Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:

புனே பொண்ணு ஸ்வேதா!

சன் டி.வி ‘சந்திரலேகா’ சீரியல் ஹீரோயின் ஸ்வேதா, சினிமாவில் வலது கால் எடுத்து வைத்து, பின் சேனலுக்கு வந்தவர். ‘ஆழ்வார்’ படத்தில் அஜித்துக்கு தங்கை கேரக்டரில் ஆரம்பித்து, ‘வள்ளுவன் வாசுகி’, ‘கூட்டாஞ்சோறு’, கடைசியாக ‘நான்தான் பாலா’ ஹீரோயின் என கோலிவுட்டில் இருந்தவர், இப்போது ‘சந்திரலேகா'வில் பரபரப்பான ஜர்னலிஸ்ட் ‘சந்திரா’வாக கலக்கிக்கொண்டிருக்கிறார்.

கேபிள் கலாட்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் புனே. 15 வருஷம் ஆச்சு சென்னை வந்து. குழந்தை நட்சத்திரமா இந்தி சீரியல்களில் தலை காட்ட ஆரம்பிச்சு, இப்போ முழு நேர தென்னிந்திய நடிகை. சினிமா ஹீரோயினாக ஆசைப்பட்டு சீரியல் நடிகை ஆனப்போ, ஆரம்பத்தில் ஏமாற்றமா இருந்தது. ஆனா, அப்பப்போ வர்ற சினிமா வாய்ப்பைவிட, சீரியல் என்னை எப்பவுமே பிஸியா வெச்சிருக்கு.

ஃபிரீயா இருக்கும் நேரங்களில், சென்னை சத்யம் தியேட்டரில் என்னைப் பார்க்கலாம். ஃப்ரெண்ட்ஸ் அல்லது குடும்பத்தோட படம் பார்க்கக் கிளம்பிடுவேன். அப்புறம் நெட்ல சர்ஃப் பண்றது ரொம்பப் பிடிக்கும். முக்கியமா சமையல் குறிப்புகள் பார்த்து நிறைய சமைப்பேன். ‘சக்கோலி’னு எங்க ஊரு ஸ்டைல்ல ஒரு டிஷ். அதை மட்டும், டயட்டுக்கு டாட்டா காட்டிட்டு ஒரு பிடி பிடிச்சிருவேன். அதெல்லாம் இருக்கட்டும், என்னோட ஜர்னலிஸ்ட் கேரக்டருக்கு நீங்க ஏதாச்சும் டிப்ஸ் கொடுக்கலாமே!’’
பார்றா!

ஐந்து கிலோ நகை அணிந்து..! 

ஜீ தமிழ் சேனலில் ‘ஜோதா அக்பர்’ சீரியல் பார்க்கும்போது, ‘யாருப்பா இந்தப் பொண்ணு? என்று கேட்க வைக்கும் விதத்தில், ‘ஜோதா’வாக கண்களிலேயே நடிப்பைக் கொட்டும் பரிதி ஷர்மா, ஸ்டார் ப்ளஸ் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் தன் மீடியா பயணத்தை ஆரம்பித்தவர். பி.பி.ஏ, எம்.பி.ஏ முடித்த படிப்ஸ் கிளி. வீட்டில் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு வேலைக்குப் போகச் சொல்லி கைகாட்ட, ‘நோ’ சொல்லிவிட்டு டி.வி-க்கு வந்தவர், இன்னொரு பக்கம் குடும்பத்தை சமாதானப்படுத்த வரலாற்றில் பிஹெச்.டி முடித்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவர் வாழ்வின் பெரிய டர்னிங் பாயின்ட்.

கேபிள் கலாட்டா!

ஏக்தா கபூர், தன் ‘ஜோதா அக்பர்’ சீரியலுக்காக இந்தியா முழுக்க ‘ஜோதா’வை தேடிக்கொண்டிருக்க, சுமார் 7,000 பெண்கள் கலந்துகொண்ட ஆடிஷனில் ஜம்மென்று தேர்வானார் பரிதி. அவர் குடும்பமும் ஹேப்பி அண்ணாச்சி. இப்போது ‘ஜோதா பாய்' வேடத்தில், யூத்களின் ட்ரீம் கேர்ள் ஆகியிருக்கும் பரிதியைப் பற்றிய ஷாக்கிங் நியூஸ்... தன்மே சக்ஸேனாவுக்கும் இந்தப் பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் டும்டும்டும் முடிந்துவிட்டது. ரத்ததான முகாமில் பார்த்துக் கொண்டபோது இருவருக்கும் பத்திக்கொண்ட லவ் அது.

`‘ஜோதா அக்பருக்காக வாள் சண்டை கற்றுக் கொண்டதைவிட, ஷூட்டிங்கில் தினமும் குறைந்தது ஐந்து கிலோ முதல் 10 கிலோ நகைகளைச் சுமக்க வேண்டியிருப்பதுதான் கஷ்டம்!’' என்று கண்சிமிட்டுகிறார் பரிதி ஷர்மா!

யம்மா!

எப்பவுமே `ஹோம்லி’!

சேனல் ஏரியாவின் சீனியர் முகமான மீனாவுக்குச் சொந்த ஊர் ஹைதராபாத். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்னு பல மொழிகள் தெரியும். ‘‘படிக்கும்போதே பட வாய்ப்பு வர ஆரம்பிச்சது. ‘கருப்பு நிலா’வில் தொடங்கி ‘பத்ரி’, ‘கிரீடம்’, ‘கண்ணால் பேசவா’, ‘லவ் பேர்ட்ஸ்’னு ஏகப்பட்ட படங்கள் பண்ணியாச்சு. எல்லாமே குடும்பப் பாங்கான கேரக்டர்தான். இப்பவும் மலையாளம், தெலுங்குப் படங்களில் ஹீரோவுக்கு அக்கா, அண்ணி கேரக்டருக்கு ‘கூப்பிடுங்க மீனாவை!’னு புக் பண்ணிட்டு இருக்காங்க.

கேபிள் கலாட்டா!

தமிழ் சீரியல்களிலும் அதே ஹோம்லி இமேஜ். நிஜத்திலும் நான் அமைதியான ஆளுதான். குடும்பம், வேலை இது ரெண்டும்தான் என் உலகம். மீடியா வேலைக்கு வந்துட்டா, வீட்டை சரியா பார்த்துக்க முடியாதுனு சிலர் சொல்லுவாங்க. அதெல்லாம் சும்மா. நம்மை நாமே சோம்பேறி ஆக்கிக்கிற டயலாக். பெண்கள் கிச்சனிலேயே தங்களைச் சுருக்கிக்காம, தங்களுக்கான துறையைக் கண்டுபிடிச்சு வெளிய வரணும். வீட்டையும் விட்டுக்கொடுக்காம வேலையிலும் முன்னேறும்போது, அந்த வீடே நமக்கு பெரிய சப்போர்ட்டா இருக்கும்!’’

அனுபவம்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ150

சபாஷ்... ஜீ தமிழ் டி.வி!

``ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ 1000-வது எபிசோட் மிகுந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்திய நிகழ்ச்சி! கள்ளநோட்டை வாங்கி, தெரியாமல் சீரழிந்தவர்கள் 3 பேர் சொன்னதைக் கேட்டு ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்குள், கள்ளநோட்டை கொடுத்து ஏமாற்றிய குற்ற உணர்வு தாங்க முடியாமல், நிகழ்ச்சிக்கு நேரில் வந்திருந்து ஒருவர் ‘டெமோ’ செய்து காட்டினார். அதைக் கண்டு அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டோம். ஊடகங்களின் மூலம் இது போன்ற விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் வெளியாவது மக்களை ஜாக்கிரதை உணர்வோடு இருக்கச் செய்யும்! ஜீ தமிழ் டி.வி-க்கு ஒரு சபாஷ் போடலாம்!'' என்று பாராட்டுகிறார் சென்னை, அம்பத்தூரில் இருந்து அஸ்வினி ஆனந்த்.

‘மகளிர் மருத்துவம்'... மணியான நிகழ்ச்சி!

``பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மகளிர் மருத்துவம்’ நிகழ்ச்சி பார்த்தேன். அதில், குழந்தையின்மை, தைராய்டு, சர்க்கரை போன்றவை குறித்து கேள்விகள் கேட்டார்கள். அவற்றுக்கெல்லாம் டாக்டர் அருமையாக பதில் அளித்தார். `எந்த நோயாக இருந்தாலும், தரமான சிகிச்சை எடுத்தால் நோய் தீர்ந்துவிடும்' என்று ஆணித்தரமாகக் கூறினார். இது மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் கிருஷ்ணகிரியில் இருந்து ஜெயலட்சுமி வசந்தராசன்.

சத்தான, முத்தான சமையல்!

``சின்னக் குழந்தைகள் விரும்பி பார்க்கும் சுட்டி டி.வி-யில் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. குழந்தைகள் என்னென்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து சமைக்கின்றனர். அதோடு காய்கறிகள், முட்டை என்று எதை வைத்து சமைத்தாலும் அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை மிகவும் அழகாகவும், தெளிவாகவும் சொல்கிறார்கள். குழந்தைகள் மட்டுமில்லாமல், பெரியவர்களுக்கும் பிடிக்குமளவுக்கு நிகழ்ச்சியை வழங்குகிறார்கள்'' என்று மெய்சிலிர்க்கிறார் கும்பகோணத்தில் இருந்து ஜி.விஜயலெட்சுமி.

ரிமோட் ரீட்டா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism