Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:
கேபிள் கலாட்டா!

‘‘இது என்னோட பெர்சனல்!’’

விஜய் டி.வி-யின் பிரபல `விஜே' ரம்யா, தன் கணவரைப் பிரிந்ததுதான் மீடியாவின் ஹாட் டாக். ‘என் கல்யாண வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். நாங்கள் இருவரும் மனம் ஒத்துப் பிரிகிறோம். இந்த அறிவிப்பு, வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான். இது எங்கள் இரண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம். ப்ளீஸ் எங்கள் பிரைவஸியில் தலையிட வேண்டாம். இந்தப் பிரச்னையை இதோடு விட்டுவிடுங்கள். இனி என் கவனம் எல்லாம் கேரியரில்தான்!’ என்று தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ரம்யா.

‘ஓகே கண்மணி’ பட வாய்ப்புக்குப் பிறகு தொடர ஆரம்பித்திருக்கும் சினிமா வாய்ப்புகளுக்கும் ரெடியாகிவிட்டார்!

ஆல் தி பெஸ்ட் ரம்யா!

கேபிள் கலாட்டா!

இந்த லிஸ்ட் போதுமா..?

நிவேதிதா சந்திரசேகருக்கு தாய்மொழி தெலுங்கு, படித்தது ஆங்கில மீடியக் கல்வி. ஆனால், பாலிமர் டி.வி-யில் திருத்தமான தமிழில் தினச்செய்திகள் சொல்லும் செய்தி வாசிப்பாளர்!

‘‘சின்னப்பிள்ளையா இருக்கும்போது எனக்கு சுத்தமா தமிழ் வராது. அம்மாதான் எனக்கு தமிழ் டீச்சர். மொழியை மட்டுமில்லாம, அதில் ஆர்வத்தையும் கொடுத்தது அவங்கதான். அதனாலதான் தமிழில் செய்தி வாசிப்பாளர் அளவுக்கு வர முடிஞ்சிருக்கு. இன்னொரு நல்ல விஷயம் நோட் பண்ணினீங்களா? முன்னயெல்லாம் அதிகபட்சம் 10 நியூஸ் ரீடர்ஸ்தான் இருப்பாங்க. அவங்களும் சீனியர்ஸா இருப்பாங்க. இப்போ சேனலுக்கு சேனல் செய்திகளைச் சுடச்சுட வாசிக்கிறது இளசுகள்தான்... சூப்பர்ல! சரி, இனி நிவேதிதா பத்தி கொஞ்சம் பெர்சனல் பேசுவோம். சென்னைப் பொண்ணு. ஜெயின் காலேஜ்ல விஸ்காம் முடிச்சிட்டு, தந்தி டி.வி-யில நியூஸ் ரீடரானேன்... இப்போ பாலிமரில். ஈவன்ட் மேனேஜ்மென்ட் பிசினஸ்தான் அடுத்த திட்டம், ஈவன்ட் நிறைய பண்ணணும். விஸ்காம் பொண்ணுங்கிறதால சினிமாவில் கேமரா உமன் ஆகிற ஆசையும் இருக்கு!’’

நியூஸ் ரீடர், பிசினஸ், கேமரா... லிஸ்ட் அவ்வளவுதானா?!

கேபிள் கலாட்டா!

‘‘தமிழ் சீரியல்கள் இந்தியில் டப் ஆகணும்!’’

ஞாயிற்றுக்கிழமைகளை திகிலாக முடித்து வைக்கும் சன் டி.வி ‘பைரவி’ பேய் சீரியலின் நாயகி, நித்யா தாஸ்!

‘‘நான் கேரளா பொண்ணு. படிக்கும்போதே சினிமா வாய்ப்பு வர, 12 மலையாளப் படங்கள், தமிழில் ஒரு படம்னு பண்ணியாச்சு. இடையில் எகனாமிக்ஸ் டிகிரியையும் முடிச்சுட்டேன். அப்புறம்தான் ‘பைரவி’ வாய்ப்பு. பேய் சீரியல்னாலும், எனக்குப் பிடிச்ச ஸ்டைலில் டிரெஸ் பண்ணிக்கலாம்னு ஃப்ரீடம் கொடுத்துட்டாங்க. அதனால எல்லாம் என் செலக்‌ஷன்தான்... நல்லாயிருக்கா? எப்படா ஷூட்டிங் முடியும்னு காத்திருந்து, வீட்டுக்கு ஓடுவேன். ஏன்னா, அங்க ஒரு குட்டிப் பாப்பா, ‘அம்மா எப்போ வருவாங்க?’னு எனக்காக காத்துட்டு இருக்கும். யெஸ்... ஆவி, பேய்னு சுத்திட்டு இருக்கிற நித்யா, வீட்டில் பொறுப்பான அம்மா. கொஞ்சம் ஃப்ரீ டைம் கிடைச்சாலும், குடும்பத்தோட துபாய்க்கு பறந்துடுவோம். அங்க அக்கா வீட்டுல, ஜாலியோ ஜாலிதான்! அப்புறம் எனக்கு ஓர் ஆதங்கம்... இப்போ வட இந்திய சீரியல்களை தமிழ் சேனல்களில் டப் பண்றது அதிகமாயிருச்சு. அதை மக்களும் ரசிச்சுப் பார்க்கக் காரணம், அவங்களோட காஸ்ட்யூம், ஹெவி மேக்கப், நகைகள் எல்லாம்தான். அதனால தமிழ் சீரியல்களையும் நம்ம பாரம்பர்ய ஆடைகள், நகைகள், ஹைடெக் மேக்கப்னு சேஞ்ச் ஓவர் பண்ணணும்; நம்ம தென்னிந்திய சீரியல்கள் டப் ஆகி இந்திக்குப் போகணும்!’’

