Published:Updated:

'கம்பேக்' மூவி... கலக்கும் 'ஐஸ்'!

'கம்பேக்' மூவி... கலக்கும் 'ஐஸ்'!

'கம்பேக்' மூவி... கலக்கும் 'ஐஸ்'!

'கம்பேக்' மூவி... கலக்கும் 'ஐஸ்'!

Published:Updated:

ரு பொண்ணு வயசுக்கு வந்ததும், அவகிட்ட `இங்க போகாத... அங்க போகாத'னு சொல்றீங்கள்ல... அதேபோல ஒரு பையனுக்கும் ஒரு பொண்ண எப்படி மதிக்கணும்னு சொல்லி கொடுத்திருந்தா, எனக்கு இந்த மாதிரி நடந்திருக்காதில்ல.

- யாரோ

ஒரு நாளின் ஏதாவது ஒரு தருணம், உங்கள் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போடும், அந்த ஒரு விஷயத்தை சரிசெய்ய தப்பான வழியில்கூட போகலாம் எனத்தோன்றும். ஆனால், அந்த தப்பான வழி ஒன்று மட்டும்தான் உங்கள் முன் இருக்கிறது என்றால், என்ன செய்வீர்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கம்பேக்' மூவி... கலக்கும் 'ஐஸ்'!

அனுராதா பல வழக்குகளில் வெற்றி கண்ட ஒரு வழக்கறிஞர். தன் மகள் சனாயாவுடன் தனியாக வசிக்கிறார். ஒரு நாள், திடீரென சனாயாவைக் காணவில்லை. யாராவது கடத்திவிட்டார்களா... எங்கும் தொலைந்து விட்டாளா எனப் பதறிப்போய் தேடுகிறார் அனுராதா. அப்போது, அவளின் மொபைலுக்கு `பிரைவேட் நம்பர்' என்றபடி ஓர் அழைப்பு. `உன் மகள் என்னிடம்தான் இருக்கிறாள். அவள் அப்படியே உன்னிடம் திரும்ப வேண்டும் என்றால், நான் சொல்லும்படி செய்' என்கிறது ஓர் ஆண் குரல். `ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மியாஸை, நீ வாதாடி, நிரபராதி என நிரூபித்து, விடுதலை செய்ய வைக்க வேண்டும்' என்பதுதான் அந்தக் குரல் இடும் வேலை.

`வேறு வழியில்லை... மகளுக்காக இதைச் செய்யத்தான் வேண்டும்' என புறப்படுகிறார் அனுராதா. இன்ஸ்பெக்டர் நண்பர் யோகானுடன், அந்த கேஸைப் பற்றி இன் அன்ட் அவுட் முழுக்கத் தெரிந்துகொள்ள, யார் யாரை சந்திக்க வேண்டுமோ எல்லோரையும் சந்திக்கிறார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயும் அதில் அடக்கம். அவனை விடுதலை செய்ய வைத்தாரா... மகள் திரும்பக் கிடைத்தாளா... என்பதை நெகிழ்ச்சியான ட்விஸ்ட்டுடன் சொல்கிறது படம்.

அனுராதாவாக ஐஸ்வர்யா, யோகன் கதாபாத்திரத்தில் இர்ஃபான் கான், சனாயாவாக `தெய்வத்திருமகள்' சாரா... இதுதான் ‘ஜஸ்பா’ என்ற பெயரில் வசூலில் அசுர ஹிட் அடித்திருக்கும் இந்திப் படம்.

பின்குறிப்பு: இது, `செவன் டேஸ்' என்ற கொரிய படத்தின் ரீமேக்.

படத்தின் ஹைலைட்... ஐஸ்வர்யா ராய் ரீ-என்ட்ரிதான். உண்மையாகவே இது செம ரீ-என்ட்ரி என்பது தியேட்டரில் அதிரும் கைதட்டல்கள் உணர வைக்கின்றன. மகளை தொலைத்துப் பதறுவது, கொல்லப்பட்ட பெண்ணின் தாயிடம் தகவல்களை சேகரிக்கும்போது நடுங்குவது என சுத்திப் போடலாம் ஐஸுக்கு.

'கம்பேக்' மூவி... கலக்கும் 'ஐஸ்'!

`படத்தில் இதை பண்ணியிருக்கவே வேண்டாம்' என பல விஷயங்களைச் சொன்னாலும். படத்தைப் பார்க்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, நீங்கள் நினைக்கும் அதே ஐஸ்வர்யா ராய். இன்னொன்று, பாலியல் குற்றங்களால் பாதிக்கப் பட்டவர்களின் உட்சபட்ச கோபம் என்ன செய்யும் என்று ஒரு சாம்பிள் காட்டியிருப்பது.

``எல்லோரும் இது என்னுடைய ரீ-என்ட்ரி மூவி, கம்பேக் மூவினு சொல்றாங்க. எனக்கு அப்படித் தோணலை. மகள் ஆராத்யா பிறந்ததும், அவள பார்த்துக்கறதுக்காக ஒரு பிரேக் எடுத்துக்கிட்டேன் அவ்வளவுதான். மத்தபடி இந்த ஐந்து வருடமும் ஒரு விளம்பரம் மூலமாவோ, சமூக வலைதளங்கள் மூலமாவோ மக்களோட இணைந்துதான் இருந்தேன். ‘ஜஸ்பா’வுக்காக சில நாட்கள் மகளை மிஸ் பண்ணவேண்டியதா இருந்தது. அவளும் என்ன மாதிரி சென்சிட்டிவான பொண்ணு. அதனால அடுத்த பட ஷூட்டிங்குக்கு அவளையும் அழைச்சிட்டு லண்டன் போறேன். என்னதான் நடிகைனாலும் குடும்பத்தையும் சரியா கவனிக்கணும்''என்று பரபரக்கிறார் ஓர் அம்மாவாக ஐஸ்வர்யா ராய்.

பா.ஜான்ஸன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism