Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

டிப்ஸ்... டிப்ஸ்...

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ100

Published:Updated:

செம்பருத்தி இலை, பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால், எரிச்சல் குறையும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிப்ஸ்... டிப்ஸ்...

லுமிச்சை ஊறுகாயுடன் வதக்கிய இஞ்சித்துண்டுகள் சிறிதளவு சேர்த்துக் கிளறினால், மணம் தூக்கலாக இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- எஸ்.சந்திரா, பூவிருந்தவல்லி

வா லட்டு செய்யும்போது, சிறிதளவு அவலை மிக்ஸியில் ரவை போல் பொடித்து, நெய்யில் வறுத்து சேர்த்து... கொஞ்சம் பால் பவுடரையும் கலந்து லட்டு பிடித்தால் சுவை அதிகரிக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஆர்.லலிதா நாகராஜன், தென் எலப்பாக்கம்

வா தோசை செய்யும் போது ரவையை வறுத்துக்கொண்டு, பிறகு கரைத்து வார்த்தால், கல்லில் ஒட்டாமல் வார்க்க வரும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஆர்.பிருந்தா ரமணி, பெங்களூரு

ணத்தக்காளிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பிளட் பிரஷர் குறையும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- இரா.ரெங்கசாமி, தேனி

துவரம்பருப்பு சீக்கிரமாக, நன்கு வேக வேண்டுமா? பருப்புடன் தேங்காய்த் துண்டை சேர்த்து வேகவிட்டால், விரைவில் வெந்துவிடும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்

தேங்காயைத் தண்ணீரில் முக்கியெடுத்த பின்பு உடைத் தால்,  சரிபாதியாக உடையும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஆர்.கயல்விழி, வடுகப்பட்டி

தோசை மாவு மிகுந்துவிட்டால், அதில் சிறிது கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் உப்பு போட்டு சூப்பரான பக்கோடா செய்யலாம்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- பி.சுமதி, சேலம்

மிளகாய், கருணைக் கிழங்கு ஆகியவற்றை கையாளும்போது கைவிரல்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். அப்போது சிறிதளவு வெல்லக்கரைசலில் கைகளை நனைத்தால், நிவாரணம் கிடைக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- அ.ருக்மணி, சின்னமனூர்

ம்பளிப் பூச்சி கடித்த இடத்தில் வெற்றிலையை அழுத்தித் தேய்த்தால்... அரிப்பு நீங்கும்; வலியும் குறையும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- கௌசியா அஜீஸ், நெய்வேலி

னிப்புகள் சாப்பிட்ட பிறகு வெந்நீரில் சுக்குப் பொடி, தேன் கலந்து சாப்பிட்டால்... சீக்கிரம் ஜீரணமாகும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஆர்.பத்மப்ரியா, சேலம்

துணிகளில் கறைபட்டுவிட்டால் கவலைப்பட வேண்டாம். சிறிது மண்ணெண்ணெயை கறைபடிந்த இடத்தில் வைத்து, பிரஷ் வைத்து தேய்த்தால், கடினமான கறைகூட போய்விடும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஜெய கல்யாணி, திருநெல்வேலி

திமதுரம், கசகசா, பால் சேர்த்து அரைத்து, வாரம் 2 முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து, குளித்துவந்தால் நரை முடி குறையும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- அ.ச.நாராயண், பாளையங்கோட்டை

கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா போன்றவை செய்யும்போது, கூடவே கொஞ்சம் மில்க்மெய்டு ஊற்றிக் கிளறினால்... அல்வா நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி

வாழைப்பூ, முருங்கைக் கீரை இரண்டையும் சேர்த்து வதக்கி, ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் குடல் புண், வாய் புண் குணமாக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு

க்கோடா செய்யும்போது முழுவதும் கடலை மாவில் செய்யாமல், நாலில் ஒரு பங்கு பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருப்பதுடன், அதிக சத்தும் கிடைக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

- பகவதி பிரவீன் சங்கர், சென்னை-91

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism