க்வில்லிங் கிளாஸ்..!

க்வில்லிங்... பேப்பர் கொண்டு கலைப்பொருட்களை உருவாக்குவது. எந்த வடிவத்திலும் வளைக்க முடிகிற கலர் கலர் பேப்பர்களைக் கொண்டு கம்மல், செயின், க்ரீட்டிங் கார்டு, கிஃப்ட் பாக்ஸ் என்று நினைத்ததை

குயிக் லாபம் தரும் தொடர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வடிவமாக மாற்ற முடியும். லைட் வெயிட்டாக இருக்கும் இந்த வகை கம்மல், செயின்கள் இளைய தலைமுறையை மட்டுமல்லாமல், முதிய தலைமுறையையும் வசீகரித்ததுதான் இதன்

குயிக் லாபம் தரும் தொடர்!

சக்சஸ். அந்த சக்சஸ் ஃபார்முலாவைப் பயன்படுத்தி வீட்டிலேயே எளிதாக செய்து பிசினஸ் ஆக்க முடியும் என்பதை ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு டிசைனோடு உங்களுக்கு கற்றுத் தர வருகிறார்கள் எக்ஸ்பர்ட்டுகள்.

குயிக் லாபம் தரும் தொடர்!

‘‘நான் எம்.பி.ஏ பட்டதாரி. இப்போ என் பிசினஸ், கிராஃப்ட். வீட்டில் இருந்தே மாசம் 25,000 ரூபாய் சம்பாதிக் கிறேன்!’’

- சென்னை, கூடு வாஞ்சேரியில் உள்ள ‘ஏ.ஏ.ஏ. கிரியேஷன்ஸ்' உரிமையாளர் ஐஸ்வர்யா தந்த அறிமுகம் இது!

‘‘ஆர்ட் கேலரி விழாவில் தான், முதல் முதலா க்வில்லிங் நகைகளைப் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது.

குயிக் லாபம் தரும் தொடர்!

நெட் டில் தேடி நானே அதைச் செய்யக் கத்துக்கிட்டேன். ஆன் லைனில் அதை பிசினஸா பண்ணலாம்னு என் கணவர் ஐடியா தர, ‘ஸ்நாப் டீல்’-ல் அப்லோடு பண்ணினேன். மறுநாளே குவிய ஆரம்பிச்ச ஆர்டர்கள், இப்போ வரை என்னை பிஸியா வெச்சிருக்கு!’’ என்று ஆர்வத்தைத் தூண்டிய ஐஸ்வர்யா, செயலில் இறங்கினார்...

க்வில்லிங் அடுக்கு ஜிமிக்கி!

தேவையானவை: சக்ரி  - 2, இயர் ஹுக் - 2, ஸ்டோன் பால் - 2, ஐ பின் - 2, பால் செயின் (டார்க் ப்ளூ, லைட் ப்ளூ) - 15 மீட்டர், மூன்று எம்.எம். ஒரு வரிசையுடைய ஸ்டோன் செயின் - 1 மீட்டர், லூப் பின் 4, ஐந்து எம்.எம். க்வில்லிங் பேப்பர்... டார்க் ப்ளூ  - 8, லைட் ப்ளூ - 10, மெட்டல் பால் - 10, பூ வடிவ கேப் - 4, கம்ப்ரஸர், க்வில்லிங் ஊசி, ஜிமிக்கி மோல்ட் டிரே, கட்டர், பிளேயர், ஃபெவிக்கால், கத்தரிக்கோல், வார்னிஷ் சிறிது.

செய்முறை:

படம் 1: அடுக்கு ஜிமிக்கியில் மேலே உள்ள பெரிய ஜிமிக்கியை முதலில் செய்யலாம். ஐந்து லைட் ப்ளூ கலர் க்வில்லிங் பேப்பர்களை எடுத்து, அனைத்து பேப்பரின் முனைகளிலும் ஃபெவிக்கால் தடவி ஒன்றோடு ஒன்று ஒட்டி பேப்பரின் நீளத்தை அதிகரித்துக் கொள்ளவும்.

படம் 2: ஃபெவிக்கால் காய்ந்ததும், க்வில்லிங் ஊசிக்கு நடுவில் இருக்கும் இடைவெளியில் க்வில்லிங் பேப்பரைவிட்டு இறுக்கமாக வட்ட வடிவில் சுற்றிக்கொள்ளவும்.

படம் 3: அதனை ஊசியில் இருந்து கழற்றி, இறுதி முனையை ஃபெவிக்காலால் ஒட்டிவிடவும்.

படம் 4: ஒட்டிய க்வில்லிங் பேப்பரை கம்ப்ரஸரால் ஒருமுறை நன்கு அழுத்திவிடவும். 

படம் 5: செய்துவைத்துள்ள க்வில்லிங் ரவுண்டை, க்வில்லிங் மோல்ட் போர்டில் ஆறாம் நம்பர் குமிழில் வைத்து ஒருமுறை அழுத்தி எடுத்தால், ஜிமிக்கிக்கான வடிவம் கிடைக்கும்.

படம் 6: க்வில்லிங் பேப்பர் உருவாமல் இருக்க, ஜிமிக்கியின் குழிந்த பகுதியின் உட்புறம் ஃபெவிக்கால் தடவி 10 நிமிடம் காயவிடவும்.

குயிக் லாபம் தரும் தொடர்!

படம் 7: அடுத்ததாக, ஜிமிக்கியின் இரண்டாவது அடுக்கு செய்ய நான்கு டார்க் ப்ளூ கலர் க்வில்லிங் பேப்பரை எடுத்து, முன் செய்தது போலவே செய்துகொள்ளவும்.

படம் 8: செய்துவைத்துள்ள க்வில்லிங் ரவுண்டை, க்வில்லிங் மோல்ட் போர்டில் நான்காம் நம்பர் குமிழில் வைத்து ஒருமுறை அழுத்தி எடுத்து, உட்புறம் ஃபெவிக்கால் தடவி காயவிடவும்.

படம் 9: இரண்டு ஜிமிக்கிகளும் காய்ந்ததும் ஜிமிக்கியின் கீழ்ப்பகுதி யில் சிறிது இடம் விட்டு ஃபெவிக்கால் தடவி சிங்கிள் ஸ்டோன் செயின் ஒட்டிக் காயவிடவும்.

படம் 10: காய்ந்ததும், டார்க் ப்ளூ கலர் ஜிமிக்கியில் லைட் ப்ளூ கலர் பால் செயினையும், லைட் ப்ளூ கலர் ஜிமிக்கியில் டார்க் ப்ளூ கலர் பால் செயினையும், ஏற்கெனவே ஒட்டியுள்ள ஸ்டோன் செயினுக்குக் கீழே ஃபெவிக்காலால் பார்டர் போல ஒட்டவும்.

படம் 11: ஐ பின்னில் ஒரு மெட்டல் பால், ஸ்டோன் பால், மெட்டல் பால் என்ற வரிசையில் கோத்து, மீதமுள்ள கம்பியை கட்டரால் வெட்டிவிடவும்.

படம் 12: ஐ பின்னை பிளேயரால் வளைத்து, அதனுள் லூப் பின் கோத்துக்கொண்டு, பிறகு நன்கு அழுத்திவிடவும்.

படம் 13: லூப் பின்னில் முதலில் சின்ன ஜிமிக்கியை கோத்து, அதன் மேல் பூ வடிவ கேப் மற்றும் ஒரு மெட்டல் பால் கோத்து, மீதமுள்ள கம்பியை கட் செய்து வளைத்துவிடவும்.

குயிக் லாபம் தரும் தொடர்!

படம் 14: வளைத்துவிட்ட பகுதியில் மற்றொரு லூப் பின் மாட்டி, அழுத்தி டைட் செய்யவும்.

படம் 15: லூப் பின்னில் பெரிய சைஸ் ஜிமிக்கி கோத்து அதனுடன் பூ வடிவ கேப், ஸ்டோன் பால், சக்ரி என்று ஒன்றான பின் ஒன்றாக கோத்து மீதமுள்ள கம்பியை கட் செய்து வளைத்துவிடவும்.

படம் 16: வளைந்துள்ள பகுதி யில் இயர் ஹூக் மாட்டி டைட் செய்து, அதன் மீது வார்னிஷ் அடித்து காய விட்டால், அழகான அடுக்கு ஜிமிக்கி ரெடி!

``இப்போது இந்த ஜிமிக்கிவின் உத்தேச விலை சொல்லுங்கள் பார்க்கலாம்... 300 ரூபாய்! கற்பனைத் திறனில் நெக்லஸ், வளையல் என்று செய்து, வெற்றிப்பாதையில் நடைபோட வாழ்த்துகள்!’’

- இனிமையாக கூறினார் ஐஸ்வர்யா.

- க்வில்லிங் கிளாஸ் தொடரும்...

சு.சூர்யா கோமதி படங்கள்:எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism