Published:Updated:

பெண் மனதின் துல்லியப் பதிவுகள்!

பெண் மனதின் துல்லியப் பதிவுகள்!

பெண் மனதின் துல்லியப் பதிவுகள்!

பெண் மனதின் துல்லியப் பதிவுகள்!

Published:Updated:

ய்வுபெற்ற நீதிபதியும், தேசத்தின் அறிவுசார் சொத்து உரிமை கொள்கையை வரைவு செய்யும் ‘திங் டேங்க்' (Think Tank) அமைப்பின் தலைவருமான பிரபா ஸ்ரீதேவன், தமிழ் பெண் எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் சிறுகதைத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ‘‘மொழிபெயர்ப்பில் இது என் முதல் அனுபவம்!’’ என்று உரையாடலை ஆரம்பித்தார் பிரபா...

பெண் மனதின் துல்லியப் பதிவுகள்!

‘‘1957 முதல் 1998 வரையிலான இலக்கிய தளத்தில் தமிழ் பெண் எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் பங்கு அளப்பரியது. வீட்டு ஜன்னலின் ஓரம் ஒரு நாற்காலியில் அமர்ந்து, வெளியே தெரியும் நாகலிங்க மரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சராசரிப் பெண்ணாகத் தன்னைப் பதிவு செய்யும் அவர், எப்படி அனைத்து தளப் பெண்களின் உணர்வுகள், சிந்தனைகளை இவ்வளவு துல்லியமாக செதுக்கியிருக்கார் என்று, அவர் படைப்புகளைப் படிக்கும்போது வியந்திருக்கிறேன். அவர் வாழ்நாள் முழுக்க தன்னை தொந்தரவு செய்துகொண்டிருந்த உடல்நலக் கோளாறு களைத் தாண்டிதான், தன் இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். இளம் வயதில், அங்கொன்றும், இங்கொன்றுமாக சூடா மணியின் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், ஒரே புத்தகத்தில் மூச்சுமுட்டப் படித்தபோது, மெய்சிலிர்த்துப் போனேன்!’’ என்றவர், சூடாமணியின் சிறுகதைத் தொகுப்பில் ஒன்றான ‘நாகலிங்க மரம்’தான் இப்போது மொழிபெயர்த்திருப்பது. 36 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் அடக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இந்தச் சிறுகதை தொகுப்பில் சூடாமணி பெண்களின் நுட்பமான உணர்வுகளையும் எழுத்தில் கொண்டு வந்த விதம், அதற்குக் கையாண்ட சூழல், வார்த்தைகள் எல்லாம் என்னை கொள்ளையடித்தன. உதாரணத்துக்கு, ஏற்கெனவே பல குழந்தைகளின் தாயான அந்த கர்ப்பிணி, இது கர்ப்பமாக இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டே மருத்துவமனைக்குப் போவாள். ஆனால், அது கர்ப்பம் என்று உறுதிசெய்யப்படும். கணவர் கலைக்க விடமாட்டார். கணவனும், மனைவியும் மருத்துவமனையில் இருந்து பேருந்தில் வீடு வந்து சேர்வார்கள். வாசல் நுழைந்ததும், ‘அப்ப்பா..!’ என்ற பெருமூச்சுடன் தான் சுமந்து வந்த பைகளை கீழிறக்கி வைப்பான் கணவன். ஒரு பேருந்துப் பயணத்தில் இந்தப் பைகளைச் சுமப்பதற்கே முடியாமல் இருக்கும்போது, என் சுமைகள், வலிகள் எல்லாம் எப்படியிருக்கும் என்பதை, கணவரைப் பார்த்து ஒரு புன்னகையில் அந்தப் பெண் கேட்பாள். சூடாமணி, அந்தப் புன்னகையை ஒரு காவியம் என வர்ணித்து, நம்மையும் அதை உணரச் செய்வார்.

பெண் மனதின் துல்லியப் பதிவுகள்!

என் தோழி சித்ராவிடம், இப்படி இந்தச் சிறுகதைத் தொகுப்பில் நான் ரசித்து லயித்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டபோது, ‘எனக்கு தமிழ் படிக்க தெரியாது. இதையெல்லாம் நானும் வாய்மொழியாக அல்லாமல், எழுத்தாகவே அனுபவிக்க ஆசையாய் இருக்கிறதே...’ என்றார் ஆற்றாமை ஆர்வத்துடன். அப்போதுதான், சூடாமணி எழுத்தின் சுவை, மொழி தாண்டியும் பலரைச் சென்றடைய, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் எண்ணம் எனக்கு வந்தது. டெல்லி, ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டியின் டிரான்ஸலேஷன் பிரஸ் எடிட்டர் மினி கிருஷ்ணன், என் மொழிபெயர்ப்பு புத்தகத்தை பிரசுரிக்க முன்வந்தார். ‘நாகலிங்க மரம்’ சிறுகதைத் தொகுப்பின் 25 கதைகளை மொழிபெயர்த்த பின்னர், ‘நாம் சூடாமணி படைப்பின் ஜீவனை சிதையாமல் மொழிமாற்றம் செய்திருக்கிறோமா..?’ என்று மனம் அலையடித்தது. அப்போதுதான் சூடாமணி நேரடியாக ஆங்கிலத்தில் எழுதியிருந்த ‘ஷோபனாவின் வாழ்வு’ கதையைப் படிக்க நேர்ந்தது. அவரின் ஆங்கில மொழியும், என் மொழிபெயர்ப்பு மொழியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. அப்போதுதான் என் மனதுக்கு நிறைவு கிடைத்தது!’’ என்று இமைகள் மூடிச் சொல்லும் பிரபா தேவன், தன் மொழிபெயர்ப்பு புத்தகத்துக்கு `Seeing in the Dark' என்று பெயர் வைத்திருக்கிறார். சூடாமணியின் நினைவு தினமான செப்டம்பர் 13 அன்று, வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.

சட்டப் பெண்ணின் இலக்கியப் பேனா!

கே.அபிநயா  படங்கள்: க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism