Published:Updated:

பெருமைமிகு 18

பெருமைமிகு 18

பெருமைமிகு 18

பெருமைமிகு 18

Published:Updated:

மெய்எழுத்துக்கள் பதினெட்டு, புராணங்கள் பதினெட்டு என பலதரப்பட்ட பதினெட்டுகளின் சிறப்புகள் குறித்து

பெருமைமிகு 18

இந்த இதழில் ஆங்காங்கே விளக்கியிருக்கிறார் எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் பி.என்.பரசுராமன். 
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அபிநயங்கள்

பெருமைமிகு 18

ரதக்கலையில் இரண்டு கைகளாலும் பிடிக்க வேண்டிய அபிநயங்கள் 18: அஞ்சலி, புஷ்பாஞ்சலி, தாடனம், பதாகை, சங்கற்பம், டோளம், உற்சங்கம், உபசாரக்கை, அபய வரதம், மகரக்கை, கருடக்கை, பாரதிக்கை, கலகக்கை, சுப சோபனக்கை, பத்ம முகிழ்க்கை, மல்ல யுத்தக்கை, பதாகை சோத்திகம் மற்றும் கத்திரி சோத்திகம்.

ஆடிப்பெருக்கு

பெருமைமிகு 18

ம்பிகையின் மகிமையை விளக்கும் மத் தேவிபாகவதத்தில், இரண்டு காலங்களை யமனுடைய கோரைப்பற்கள் என வியாசர் கூறியிருக்கிறார். ஒன்று, கடும் காற்றடித்து மழை கொட்டத் துவங்கும் காலமான தட்சிணாயண காலம்; அடுத்தது, வெயில் வீசிக் கொளுத்தத் தொடங்கும் காலமான உத்தராயண காலம். வெயிலில்கூடத் தப்பிவிடலாம். ஆனால்... மழைக்காலத்தில், அதுவும் புதுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, அந்தப் புது நீர் பல வகையான நோய்களை வரவழைத்துவிடும். அதன் காரணமாகவே தட்சிணாயண காலத் தொடக்கமான ஆடி மாதத்தில் அம்பிகைக்கு (காப்பவள் தாய்தானே!) விசேஷமான வழிபாடுகள் நடக்கின்றன.

குறிப்பாக, பெருக்கெடுத்து ஓடிவரும் காவேரித் தாயை ஆடி 18-ல் வணங்கி வழிபட்டு, ‘அம்மா! எங்களுக்கு வெற்றியைத் தா! ஜெயத்தைத் (18) தா!’ என்று வேண்டி, ‘ஆடிப்பதினெட்டு’ எனக் கொண்டாடுகிறோம். நீர் இல்லாவிட்டால் உலகே இல்லையல்லவா?

படிக்கட்டுகள்

பெருமைமிகு 18

காயம், காற்று, தீ, நீர் மற்றும் மண்ணைக் குறிக்கும் 5 படிக்கட்டுகள்; ஞான இந்திரியங்களைக் குறிக்கும் 5 படிக்கட்டுகள்; கர்ம இந்திரியங்களைக் குறிக்கும் 5 படிக்கட்டுகள்; ஆணவம், கன்மம் மற்றும் மாயையைக் குறிக்கும் 3 படிக்கட்டுகள் என... இந்த 18 படிக்கட்டுகளையும் வென்று தாண்டிப் போனால்தான் ஐயப்பனை (இறை அனுபவத்தை) தரிசிக்க முடியும் என்பதையே அந்தப் 18 படிகளும் விளக்குகின்றன.

மஹாபாரதம்

பெருமைமிகு 18

‘மஹாபாரதம்’ நூலுக்கு அதன் ஆசிரியரான வியாசர் வைத்த பெயர்... ‘ஜெயம்’! காரணம், அந்நூலில் பல ஜெயங்கள், அதாவது பல 18-கள் உள்ளன.

மஹாபாரதத்தில் உள்ள பர்வங்கள் 18.

மஹாபாரத யுத்தம் நடந்த நாட்கள் 18.

யுத்தத்தில் ஈடுபட்ட சைன்யங்களின் எண்ணிக்கை 18 அக்குரோணி.

மஹாபாரதத்தில் உள்ள தலைசிறந்த ஞானநூலான ஸ்ரீமத் பகவத்கீதையின் அத்தியாயங்கள் 18

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்!

பெருமைமிகு 18

ளிமையான தமிழில் அரும்பெரும் கருத்துகளை எடுத்துச்சொல்லி நாம் வாழ வழிகாட்டும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 18: ஆசாரக்கோவை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, ஐந்திணையெழுபது, ஐந்திணையைம்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, கைந்நிலை, சிறுபஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, திரிகடுகம், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, முதுமொழிக்காஞ்சி மற்றும் திருக்குறள்.

சித்தர்கள்

பெருமைமிகு 18

அகத்தியர், போகர், கோரக்கர், கைலாசநாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன்கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமலமுனி, இடைக்காடர், புண்ணாக்கீசர், சுந்தரானந்தர், ரோமரிஷி மற்றும் பிரமமுனி (இதையே வேறொரு விதமாகவும் கூறுவது உண்டு.)

எழுத்துக்கள்

தமிழ் மொழியில் அமைந்துள்ள மெய்யெழுத்துக்கள் 18. இவை தாமே இயங்கா எழுத்துக்கள்; உயிர் ஏறுவதற்கு உடம்பு போல் இருப்பதால், இவை மெய் எழுத்துக்கள் எனப்பட்டன: க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

புராணங்கள்

நீதிநெறிகளையும் தர்மங்களையும் கதைகள் வாயிலாகச் சொல்லும் புராணங்கள் 18: மச்ச, மார்க்கண்டேய, பவிஷ்ய, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்ம வைவர்த்த, வராக, வாமன, வாயு, விஷ்ணு, அக்கினி, நாரத, பத்ம, லிங்க, கருட, கூர்ம மற்றும் ஸ்காந்தம்.
 

தொகுப்பு: வே.கிருஷ்ணவேணி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism