Published:Updated:

18 வயது... சாதிக்கும் மனது!

18 வயது... சாதிக்கும் மனது!

18 வயது... சாதிக்கும் மனது!

18 வயது... சாதிக்கும் மனது!

Published:Updated:

முதல் முயற்சி, முதல் வெற்றி, முதல் சம்பளம்... இதெல்லாம் ரொம்பவே ஸ்பெஷல். அப்படி 18-வயதில் தங்கள் தொழில் களத்தில் முதல் அடி எடுத்து வைத்த வெற்றியாளர்கள், அந்த கன்னி முயற்சியையும், அதைத் தொடர்ந்து துறையில் தங்களுக்கு ஏற்பட்ட முன்னேற்றத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

‘‘படிக்கிற வயசில் டீச்சர் ஆனேன்!’’

18 வயது... சாதிக்கும் மனது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘எங்க வீட்டுல நான் டெய்லரிங் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சப்போ, எனக்கு வயசு 18!’’

 - தையல்மெஷின்கள் ‘டகடகடக’ பேக்கிரவுண்டாக இசைக்க, பேச ஆரம்பித்தார் சென்னை, மடிப்பாக்கத்தில் உள்ள ‘ஹேமா பொட்டீக்ஸ் அண்ட் பிசினஸ் ஸ்கூல்’ நிறுவனர் லட்சுமி பிரபா.

 ‘‘சின்ன வயசுல இருந்தே ஆர்ட் அண்ட் கிராஃப்ட்டில் விருப்பம். பதின்ம வயசுலேயே டெய்லரிங் கத்துக்க ஆரம்பிச்சு, 16 வயசுல டெய்லரிங்ல எக்ஸ்பர்ட் ஆயிட்டேன். பத்தாம் வகுப்போட படிப்பு நின்னுபோக, 18 வயசில் ‘தையல் கிளாஸ் டீச்சர்’ ஆகிட்டேன். திருமணம், பொண்ணு, பையன்னு என் குழந்தைகள் பிறந்த பின்னும், டெய்லரிங் வகுப்புகளையும் தொடர்ந்துட்டு இருந்தேன். என் கையில் வருமானம் என்பது, எனக்கு பெரிய தன்னம்பிக்கை தந்தது.

இந்நிலையில, டிப்ளோமா படிச்சுட்டு இருந்த என் பையன் கேன்சர் பாதிப்பால் இறந்துபோனப்போ, அந்த

18 வயது... சாதிக்கும் மனது!

துயரத்தை ஏத்துக்க முடியாம வாழ்க்கை ரணமானது. அதில் இருந்து மீள, எதைப் பத்தியும் யோசிக்க நேரம் இல்லாத அளவுக்கு டெய்லரிங்கில் என்னை இன்னும் ஈடுபடுத்திக்கிட்டேன். ஹேண்ட் எம்ப்ராய்டரி, ஆரி வொர்க், மெஷின் எம்ப்ராய்டரி, ஆர்ட் அண்ட் கிராஃப்ட்னு நிறைய வகுப்புகள் விரிவு படுத்தினேன். என் ஸ்டூடன்ட்ஸ் இப்போ சென்னையில் திருவெற்றியூர், தி.நகர்னும், அமெரிக்காவுலயும் பல இடங்களில் பொட்டீக் வெச்சிருக்காங்க.

கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த, வறுமையில் வாடும் பெண்கள் பலருக்கு இலவச வகுப்புகள் எடுத்தேன். இன்னொரு பக்கம், என் டெய்லரிங் யூனிட் விரிவடைஞ்சது. இப்போ 44 வயசுல, ‘ஹேமா பொட்டீக்ஸ் அண்ட் பிசினஸ் ஸ்கூல்’ நிறுவனரா ஸ்திரமாயிட்டேன்.

நம்ம திறமை எப்பவும் நம்மகிட்ட இருக்கும் என்றாலும், இளமையில் அதை செயல்படுத்துறதுக்கான வேகம் அதிகமா இருக்கும். இளமையிலேயே பிகினரா களத்தில் இறங்கினா, வாழ்க்கையில் சீக்கிரமே வெற்றியாளர் ஆகிடலாம். ஆல் த பெஸ்ட்!’’

இளம் எனர்ஜி!

‘‘முதல் வேலை, ஒரு வளைகாப்பு நிகழ்ச்சி. முதல் சம்பளம், 700 ரூபாய். வயசு, 18!’’

18 வயது... சாதிக்கும் மனது!

- கண்கள் நிறையச் சிரிக்கிறார் அழகேஸ்வரி. சென்னை, ஆர்.ஏ.புரத் தில் உள்ள ‘ஸ்கெட்ச்ஷாட்ஸ் போட்டோ கிராஃபி’ உரிமையாளர். வயது 22. ‘‘கேமரா ஆர்வம்தான் எத்திராஜ் காலேஜ்ல பி.எஸ்ஸி., விஸ்காம் சேர வெச்சது. ஃபர்ஸ்ட் இயர் படிச்சப்போ, என் ஸ்கூல் டீச்சர் தன்னோட வளைகாப்புக்கு என்னை போட்டோஸ் எடுக்கச் சொன்னாங்க. ஆல்பத்தை கையில் கொடுத்தப்போ கிடைச்ச முதல் சம்பளம் 700 ரூபாய், வாழ்க்கையில் அடுத்தடுத்த அடிகளை நம்பிக்கையோட எடுத்து வைக்க பெரிய பூஸ்டா இருந்தது. இரண்டாம் வருடத்தில் இருந்தே வெளியில் புரொஃபஷனலா போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சேன்.

படிக்கும்போதே ‘ஆல் இண்டியா ரேடியோவில் ஈவன்ட் போட்டோகிராஃபரா சேர்ந்தவ, இப்போ வரைக்கும் அதை கன்டினியூ பண்ணிட்டு இருக்கேன். விஸ்காம் முடிச்ச கையோட இப்போ சைதாப்பேட்டை மதர் தெரசா யுனிவர்சிட்டியில எம்.ஏ., ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் படிச்சிட்டு இருக்கேன். இன்னொரு பக்கம் ரெயின்போ எஃப்.எம்-ல புரொடக்‌ஷன்  சாஃப்ட்வேர் எடிட்டிங், ஈவன்ட் போட்டோகிராஃபர்னு ரொம்ப பிஸி. எல்லாத்துக்கும் ஹைலைட்தான், ‘ஸ்கெட்ச்ஷாட்ஸ் போட்டோகிராஃபி’!

வெடிங் போட்டோகிராஃபிக்கு 5,000 ரூபாயிலிருந்து 80,000 ரூபாய் வாங்கலாம். வீடியோவும் வேணும், திருமணத்தில் எல்.இ.டி பொருத்தி புரஜெக்டர் ஸ்கிரீன் வேணும், நிச்சயத்துக்கு முன்னாடி அவுட்டோர் ஷூட் போகணும், கல்யாணத்துக்கு அப்புறம் அவுட்டோர் ஷூட் வேணும், திருமண வீடியோவில் பிளே பண்றதுக்கு எங்களுக்கு (மணமக்கள்) பிடிச்ச பாடல்களைத் தேர்வு செஞ்சுக்குறோம், சினிமாட்டிக் வெடிங் ஷூட் வேணும்... இப்படி கஸ்டமர் சொல்ற எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கறதுலதான் என்னோட வெற்றி அடங்கியிருக்கு.

ஆரம்பத்துல, ‘கூட்டத்துக்கு நடுவுல நீ கேமராவோட இங்கயும் அங்கயுமா அலையுறப்போ என் மரியாதை போகுது’னு திட்டின எங்கப்பா, இப்போ, ‘என் பொண்ணு படிக்கும்போதே ஸ்டுடியோ ஆரம்பிச்சுட்டா, இப்போ அவகிட்ட ரெண்டு பேர் வேலை பார்க்கிறாங்க. டெலிவிஷன் `ஆட் ஃபிலிம்' (விளம்பரப் படம்) எடுத்திருக்கா!’னு பெருமையா சொல்றார்.  

சின்ன வயசுல பெரிய விஷயத்தைப் பண்ணும்போது, ‘உனக்கு இது தேவையா?’, ‘இதைப்பத்தி என்ன தெரியும் உனக்கு?’னு நிறைய நெகட்டிவ் கமென்ட்கள் வரத்தான் செய்யும். அதில் ஜெயிச்சுட்டா, ‘சின்ன வயசுலயே எப்படி தீயா இருக்கா பாரு!’னு அதே வயசை சொல்லி பாராட்டும் கிடைக்கும். ஹேப்பி 18!’’ உற்சாகமாக வாழ்த்துகிறார் அழகேஸ்வரி.

வே.கிருஷ்ணவேணி  படங்கள்:கே.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism