Published:Updated:

பாய் ஃப்ரெண்ட் படம் பிடித்தால்..?

பாய் ஃப்ரெண்ட் படம் பிடித்தால்..?

பாய் ஃப்ரெண்ட் படம் பிடித்தால்..?

பாய் ஃப்ரெண்ட் படம் பிடித்தால்..?

Published:Updated:

`செல்'லும் இன்டர்நெட்டும் இன்றைய இளைஞர்களிடமிருந்து பிரிக்க முடியாத தொழில்நுட்பங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், அவற்றிலிருக்கும் சாதக - பாதகங்களை அவர் களுக்குப் புரியவைப்பதும் அவசியமாகிறது. அந்த விழிப்பு உணர்வை ‘செல்நெட்’ நிகழ்ச்சி மூலம் பல கல்லூரிகளில் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது அவள் விகடன்!

பாய் ஃப்ரெண்ட் படம் பிடித்தால்..?

அந்த வரிசையில், இம்முறை ‘தி சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங்’ மற்றும் சென்னை, பக்தவச்சலம் நினைவு மகளிர் கல்லூரியுடன் இணைந்து 2500-க்கும் அதிகமான மாணவிகள் மத்தியில் ‘செல்நெட் 2015’ என்கிற விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை, ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், சென்னை கொரட்டூரில் உள்ள பக்தவச்சலம் நினைவு மகளிர் கல்லூரி யில் நடத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிகழ்ச்சியின் முதல் நாள்... ரங்கோலி, கட்டுரை, நடனம், ஃபேஷன் ஷோ, மவுன நாடகம், மாதிரி வடிவமைப்பு உள்ளிட்ட எட்டு விதமான போட்டிகள் மூலமாக... செல்போனினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், செல்போன் தொழில்நுட்பங்கள் குறித்தும் வார்த்தைகள், ஓவியங்கள் மற்றும் நடிப்பு மூலமாக மாணவிகள் வெளிப்படுத்திய நிகழ்வுகளுடன் நிறைவுற்றது.

இரண்டாவது நாளை முழுமையாக்கினார், நம் சிறப்பு விருந்தினரான ’சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ்’ எனும் தனியார் நிறுவனத்தின் கூடுதல் பொது இயக்குநர் அமர் பிரசாத் ரெட்டி. ‘‘இன்று இணையதளம் இல்லாமல் எந்த நாடும் தன் வளர்ச்சியை முன்னெடுக்க முடியாது. ஆனால், மதுவைவிட அதிக தீங்கைக் கொடுக்கக் கூடியதும் இந்த இணையதளம்தான். ஃபேஸ்புக் அக்கவுன்ட்டின் பிரைவஸி என்பது கேள்விக்குறி. அதை தனக்குச் சாதகமாக ஒருவன் பயன்படுத்த நினைத்தால், அங்கிருந்து ஆரம்பிக்கும்... ‘சைபர் திரெட்’!

பாய் ஃப்ரெண்ட் படம் பிடித்தால்..?

இன்று தெருவில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் பலர், சைபர் க்ரைமினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் நம்புவீர்களா? ‘பெக்கர் மாஃபியா’ என்ற கும்பல் ஒன்று, ஆன்லைனில் குழந்தைகளுக்கு ஓவியம், பாட்டு, க்விஸ் போட்டிகள் நடத்தும் போர்வையில், அவர்கள் படிக்கும் பள்ளி, வகுப்பு, வீட்டு முகவரி, செல்லும் டியூஷன் சென்டர்கள் என்று அவர்களின் விவரங்களைச் சேகரிக்கும். அதை இன்னொரு கும்பலிடம் விற்கும். அந்தக் கும்பல் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி அக்குழந்தைகளைக் கடத்தி பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டலாம், அவர்களை இன்னொரு நாட்டுக்கு விற்கலாம், பிச்சை எடுக்க வைக்கலாம். டெல்லியில் மட்டும் இப்படி 40,000 குழந்தைகள் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்று அதிர வைத்தவர், மேலும் அதிர்ச்சிக் கூட்டினார் இப்படி...

``இன்னொரு பக்கம், பெங்களூரு வில் மட்டும் 15,000 இளம்பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள். எப்படி? கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆன்லைனில் வேலைவாய்ப்புக்கு ஒரு போலி நிறுவனத்திடம் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிய, அந்த டேட்டாக்கள் அனைத்தும் ஒரு கும்பலிடம் விற்கப்பட, அந்த ஆபத்தான லிங்கில் காணாமல் போனவர்கள்தான் இவர்கள். இங்கு மட்டுமல்ல, குலுக்கல் பரிசு தருகிறோம் என்று இனி யாரும் இ-மெயில், செல்போன் விவரங்களைக் கேட்டால்கூட கொடுக்காதீர்கள்.

