Published:Updated:

ஃபேஷன் பெண்!

டிரெஸ் டிசைனிங் 18 சாதனைப் பெண்கள்

ஃபேஷன் பெண்!

டிரெஸ் டிசைனிங் 18 சாதனைப் பெண்கள்

Published:Updated:

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான அவள் விகடன் 18-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை

ஃபேஷன் பெண்!

முன்னிட்டு... ஆர்வத்தையும் உழைப்பையும் அணிகலனாகக் கொண்டு ஜொலித்துவரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 சாதனைப் பெண்கள் பற்றிய சிறப்புத் தகவல்களின் அணிவகுப்பு இங்கே ஆரம்பம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவ்யா மாதவன்... பிரபல மலையாள நடிகை. இவர் சில தமிழ்ப்படங்களில் நடித்ததன் மூலம் நமக்கும் பரிச்சயமானவர். ‘வாட்ஸ்அப்..?’ என்றால், கமிட் ஆகியிருக்கும் ஒரு புதுப்படத்தின் பெயரைச் சொல்வார் என்று எதிர்பார்த்தால்... இல்லை. காவ்யா இப்போது பிசினஸ் உமன்! ‘லக்‌ஷயா’ என்ற பெண்களுக்கான ஃபேஷன் ஷாப்பின் உரிமையாளர்!

ஃபேஷன் பெண்!

‘‘பொதுவாவே எனக்கு ஃபேஷன்லயும், ஷாப்பிங்லயும் இன்ட்ரஸ்ட் உண்டு. ஆனா, அது எல்லா பெண்களுக்குமே இருக்கிற ஆர்வம்தான். அதை மட்டும் வெச்சு பிசினஸில் இறங்கிட முடியாதே? அதனால, நிறைய ஸ்பாட் விசிட்ஸ், பிசினஸ் வொர்க்‌ஷாப்ஸ், ஆஸ்திரேலியாவில் ஃபேஷன் டிசைனரா இருக்கிற அண்ணனோட வழிகாட்டல், பிசினஸ்மேனான அப்பா தந்த  கைடுலைன் எச்சரிக்கைகள், அம்மாவும், அண்ணன் மனைவி ரியாவும் தந்த சப்போர்ட்... இவற்றால் நான் ஃபைன் டியூன் ஆயிட்டேன்னு எனக்கே நம்பிக்கை வந்ததும், கடந்த ஜூன் மாதம் ‘லக்‌ஷயா’வை கொச்சியில் ஆரம்பிச்சதோட, அதன் ஆன்லைன் ஸ்டோரையும் ஆரம்பிச்சேன்.

டிசைன்ஸும் சூப்பரா இருக்கணும், விலையும் எல்லோரும் வாங்கும் விதமா இருக்கணும் என்பதுதான் என் பிசினஸ் கொள்கை. இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்காவில் அட்டகாசமான டிசைன்களை கொண்டு வந்தோம். கேரளாவோட பாரம்பர்ய ஓணம் புடவையில் கலம்காரி டிசைன்களை அட்டாச் பண்ணினோம். ஒரு புடவையைத் தயார் செய்ய ரெண்டு அல்லது மூணு வாரம் வரைகூட தேவைப்பட்டுச்சு. ஆனா, அந்தளவுக்கு விற்பனையும் ஹிட். இப்படி ஒவ்வொரு டிசைன்லயும் அதிக அக்கறை எடுத்துச் செய்றோம். இப்போ என் ஷாப்புக்கான ஃபேஸ்புக் பேஜில் நானே மாடலாகி விதவிதமான ஆடைகள் அணிந்து நிற்க, லைக்ஸ் குவியுது.

நான் ஒரு பிசினஸ் ஆரம்பிப்பேன், அதுக்கு நானே மாடலாவேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. இப்போ என் வெப்சைட்ல இரண்டாயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆடைகள், எக்கச்சக்க டிசைன்களில் அணிவகுக்குது. க்ளாத்திங், அக்சஸரீஸ்னு எல்லாம் கொண்டு வந்தாச்சு. நல்ல ரீச். எங்க டிசைனர்ஸ் தவிர, மற்ற டிசைனர்களை இணைச்சுக்கிற ஐடியாவும் இருக்கு. சொல்லப்போனா இப்போ என்னோட டிரெஸ்ஸிங் ஸ்டைல் இன்னும் மெருகேறிடுச்சு.

நான் முன்பைவிட ஃப்ரெஷ்ஷா தெரியுறேன்னு எல்லோரும் சொல்றாங்க. என் தொழில் வெற்றி எனக்குத் தந்த தன்னம் பிக்கையும் அதுக்குக் காரணம்!’’

- துள்ளலுடன் சொல்கிறார் கண்ணழகி காவ்யா மாதவன்!

 ம.பிரியதர்ஷினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism