Published:Updated:

``மியூசிஷியன், அட்வகேட், டாக்டர்... நித்யஸ்ரீ வெங்கட்ரமணன்!’’

``மியூசிஷியன், அட்வகேட், டாக்டர்... நித்யஸ்ரீ வெங்கட்ரமணன்!’’

``மியூசிஷியன், அட்வகேட், டாக்டர்... நித்யஸ்ரீ வெங்கட்ரமணன்!’’

``மியூசிஷியன், அட்வகேட், டாக்டர்... நித்யஸ்ரீ வெங்கட்ரமணன்!’’

Published:Updated:

லகம் முழுக்க பார்த்து ரசித்த சோனி டி.வி-யின் பிரபல ‘இந்தியன் ஐடல் ஜூனியர் - சீஸன் -2’-வின் ரன்னர்... சென்னையைச் சேர்ந்த நித்யஸ்ரீ! விஜய் டி.வி- யின் ‘சூப்பர் சிங்கர்’, ‘டி - 20’, ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நமக்குப் பரிச்சயமான குரலுக்குச் சொந்தக் காரர். மும்பையில் சோனி டி.வி-யின் செலிப் ரேஷன் ஷூட்டில் இருந்தவரைப் பிடித்தோம்.

‘‘ ‘யார் இந்தப் போட்டியில வின் பண்ணுவாங்கனு நினைச்சீங்க?’, ‘உங்களுக்குப் பிடிச்ச ஜட்ஜ் யாரு?’னு டிவிஸ்ட் பண்ணி கேள்வி கேட்காதீங்கப்பா. மத்தபடி எல்லா கேள்விகளுக்கும் நித்யா சூப்பரா பதில் சொல்வா!’’ என்று இளமையும், இனிமையுமாகச் சொன்னவரிடம், ‘டோன்ட் வொர்ரி நித்யா!’ என்று சொல்லி பேட்டியை ஆரம்பித்தோம்.

``மியூசிஷியன், அட்வகேட், டாக்டர்... நித்யஸ்ரீ வெங்கட்ரமணன்!’’

“இந்தியன் ஐடல் ஜூனியர் போட்டிக்கான ஆடிஷன், ரொம்ப கஷ்டம். பெஸ்ட்லயும் பெஸ்டாதான் செலக்ட் பண்ணினாங்க. ‘சூப்பர் சிங்கர்’ போட்டியாளர்கள் பலரும் இதில் என்னோட கலந்துக்கிட்டாங்க. ஆனா, என்னால ஃபைனல் வரை வரமுடிஞ்சது, எனக்குப் பெரிய சந்தோஷம். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அனன்யா நந்தா வின்னர் ஆக, ரன்னர் பிளேஸை நானும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நாஹிட் ஆப்ரினும் பகிர்ந்துகிட்டோம்.

வின்னர் ஆக முடியலைன்னாலும், அதைப் பத்தி யோசிக்கவிடாம மொபைல், ஃபேஸ்புக்னு தெரிஞ்சவங்க, தெரியாதவங்க பலரும், ‘எங்களுக்கு நீதான் வின்னர்!’னு பாராட்டிக் கொண்டாடும்போது, அவ்வளவு நெகிழ்ச்சியா, நிறைவா இருக்கு. குறிப்பா, வேற மொழி மக்களும் என்னை அவங்களோட டார்லிங்கா பேசும்போது, பறக்கற மாதிரி இருக்கு. எங்க அப்பாவுக்கு அஸ்ஸாம், சண்டிகர், சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியானு எங்கெங்கயோ இருந்து போன் வந்துட்டே இருக்கு!’’ என்றவர், போட்டி அனுபவம் பற்றி சொன்னார்...

‘‘ ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி தந்த அனுபவம் தான், ‘என்ன பாட்டுன்னாலும் கொடுங்க, என்னால முடியும்!’னு நின்ன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் எனக்குக் கொடுத்தது. ஆனா, ஹிந்திதான் பெரிய சவாலா இருந்தது. மூணு மாசத்துல ஹிந்தி கத்துக்கிட்டேன். அர்த்தம் மட்டுமில்லாம ஒவ்வொரு பாட்டுக்கும் வீடியோ பார்த்து அந்த எமோஷன்ஸையும் புரிஞ்சுக்கிட்டுதான் பாடுவேன். அந்த ஃபீல், ஆக்‌ஷன், டோன் மாடுலேஷனுக்கு நிறைய உழைச்சிருக்கேன்.’’ என்ற நித்யயின் குடும்பமே, மியூஸிக் குடும்பம்!

‘‘என் அக்கா வைஜெயந்திஸ்ரீ வெங்கட்ரமணன், ‘சூப்பர் சிங்கர் - சீஸன் 4’-ல கலந்துக்கிட்டா. திரைப்படங்கள், ஆல்பங்களில் பாடியிருக்கா. அப்பா, அம்மாவும் நல்லா பாடுவாங்க. அப்பா `சி.பி.சி.எல்’லில் மேனேஜர்; 27 வருஷமா ‘ஸ்ரீ அண்ட் ஸ்ரீ ராகாஸ்’ மியூஸிக் ட்ரூப்பை வெற்றிகரமா நடத்திட்டு இருக்கார். அதுல நானும் அக்காவும்தான் மெயின் சிங்கர்ஸ்!’’ என்று குரலில் மட்டுமில்லாமல், பேச்சிலும் ஈர்க்கும் நித்யஸ்ரீ, ‘அவன் இவன்’ படத்தின் ‘ஒரு மலையோரம்’ பாட்டு உட்பட, இதுவரை 10-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களைப் பாடியிருக்கிறார். ‘‘இப்ப இரானியப் படத்துல ரஹ்மான் சாரோட வொர்க் பண்ணிட்டு இருக்கேன்!’’ என்றவரிடம், ‘வாட் நெக்ஸ்ட்?’ என்றோம்.

‘‘படிப்புதான்! இந்த வருஷம் நான் ப்ளஸ் டூ. காமர்ஸ் குரூப். இப்போ வரைக்கும் புக்கை திறக்கலை. பட், பிக்-அப் பண்ணிடுவேன். ஆறாவது படிக்கும்போதிலிருந்து, ஏதாவது ஒரு சேனல் போட்டியில் கலந்துட்டே இருக்கிறதால, கிளாஸ், எக்ஸாம் எல்லாம் இர்ரெகுலர் ஆயிருச்சு. ஆனாலும், நான் படிக்கிற சென்னை எஸ்.பி.ஓ.ஏ. ஸ்கூல் அண்ட் ஜூனியர் காலேஜ் ஒத்துழைப்பு கொடுக்கிறதால, சமாளிக்க முடிஞ்சது. என் கனவு... அட்வகேட் நித்யஸ்ரீ! அப்புறம்... கிளாஸிக்கல் மியூஸிக்ல டாக்டரேட் பண்ணணும். மியூசிஷியன், அட்வகேட், டாக்டர் நித்யஸ்ரீ வெங்கட்ரமணன். நல்லா இருக்குல?!’’ - இந்தியாவின் செல்லக் குரல் இனிமையாகக் கேட்கிறது!

கே.அபிநயா