சிறுவயதில் பேச்சு சரியாக வராமல் இருந்தவர் விஷாலினி. இன்றோ, பிரதமர் நரேந்திர மோடியுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கேள்வி கேட்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்பது ஆச்சர்யம்தானே!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையைச் சேர்ந்த 15 வயது விசாலினி, ஐ.ஐ.பி லஷ்மிராமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி. கூடவே, ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் நேரடி வகுப்பில் பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), முதலாமாண்டு படித்து வருகிறார். ஆச்சர்யமாக இருக்கிறதா...?!

‘‘சிறு வயதில் விசாலினியால் மற்ற குழந்தைகளைப் போல பேச முடியவில்லை. ‘அவளிடம் எதையாவது பேசிக்கொண்டே இருங்கள். உங்கள் உதட்டசைவைப் பார்த்து அவளும் பேசப் பழகுவாள்’ என்று சொன்னார் டாக்டர். அப்போது ஆல் இண்டியா ரேடியோ வில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், மகளுக்காக வேலையை விட்டேன். பேசியது போக, நிறைய புத்தகங்களை அவளுக்கு வாசித்துக் காட்டுவேன். ஒரு கட்டத்தில் அவள் கிரகித்துக்கொண்டு, வெளிப்படுத்திய விதம் என்னை பிரமிக்க வைத்தது பொதுவாக, மனிதனின் நுண்ணறிவுத் திறன் (ஐ.க்யூ) 90 என்கிற அளவிலேயே இருக்கும். அப்போது இருந்த நெல்லை கலெக்டர் அதுல் ஆனந்த் மூலமாக அவளின் நுண்ணறிவுத் திறனை பரிசோதித்தபோது 225 என்பது தெரிய வந்தது. இது உலகில் மிகவும் அதிகம் என்பதால், சர்வதேச சாதனைப் புத்தகத்தில் அவளுடைய பெயர் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் டபுள் புரமோஷன் பெற்றாள். இன்ஜீனியரிங் முடித்த மாணவர்கள் எழுதும் கணினித் தேர்வை 10-வது வயதிலேயே எழுதி தேர்ச்சி பெற்று, சாதனை படைத்தாள். பத்து வயதிலேயே 10-ம் வகுப்புத் தேர்வெழுதத் தயாராகிவிட்டாள். ஆனால், 15 வயதுக்கு முன்பாக அதை எழுத தமிழக அரசு சிறப்பு அனுமதி கொடுக்கவில்லை. அதனால் பத்தா வது, ப்ளஸ் டூ படிக்காமல், நேரடியாக பி.டெக் சேர்ந்திருக்கிறாள்!’’ - பெருமையுடன் அம்மா சேதுராக மாலிகா தகவல்கள் சொன்னார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமரிடம் கேள்வி கேட்ட அனுபவம் பகிர்ந்தார் விசாலினி... ‘‘800 மாணவர்களுடன் பிரதமர் உரையாடிய வீடியோ கன்ஃபரன்சிங்கில், 10 பேருக்கு மட்டுமே கேள்வி கேட்க அனுமதி. நான் முதலில் ‘வணக்கம்’ என தமிழில் சொன்னதும், பதிலுக்கு `வணக்கம்’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். ‘நான் எந்த வகையில் நாட்டுக்குச் சேவை செய்ய முடியும்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.

‘இந்த வயதிலேயே நாட்டுக்குச் சேவை செய்ய ஆர்வமா?!’ என்று சிரித்த பிரதமர், ‘அரசு ஊழியராகவோ, அரசியல்வாதியாகவோ, ராணுவத்தில் சேரவோ அவசியமில்லை. மின்சாரத்தை, வாகன எரிபொருளை, தண்ணீரை சிக்கனப்படுத்துவது, பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பது, கல்வியறிவில்லாதவர்களுக்கு கற்றுக் கொடுப்பது... எல்லாமே நாட்டுக்குச் செய்யும் சேவைதான்!’ என்று உற்சாகப்படுத்தினார். எனக்கு இந்தி தெரியும் என்றாலும், பிரதமர் ஆங்கிலத்தில் பதில் சொல்லியிருந்தால் எல்லோருக்கும் புரியும் விதமாக அமைந்திருக்கும்!’’ என்றார் துறுதுறுவென!

ஆண்டனிராஜ் படங்கள்: எல்.ராஜேந்திரன்