இது எப்டி இருக்கு?!

கேபிள் கலாட்டா!

‘‘கொஞ்சம் கலகலப்பு...கொஞ்சம் கலாய்ப்பு!’’

ந்தி டி.வி-யில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை மற்றும் இரவு 10.30 மணிக்கு ‘ஏழரை’ நிகழ்ச்சியை வழங்கி வருகிறார் ஆண்ட்ரூஸ்!

‘‘அதென்ன ‘ஏழரை?'னு தோணுமே? நியூஸை, நியூஸா கொடுக்காம, கொஞ்சம் கலகலப்பையும், கலாய்ப்பையும் கலந்துகட்டிக் கொடுத்தா இளசுகளையும் நியூஸ் பார்க்க வைக்கலாமேனு பிடிச்ச ஐடியாதான், ‘ஏழரை’. நமக்கு பொதுவாவே சமூக அக்கறை கொஞ்சம் உண்டு. ஆனா, அட்வைஸ் பண்ணாம அதை காமெடியா சொன்னா ஹிட்தான்! அதனாலதான் நிகழ்ச்சி 100 எபிசோட்ஸ் தாண்டி செமையா போயிட்டிருக்கு. ஊரு, உலகத்துல நடக்கிற விஷயங்களை மதுரை பாஷையில பஞ்சாயத்தைக் கூட்டி ரவுண்ட் கட்டி அடிக்கிறதுதான் நிகழ்ச்சியோட ப்ளஸ். அட, ஆமா ஆமா ஆமா... நான் மதுரைக்காரன்தான்!

ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே மேடை மேடையா கலக்கியாச்சு. கொஞ்சம் மியூஸிக்லயும் இன்ட்ரஸ்ட். லோக்கல் சேனல்ல `விஜே', நியூஸ் ரீடர். ரேடியோ மிர்ச்சியில ‘மதுரை வித் ஆண்ட்ரூஸ்’னு நாலரை வருஷம் ஒரு நிகழ்ச்சி. அப்புறம் விஜய் டி.வி ‘கலக்கப் போவது யாரு’. இப்ப ‘ஏழரை’. இதுக்கு இடையில கல்யாணம். மனைவி லிடியா, கொஞ்சம் அதிகமா படிச்சவங்க. ஸ்கூல் பிரின்ஸிபால். ஆஸ்டின்னு ஒரு குட்டிப் பையன் இருக்கான். அழகான குடும்பம். எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை... டன் டன் டன்!’’

தினமும் பத்தரைக்கு, ஏழரை..!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ150

வேண்டாத கருத்துகளை வெட்டுங்கள்!

``விஜய் டி.வி. `நீயா நானா?’ நல்ல விவாத நிகழ்ச்சிதான். ஆனால், சமீபத்தில் விவாதிக்கப்படும் சில தலைப்புகள் சொதப் பல்ஸ். உதாரணமாக, சில வாரங்களுக்கு முன் கிராமத்துப் பெண்களும், நகரத்துப் பெண்களும் என்கிற ரீதியில் அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்தனர். மதுவிலக்கு பற்றி பேசும்போது சில நகரத்துப் பெண்கள் தங்கள் தந்தை, அண்ணன் மது அருந்துவதை வரவேற்றது `பகீர்’ என்றது. `டாக் ஷோ’க்களில் இதுபோன்ற வேண்டாத கருத்துகளை சென்ஸார் செய்யலாமே!’’ என்று சமூக அக்கறையுடன் கூறுகிறார் மதுரையில் இருந்து என்.விஜயலட்சுமி.

பொன்னான நேரம்!

``பொதிகை தொலைக்காட்சியில் காலை 7.30 முதல் 7.45 மணி வரை ஒளிபரப்பாகும், ‘நாளும் ஒரு மூலிகை” என்னும் நிகழ்ச்சியைப் பார்க்கும் நேரம் பொன்னான நேரமாகும். சித்த மருத்துவர் சொக்கலிங்கம் தினமும் ஒரு மூலிகையை எடுத்துக்கொண்டு, அதன் மருத்துவக் குணங்கள் பற்றிக் கூறுவதோடு, மூலிகைகளை எவ்வாறெல்லாம் மருந்தாகப் பயன்படுத்தலாம் என செய்முறை விளக்கமும் தருவது கூடுதல் சிறப்பு’’ என்று புகழ்கிறார் சென்னை, சிட்லபாக்கத்தில் இருந்து சியாமளா ராஜகோபால்.

`கலகல குஷ்பு!’

``ஜீ தமிழில் வரும் `சிம்ப்ளி குஷ்பு’ நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது. சமீபத்திய நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன் மனம் திறந்து பேசினார்... கலப்படமில்லாத, களங்கமில்லாத உண்மை களை பட்டவர்த்தமான விவரித்து குஷ்புவுடன் கலந்துகொண்ட ரசிகர்களுடன் ஜாலியாக கமல் பேசியது சூப்பராக இருந்தது. குஷ்பு இருந்தாலே கலகலதான்... நிகழ்ச்சியை அவர் ஜாலியாக நகர்த்தும் விதம், மிகவும் அழகு!’’ என்று பாராட்டுகிறார் திருநெல்வேலி யில் இருந்து ஆர்.மீனாட்சி.