உங்கள் பாதுகாப்புக்காக ஒரு விஷயம் சொல்கிறேன். பாய் ஃப்ரெண்டுடன் வெளியில் செல்லும்போது, முதலில் அவன் மொபைலை வாங்கி நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதும், ஏதேனும் காரியம் செய்துகொண்டிருக்கும்போதும் எந்தக் கோணத்தில் அவன் நீங்களே அறியாமல் உங்களைப் புகைப்படம், வீடியோ எடுப்பான் என்பது தெரியாது; இன்று நல்ல நட்பு இருந்தாலும் நாளை யார் எப்படி மாறுவார் என்பதும் தெரியாது. ஒருவேளை பிரச்னையில் மாட்டினால் இது சினிமா இல்லை... உங்களை இரண்டரை மணி நேரத்தில் ஆபத்தில் இருந்து மீட்டு வர!

போட்டோ, வீடியோ, ஸ்டேட்டஸ் என அனைத்திலும் எதிர்வினையைச் சிந்தித்து செயலாற்றுங்கள். வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலை யிலும் சைபர் க்ரைமில் மாட்டிவிடாதீர்கள். எத்தனையோ வேலை வாய்ப்புகள் தொழில்நுட்பத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் நேரத்தை செல வழியுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கை மேம்படும். வாழ்த்துகள்!’’ என தன் எச்சரிக்கைகளால் அரங்கத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார், அமர் பிரசாத் ரெட்டி.

பாய் ஃப்ரெண்ட் படம் பிடித்தால்..?

தொடர்ந்து, ‘தொழில்நுட்பம் வரமா... சாபமா?’ என்ற தலைப்பில் மாணவிகளிடையே நடந்த பட்டிமன்றத்தின் நடுவராக புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டிமன்றப் பேச்சாளர் தமிழரசி கலந்துகொண்டார். ‘`இணையமும், தொழில்நுட்பமும் நாம் கையாள்வதை பொறுத்துதான், நம் வாழ்க்கைக்கு அது வரமாவதும், சாபமாவதும்!’’ என்றார் தீர்ப்பாக.

முதல் நாள் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட, நிறைவடைந்தது விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!

சா.வடிவரசு, கே.அபிநயா  படங்கள்: க.பாலாஜி

சளியை துரத்தும் தூதுவளை துவையல்!

குழந்தைகள் முதல் முதியோர் வரை பலருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களில் தும்மலில் தொடங்கி தலைவலி, இருமல், சளி என தொடர் உபாதைகள் ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் தூதுவளை துவையல் அருமையான மருந்தாகும். முள் நீக்கிய தூதுவளை இலைகளோடு தேவையான அளவு இஞ்சி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உளுந்து, பச்சை மிளகாய், வெள்ளைப்பூண்டு, மிளகு, புளி, உப்பு சேர்த்து நெய் விட்டு வதக்கி சூடு ஆறியதும் அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும் (தூதுவளையுடன் கொஞ்சம் முசுமுசுக்கை இலையையும் சேர்த்துக்கொள்ளலாம்). இந்த துவையலை கால் அல்லது அரை மணி நேரம் கழித்து காலை சிற்றுண்டிகளான இட்லி, தோசைக்கு சேர்த்துக்கொள்ளலாம். பகல் உணவின்போது மோர் சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம். வாரத்தில் 2 அல்லது 3 நாட்களாவது தூதுவளை துவையல் சாப்பிட்டால் பல பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, குழந்தைகளின் மூளை நரம்புகள் வலிமை பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.

  இருமல், கபம் போன்றவற்றால் மூச்சுத்திணறும் குழந்தைகளுக்கு இஞ்சிச்சாறு, மாதுளம்பழச்சாறு கலவையுடன் தேன் கலந்து குடிக்க கொடுத்தால், பலன் கிடைக்கும். சிறு குழந்தைகளுக்கு சளியினால் மூச்சுத்திணறல் ஏற்படும்போது வெற்றிலைச் சாற்றுடன் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கோரோஜனையை இழைத்து அரை சங்கு (பாலாடை) குடிக்கக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

- எம்.மரிய பெல்சின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism