Published:Updated:

ஆர்ட்@அக்கறை!

‘தி பெயின்ட் பாக்ஸ்’ டீம்

ஆர்ட்@அக்கறை!

‘தி பெயின்ட் பாக்ஸ்’ டீம்

Published:Updated:

ஜஸ்ட் லிஸன்..!

சென்னை, மெரினா அருகில் உள்ள ஒரு சுவர் அது. சிறுநீர் கழிப்பதற்கும், எச்சில் துப்புவதற்குமே அது கட்டப்பட்டது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ‘ஜென்டில்மென்’களால் அசுத்தம் செய்யப்பட்ட சுவர். திடீரென்று ஒருநாள் அதில் க்யூட் பெயின்ட்டிங்குகள் பூத்திருக்க, வழக்கம்போல ‘கடமை’யைச் செய்ய அதன் முன் நின்றபோது ஜெர்க் ஆகி, ‘சே... வேண்டாம்!’ என்று ரிவர்ஸ் எடுத்தது கூட்டம். இதுதான் ‘தி பெயின்ட் பாக்ஸ்’ டீமின் வெற்றி. சென்னையில் அழுக்கேறி இருந்த பல சுவர்களை தங்கள் ஆர்ட் மூலம் அழகாக்கி காப்பாற்றிக்கொண்டிருக்கும் யூத் அமைப்பு!

யாரது ‘தி பெயின்ட் பாக்ஸ்’ டீம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேஜஸ், நர்மதா, ஹரி! தேஜஸும் நர்மதாவும் அக்கா தம்பி. ஹரி, இவர்களின் நண்பர்.

‘‘2013-ம் வருஷம், கல்லூரிப் படிப்பை முடிச்சு வேலையில் சேர்ந்தப்போ ‘தி பெயின்ட் பாக்ஸ்’ ஆரம்பிச்சோம். முதல் ஆர்ட், எங்க வீட்டு காம்பவுண்ட் சுவரில்தான். அடுத்தா, பெசன்ட் நகர் பீச். தொடர்ந்து, மந்தைவெளி, எக்மோர்னு, கதீட்ரல் ரோடு, ஹார்ட்டிகல்ச்சர் (தோட்டக்கலை) சொசைட்டினு கிட்டத்தட்ட 20 இடங்களில் சுவர்களைக் காப்பாத்திருக்கோம்’’

-தேஜஸ் ஸ்டேட்மென்ட்.

ஆர்ட்@அக்கறை!

பண உதவி..?!

‘‘பெயின்ட் பண்ற சுவருக்கு உரிமையாளர்கிட்ட பெர்மிஷன் கேட்கும்போது, சந்தோஷமா சம்மதிப்பாங்க. ஆனாலும் எங்க பாக்கெட்டில் இருந்துதான் செலவழிக்கிறோம். தவிர, சில தனியார் நிறுவனங்களுக்கும் வால் ஆர்ட் செய்திருக்கோம். எங்க சர்வீஸை ஃபேஸ்புக், டிவிட்டர்ல பார்த்துட்டு ‘நல்ல காரியம் பண்றீங்க, நாங்களும் சேர்ந்துக்குறோம்’னு இப்போ 20 வாலன்டியர்ஸ் எங்ககூட இணைஞ்சிருக்காங்க. ஃப்ரீயா இருக்கும்போது பங்களிப்பு தர்ற ‘வாக் இன்ஸ்’ம் சிலர் இருக்காங்க. புரொஃபஷனல்ஸ்லாம் இல்ல, எல்லோரும் ஆர்வத்துல வரையுறவங்கதான்!’’

பெயின்ட்டிங் சொல்லும் மெசேஜ்?

‘‘மெசேஜ் சொல்றதில் நம்பிக்கை இல்லை. எந்த மாற்றமும் உள்ளிருந்து வரணும். மெரினாவில், ‘சேவ் தி பீச்’ என்ற கேம்பைனை, ‘கோஸ்டல் க்ளீன் அப் குரூப்’ என்ற குழுவுடன் இணைந்து பண்ணினோம். மீன், ஆக்டோபஸ், நண்டு போன்ற கடல்வாழ் உயிரினங்கள் எல்லாம் மனுஷன் கொட்டுற குப்பையால எப்படி செத்துப் போகுது என்பதை படக்கதை வடிவில் பண்ணலாம்னு ஒரு கான்செப்ட். அதில் குழந்தைகளும் வந்து பங்கெடுத்துக்கிறாங்க.’’

இந்த முயற்சியோட ரிசல்ட்..?

‘‘முன்ன மூக்கைப் பிடிச்சுட்டு நடந்து போன சுவர்கள்கிட்ட, இப்போ ஸ்கூல் விட்டு வரும் சின்னக் குழந்தைகள் எல்லாம் நின்னு, பொம்மை ஓவியங்களோட பேசுறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கும். சமீபத்தில் மலையாள மனோரமா இதழில் பருவநிலை பற்றிய ஒரு
கட்டுரையில், காயிதே மில்லத் காலேஜில் நாங்க பண்ணின பெயின்ட்டிங்கை பயன்படுத்தியிருந்தாங்க. இந்தச் சின்னச் சின்ன மாற்றங்களுக்காக... எவ்வளவு பெரிய சுவர் இருக்குதோ, அவ்வளவு பெரிய சித்திரம் வரையலாம்!’’

வண்ணமும் எண்ணமுமாகப் பேசும் ‘தி பெயின்ட் பாக்ஸ்’ டீமுக்கு விஷஸ்!

 - மு.சித்தார்த்
படங்கள்:  மா.பி.சித்தார்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism