Published:Updated:

ஆசிட் வீச்சால் சிதைந்தவர்களுக்கு அங்கீகாரம்!

சிலிர்க்கவைக்கும் `ஷிரோஸ் ஹேங்அவுட்’...

ஆசிட் வீச்சால் சிதைந்தவர்களுக்கு அங்கீகாரம்!

சிலிர்க்கவைக்கும் `ஷிரோஸ் ஹேங்அவுட்’...

Published:Updated:

ண் வாரிசுதான் வேண்டுமென்று, தன் இரண்டு பெண் பிள்ளைகள் மீதும், அவர்களைப் பெற்றெடுத்த

ஆசிட் வீச்சால் சிதைந்தவர்களுக்கு அங்கீகாரம்!

தன் மனைவி கீதா மீதும் அமிலத்தை ஊற்றிவிட்டு ஓடிவிட்டான் கீதாவின் கணவன். இதில் ஒரு குழந்தை பலியாக, கீதாவும் அவருடைய மகள் நீத்துவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ரீத்து, தன் வீட்டில் கடைக்குட்டி. உறவுகளுக் குள் சொத்துத் தகராறு நடந்தபோது, ரீத்துவை தாக்கினால் அவள் பெற்றோர் நிலைகுலைந்து போவார்கள் என்று நினைத்த அவளுடைய அத்தை, ரீத்துவின் மீது அமிலத்தை ஊற்றிவிட்டார்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது தன் மாற்றாந்தாயால் அமிலம் வீசப்பட்டவர் ரூபா.

- இப்படி, தாங்கள் எந்தத் தவறும் செய்யாமல், ஆசிட் வீச்சுக்கு ஆளாகி வாழ்க்கை முழுக்க வடுக்களையும், தீராத மனவலியையும் சுமந்துகொண்டிருக்கும் இந்தப் பெண்கள் இணைந்து தாஜ்மஹால் நகரான ஆக்ராவில் ‘ஷிரோஸ் ஹேங்அவுட்’ என்ற பெயரில் கஃபே ஒன்றை துவங்கியுள்ளனர். அமில வீச்சுக்கு எதிராகப் போராடும் ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பல ஆர்வலர்களும், ‘சனவ் ஃபவுண்டேஷ’னும் இணைந்து மலர்த்தியுள்ள முயற்சி இது. 

ஆசிட் வீச்சால் சிதைந்தவர்களுக்கு அங்கீகாரம்!

‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அலாக், ‘‘அமில வீச்சால் பாதிப்படைந்தோரின் வாழ்க்கை மூலையில் முடங்கிவிடக்கூடாது என்று, அவர்களது திறமையை வெளிப்படுத்தவும், சுயமாக சம்பாதிக்கவும் ஒரு களம் ஏற்படுத்தித் தர நினைத்தோம். ஏராளமான அறுவை சிகிச்சைகள் கடந்து ரணமான உடல்நிலையோடு போராடும் அவர்களைப் பொருளாதார ரீதியாகவும் போராட விடக்கூடாது, முகம் சிதைந்த ஒரே காரணத்துக்காக சமூகத்தில் பல்வேறு புறக்கணிப்புகளைச் சந்திக்கும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே இந்தக் கஃபேயின் நோக்கம். மேலும், அவர்களைப் போன்ற பிற பெண்களுக்கும் அது நம்பிக்கை ஏற்படுத்தும்; அவர்களை சமூகத்தின் மைய ஓட்டத்தோடு கலக்கவைக்க மக்கள் வாடிக்கையாளர்களாக அவர்களுக்கு உதவுவர் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.

கிரவுட் ஃபண்டிங் மூலமாக அதற்கு சுமார் 30 லட்சம் ரூபாய் வரை பணம் சேகரித்தோம். இங்கு கஃபே மட்டு மல்லாமல்... உள்ளேயே சிறிய நூலகம், பொட்டிக் உள்ளன. ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள், சாமான்ய மக்கள் என அவர்கள் அனைவரும், இவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை கிடைக்கச் செய்கிறார்கள். அடுத்த வருடம் இதேபோல ஐந்து கஃபேக்கள் ஆரம்பிக்கும் முயற்சியில் இருக்கிறோம். இது கிளைகளைப் பரப்புவதற்காக இல்லை, அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை கைதூக்கிவிட! அந்த வகையில், அமிலத்தால் உடலும் வாழ்வும் சிதைக்கப்பட்ட சோனியா என்ற பெண்ணுக்கு அழகு நிலையம் வைத்துக்கொடுக்கும் முயற்சியும் நிறைவேறும் தறுவாயில் உள்ளது!’’ என்றார் அக்கறையுடன்.

ஆசிட் வீச்சால் சிதைந்தவர்களுக்கு அங்கீகாரம்!

‘‘எனக்கு அப்போது 19 வயது. தீவிரமான வாலிபால் ரசிகை. எப்போதும் துறுதுறுவென்று இருப்பேன். தினமும் பள்ளி முடிந்து வந்ததும் நேராக கிரவுண்டுக்குச் செல்வேன். அன்று வீட்டை விட்டு இறங்கிய சிறிது நேரத்தில், நெருப்பைவிட கொடூரமான ஒன்று என் முகத்தில் வீசப்பட்டது. என் பெற்றோரை பழிவாங்குவதாக நினைத்து ஏன் என் வாழ்க்கையை நாசமாக்கினர்? அதில் என் பார்வை பறிபோனது. அந்த வேதனையைவிட, ஆசிட் விற்பனையைத் தடை செய்ய இன்னும் கோரிக்கை வைக்க வேண்டிய நிலையே இருப்பது பெரிய வேதனையாக இருக்கிறது!’’ எனும் ரீத்து, கஃபேயில் தன் கைவினைப் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளார்.

கஃபேயில் `பொட்டிக்’ வைத்திருக்கும் ரூபா, ‘‘என் அப்பாவை திருமணம் செய்து வந்ததில் இருந்தே என்னைக் கொலை செய்யும் முயற்சிகளில் இறங்கிவிட்டார் என் மாற்றாந்தாய். ஒருமுறை எனக்கு விஷமும் கொடுத்தார். கடைசியாக என் 15-வது வயதில், அமிலம் ஊற்றி என் முகத்தை மட்டுமல்ல, என் வாழ்க்கையையே பொசுக்கிவிட்டார். என் முகத்தில் ஏழு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. டிரெஸ் டிசைனர் ஆக வேண்டும் என்ற என் கனவு, இப்போது ‘ஷிரோஸ் ஹேங்அவுட்’ மூலமாக நிறைவேறியிருக்கிறது. நான் நினைத்தும் பாராத என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை இது!’’ - கண்கள் கசிகிறார் ரூபா.

ஆசிட் வீச்சால் சிதைந்தவர்களுக்கு அங்கீகாரம்!

‘‘மூன்று வயதுக் குழந்தையான என் மீதும், என் அம்மா, தங்கை மீதும் ஆசிட் வீச என் அப்பாவுக்கு எப்படி மனது வந்ததோ தெரியவில்லை. இந்த சிதைந்த முகத்துக்கு இப்போது அங்கீகாரம் கிடைப்பது, நெகிழ்ச்சியாக இருக்கிறது!’’ என்கிறார் நீத்து நெஞ்சில் கைவைத்து.

வாருங்கள் தோழிகளே... கைகோத்து பயணிப்போம்!

ந.ஆஷிகா