Published:Updated:

வரதட்சணை, மறுமணம், சம உரிமை...பாடம் சொல்லும் `நாடோடி'கள்!

வரதட்சணை, மறுமணம், சம உரிமை...பாடம் சொல்லும் `நாடோடி'கள்!

வரதட்சணை, மறுமணம், சம உரிமை...பாடம் சொல்லும் `நாடோடி'கள்!

வரதட்சணை, மறுமணம், சம உரிமை...பாடம் சொல்லும் `நாடோடி'கள்!

Published:Updated:

கால ஓட்டத்தில் தங்களின் நாடோடி இயல்பை இழந்து, குடியமர்வு சமூகமாக மாறத் தொடங்கியிருக்கும் நரிக்குறவர்களின் வாழ்வியலைப் பற்றிப் பேசுகிறது ‘நாடோடி’ என்னும் ஆவணப்படம். `தோன்றிய காலம்தொட்டு நாடோடிகளாக இருந்த நரிக்குறவர்களின் வாழ்க்கை, நாகரிக மாற்றத்தின் காரணமாக எப்படி மாறி வருகிறது; அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றனவா?' என்பது போன்ற கேள்விகளை, நம் மனதில் விதைக்கிறது இந்த ஆவணப்படம். நம்முடனே வாழ்ந்தாலும், நம்மிடம் இருந்து விலகியே கிடக்கும் அந்த மனிதர்களின் வரலாற்றை, பண்பாட்டை அசலாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் சிவ சித்திரைச் செல்வன், கவனிக்க வைக்கிறார்!

வரதட்சணை, மறுமணம், சம உரிமை...பாடம் சொல்லும் `நாடோடி'கள்!

‘‘வேட்டையாடுவதை தங்கள் தொழிலாக வைத்திருந்தாலும், நவநாகரிக கோமான்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் அவர்களிடம் வியந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. நரிக்குறவர்கள் வாழ்க்கை முறையில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு இங்கே மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார்கள். ‘விதவை’ என்பதே நரிக்குறவர்களின் வழக்கத்தில் இல்லை. ஆணோ, பெண்ணோ... எந்த வயதினராக இருந்தாலும் வாழ்க்கைத் துணையை இழக்கும்பட்சத்தில், மறுமணம் அனுமதிக்கப்படுகிறது. இருபாலருமே வேலை செய்வது கட்டாயமாக இருக்கிறது. ஆண்கள் நரி, முயல், பறவைகள் என வேட்டையாடும் வேலைகளைச் செய்கிறார்கள். மணி கோத்தல், கைவினைப் பொருட்கள் செய்தல் முதலான வேலைகளைப் பெண்கள் செய்கிறார்கள். இருபாலரும் சேர்ந்தே சமைக்கிறார்கள். இந்த சமூகத்தைப் பொறுத்தவரை வரதட்சணை வாங்கும் பழக்கம் இல்லை. மாறாக பெண் வீட்டாருக்கு சீதனம் கொடுத்தே மணப்பெண்ணை மணக்கிறார்கள்...’’

- கவனிக்க வேண்டிய, பெண் களுக்கு சம உரிமை கொடுக்கும் அவர்களின் பாரம்பர்யத்தைப் பட்டியலிட்ட சிவ சித்திரைச் செல்வன், திருவாரூர் மாவட்டம், அண்டகுடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். விகடன் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர்.

‘‘ஒரு கட்டத்தில் அரசாங்கம் இம்மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து, அங் கும் இங்குமாய் அலைய வேண் டாம் என அறிவுறுத்தியதால், பெரும்பாலும் ஓரிடத்திலேயே தங்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், வேட்டையாடுவதற்காகவும் விற் பனை செய்வதற்காகவும் வெளியூர் செல்கிறார்கள். உயிர்ச்சங்கிலிப்படி பார்த்தால்... ஓர் உயிரினம், தனக்குத் தேவையான இன்னோர் உயிரினத்தைச் சார்ந்துதான் இருக்கும். அதை இன்றளவும் பின்பற்றுவது இந்த மக்களே. அந்த வகையில் இவர்கள் நரியை வேட்டையாடியதால் நரிக்குறவர்கள் என அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. தற்போது வேட்டையாடுவதற்கான வசதிகள் இல்லாதவாறு காடுகள் அழிந்து வருவதுதான் சோகம்.

வரதட்சணை, மறுமணம், சம உரிமை...பாடம் சொல்லும் `நாடோடி'கள்!

வேட்டைதான் தொழில் என்றாலும், அதையும் உயிர்ச் சங்கிலியின் மரபு மாறாமல் பின்பற்றி வருகிறார்கள். அதாவது விலங்கு, பறவை இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் இவர்கள் வேட்டையாடுவதில்லை. தங்கள் இனவிருத்திக்காக அதிக அளவில் குழந்தை பெற்றுக்கொள்ளும் இம்மக்களிடம் பெண் சிசுக்கொலை என்பது அறவே இல்லை. கைவினைப்பொருட்கள் செய்வதில் வல்லவர்களான இவர்களிடத்தில் தொழில் நேர்த்தி இருக்கும். மரங்களினால் ஆன சீப்பு உட் பட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே உருவாக்கி விற்றுக்கொண்டிருந்த இம்மக்களிடம், பிளாஸ்டிக் சீப்பு, டப்பாக்கள், மணிகளை கொண்டு வந்து சேர்த்து விற்பனை செய்ய வைத்திருக்கிறது நாகரிக மாற்றம்.

பெண்கள் பூ வைக்கக் கூடாது, கால்களில் கொலுசு அணியக் கூடாது, இரவில் கணவனைப் பிரிந்து இருக்கக் கூடாது என்று முன்பிருந்த கட்டுப்பாடுகள் மெள்ள மாறிவருகின்றன. முன்பு காதல் திருமணம் நடைமுறையில் இல்லை. தற்போது காதல் திருமணங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இப்படியாக சில விஷயங்களில் நாகரிக மாற்றங்கள் அவர்களிடத்தில் தொற்றிக்கொள்ள ஆரம்பித் தாலும், அவையும்கூட, அவர் களின் பல்லாயிரக்கணக்கான ஆண்டு பாரம்பர்யத்தை இதுவரை முழுமையாக சிதைத்து விடவில்லை. ஆனால், காலம் இப்படியே அவர்களை விட்டு வைத்திருக்குமா?'' என்கிற கேள்வி யோடு முடித்தார் சிவ சித்திரைச் செல்வன்!

பொன்.விமலா  படங்கள்: ச.பிரசாந்த்