Published:Updated:

கட்டடக்கலை கில்லி!

ஆர்க்கிடெக்ட் 18 சாதனைப் பெண்கள்

கட்டடக்கலை கில்லி!

ஆர்க்கிடெக்ட் 18 சாதனைப் பெண்கள்

Published:Updated:

பொன்னி, சென்னையின் பிரபல ஆர்க்கிடெக்ட். கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், தங்கநகைக் கடைகள்,

கட்டடக்கலை கில்லி!

ஷோரூம்கள், அப்பார்ட்மென்ட்டுகள், அரசுக் கட்டடங்கள், நூலகங்கள், ரிசார்ட்கள், வில்லாக்கள், மருத்துவமனைகள், உணவகங்கள் என எல்லா வகையான கட்டட வேலைகளிலும் லேண்ட்ஸ்கேப், இன்டீரியர், எக்ஸ்டீரியர் என்று கலக்கிக்கொண்டிருப்பவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்டடக்கலை கில்லி!

‘‘சென்னைப் பெண் நான். அப்பா ரயில்வேயில் சிவில் இன்ஜினீயர். சர்ச் பார்க்ல பள்ளிப் படிப்பை முடிச்சுட்டு, திருச்சி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.ஆர்க் படிக்க  விண்ணப்பிச்சேன். ‘இதுவரை இந்த கோர்ஸ்ல பெண்கள் சேர்ந்ததே இல்ல, நீ வேற கோர்ஸ் மாறிக்கோ’னு சொன்னார் பிரின்சிபால். நான் சண்டை போட்டு, ஸீட் வாங்கினேன். அந்தக் கல்லூரி வரலாற்றில் பி.ஆர்க் சேர்ந்த முதல் பெண் நான்தான். வகுப்பில் நான் ஒரே பெண்ணா இருக்கிறதில் ஆரம்பிச்சது என் போராட்ட குணமும், முன்னேறணும் என்ற வெறியும்.

என் கணவர் ஆஸ்கர், காலேஜ் சீனியர். மேற்படிப்புக்கு ரெண்டு பேரும் அமெரிக்கா போனோம். படிப்பை முடிச்சதோட ரெண்டு பேருக்கும் அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தில் வேலை. எங்க நீண்ட நாள் காதலை, 25 வருஷத்துக்கு முன்ன திருமணத்தில் முடிச்சோம். நியூயார்க்ல வாழ்க்கை செம பரபரப்பா போச்சு. இடையிடையே ஆர்க்கிடெக்ட் போட்டிகள், புராஜெக்ட்டுகளில் ஜோடியா பரிசுகளை அள்ளிட்டு வந்தோம்.

96-ல் சென்னையில் செட்டில் ஆனோம். ‘ஓ.சி.ஐ ஆர்க்கிடெக்ட்ஸ்’ என்கிற பெயரில் எங்க ஆர்க்கிடெக்ட் கம்பெனியை ஆரம்பிச்சோம். கல்லூரிகள், ஷோரூம்கள், வில்லாக்கள்னு எல்லா வகையான கட்டடங்களிலும் அசத்தினோம். ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சத்யம் டெக்னாலஜி பார்க் கட்டியதுக்காக ‘எக்சலன்ஸ் இன் பில்ட் என்விரான்மென்ட்’ அவார்டை அப்துல் கலாம் சார் கையால ரெண்டு பேரும் வாங்கினது, பெரிய பெருமை. இதுவரை தம்பதியா இணைந்து 64 உள்நாட்டு, வெளிநாட்டு ஆர்க்கிடெக்ட் அவார்டுகளை வசப்படுத்தியிருக்கோம்.

போன வருஷம் என்.ஐ.டி தன்னோட 60-வது வருஷத்தைக் கொண்டாடியது. அப்போ அவங்க தங்கள் கல்லூரியின் பெருமையா நினைக்கிற 20 முன்னாள் மாணவர்களுக்கு விருது கொடுத்தாங்க. அந்த 20 பேரில் நான் மட்டும்தான் பெண். பல வருஷங்களுக்கு முன்ன சண்டை போட்டு ஸீட் வாங்கின பெண்ணை, அவங்களே கைதட்டிக் கொண்டாடின அந்தத் தருணம்... ரொம்ப சிலிர்ப்பா இருந்துச்சு. இப்போ பல கல்லூரிகளின் தீசிஸ் ரெவ்யூ போர்டு, அட்வைஸரி போர்டில் பதவி வகிக்கிறேன். என் ஒரே மகன் ராகுல், இறுதியாண்டு ஆர்க்கிடெக்ட் படிக்கிறான்.

இந்த உலகத்துல சுயத்தோட இருக்கணும்னா, படிப்பு அவசியம். எந்த ஆண் மகனுக்கும் அநாவசியமா பணிஞ்சு போகாத, தலைநிமிர்ந்து நிற்கும் தன்னம்பிக்கையை அந்தப் படிப்பு கொடுக்கும்!’’

- பென்சில் கோடுகளில் கட்டடங்கள் எழுப்பும் பொன்னியின் புன்னகை, மிடுக்கு!

ம.பிரியதர்ஷினி  படங்கள்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism