Published:Updated:

அசத்தும் ஐ.ஏ.எஸ்!

சிவில் சர்வீஸ்18 சாதனைப் பெண்கள்

அசத்தும் ஐ.ஏ.எஸ்!

சிவில் சர்வீஸ்18 சாதனைப் பெண்கள்

Published:Updated:

சாந்த ஷீலா நாயர்... அரசு உயர் பதவிகளில் பெண்களின் வரவுக்கு முன்னோடி; வழிகாட்டி; நம்பிக்கைத்

அசத்தும் ஐ.ஏ.எஸ்!

தூண்! 37 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் பணியில், 25-க்கும் மேற்பட்ட துறைகளில் சாதனை, பணி ஓய்வுக்குப் பின்னும் தொடரும் இயக்கமாக தற்போது மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர். செயலில் வீரம் காட்டும் பெண்மணிக்கு குரலில் மென்மை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘திருவனந்தபுரம் சொந்த ஊர். கனவைத் துரத்தி, 73-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றேன். திண்டுக்கல்லில் சப்-கலெக்டராக ஏழு வருடப் பணி. அரசு நிகழ்ச்சிகளுக்காக திண்டுக்கல் வந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு தனி அலுவலராக நியமிக்கப்பட்டேன். என் சின்சியாரிட்டியை பார்த்து பாராட்டிச் சென்றார் அவர்.

அசத்தும் ஐ.ஏ.எஸ்!

1980-ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராகப் பொறுப்பேற்றேன். பெண் கலெக்டர் என்பது அப்போது அரிதினும் அரிது. திருச்சி மாவட்டத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றபோது, என் திறமை கவனிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டராக, மதிய உணவுத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக அந்நாளின் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பாராட்டு பெற்றேன். 2001-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வாரியச் செயலாளராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை நானும் என் துறை சார்ந்த அலுவலர்களும் வெற்றித் திட்டமாக்கினோம். 2004-ம் ஆண்டு சுனாமியின்போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா என்னை உடனடியாக நாகப்பட்டினத்துக்கு அனுப்பினார். நிவாரப்பணிகளை திறம்படச் செய்தேன் என்பதைவிட, அக்கறையாக செய்தேன். அதைக் கவனித்த இலங்கை அரசும் சுனாமி மீட்புப் பணிக்கு என்னை அழைத்தது.

நான் ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநராக இருந்தபோது எடுத்த பல நடவடிக்கைகள் இன்று நல்ல பலன் கொடுக்கிறது. பெண்களின் முன்னேற்றத்துக்கு கைகொடுக்கும் மகளிர் சுயஉதவிக்குழுத் திட்டம், சானிட்டரி நாப்கின் தயாரிப்பு திட்டம், கணினி, ஓட்டுநர் பயிற்சி என பல திட்டங்களை வெற்றிகரமாக செயல் படுத்தினேன். குறிப்பாக, நான் தமிழக உள்துறை செயலாளராக இருந்தபோது, ஆண்கள் மட்டுமே பணிபுரிந்த தீயணைப்புத் துறையை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையாக மாற்றவும், அதில் பெண்களை பணியில் சேர்க்கவும் கடுமையான முயற்சிகளை எடுத்தேன்.

2011-ம் ஆண்டு ஓய்வுபெற்ற பிறகும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக திட்டக்குழு துணைத் தலைவராக பணியாற்றுகிறேன். 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மாநில சமச்சீர் வளர்ச்சித் திட்டத்தை’ செயல்படுத்தி, 105 பின்தங்கிய கிராம ஒன்றியங்களில் 350-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். 

பெண்கள் தங்களுக்குத் தடையாக எதையுமே கருத வேண்டாம். உண்மையில், பெண்கள் தாங்கள் உணராத தங்களின் உண்மையான பலத்துக்குத் தடையாகும் தகுதி இங்கு யாருக்கும், எதற்கும் இல்லை. இலக்காக சிகரங்களையும், எல்லையாக வானத்தையும் கொண்டு கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்!''

- கம்பீரமாகச் சொல்கிறார் சாந்த ஷீலா நாயர்!

கு.ஆனந்தராஜ்  படங்கள்: ரா.வருண் பிரசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism