனால், நான் போனேன். காரணம், இந்திரா காந்தி அம்மாதான்! நீலகிரிக்கு அவங்க வந்து பேசினது எங்க அப்பாவுக்குப் பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கு. அவங்க பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டதால, தன் பெண்ணும் இந்திரா காந்தி போல மைக் பிடிச்சுப் பேசணும்னு ஒரு ஆர்வம்.  பி.எஸ்ஸி முடிச்சிட்டு, டீச்சராக வேலை பார்த்துக்கிட்டே பி.எட் படிச்சேன். ஆங்கிலத்தின் மேலிருந்த மோகம் காரணமாக, எம்.ஏ.ஆங்கில இலக்கியம் படிச்சு, எம்.எட் பட்டமும் வாங்கினேன். யதேச்சையாக கேந்திரிய வித்யாலயாவில் விண்ணப்பிக்க, அங்கேயே வேலை கிடைச்சுது. இடையில் எனக்குத் திருமணமும் ஆனது. காதல் திருமணம், கசப்பில் முடிஞ்சது. ஒரே பையன் பிருத்விராஜ், இப்போ தைவான்ல பி.ஹெச்டி பண்ணிட்டிருக்கான்.

நான் பார்க்கக் கறுப்பா இருக்கேன்னு சின்ன வயசில் என் காதுபடவே பேசியிருக்காங்க. அதே வாயால என்னைப் பாராட்டுற மாதிரி ஏதாவது சாதிக்கணும்னு வெறி! எனக்கு ஏற்பட்ட துடிப்பும் வேகமும், நல்லாசிரியர் விருது வாங்கி ஊருக்குப் போனபோதுதான் அடங்குச்சு!’’ என்று சொல்லும் ராஜம்மாள், கண்களில்தான் எத்தனை தீர்க்கம்!

பிரேமா நாராயணன் படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism