Published:Updated:

மல்டி டாஸ்கிங் மேடம்!

ஊடகம் 18 சாதனைப் பெண்கள்

மல்டி டாஸ்கிங் மேடம்!

ஊடகம் 18 சாதனைப் பெண்கள்

Published:Updated:

க்ஷ்மி ராமகிருஷ்ணன்... நடிகை, இயக்குநர், சின்னத்திரை தொகுப்பாளர் என எல்லா தளங்களிலும் தன்னை

மல்டி டாஸ்கிங் மேடம்!

நிரூபித்தவர். `ஃபார்ட்டி ப்ளஸ்’... சோர்ந்து போகும் வயதல்ல, சாதனைக்குரிய வயதே என தன் வெற்றியால் அழுந்தப் பதிந்தவர். இவர் இயக்கிய ‘ஆரோகணம்’ படம், பெண் சமூகம் குறித்த இவரின் ஆழ்ந்த புரிதலுக்கும், அக்கறைக்கும் சல்யூட் சான்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மல்டி டாஸ்கிங் மேடம்!

‘‘கேரளாதான் பூர்வீகம். வீட்டில் ஐந்து பெண்கள், ஒரு பையன். நான் கடைசிப் பெண். சென்னையில் ஃபேஷன் டிசைனிங் படிக்கும் போதே திருமணம். தொடர்ந்து டிகிரி முடிச்சு, சின்ன பொட்டீக் ஷாப் ஆரம்பிச்சேன். கணவர் ராமகிருஷ்ணன் அமெரிக்கா, சிங்கப்பூர், மஸ்கட்னு வேலை பார்த்தார். மஸ்கட்டில் என் மூணு பெண் குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு கூடவே, குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்க்கும் என் ‘வெக்கேஷன் கேம்ப்’பில் ஐந்தாயிரம் குழந்தைகள் அட்மிஷனோட பரபரனு இயங்கிட்டு இருந்தேன். பணம் நிறைய சம்பாதிச்சாலும்,  எஜுகேஷன் சிஸ்டம் எனக்கு திருப்தியா இல்ல. கணவர் அங்கேயே வேலை பார்க்க, குழந்தைகளோட எதிர்காலத் துக்காக, மாமியார் வீட்டுக்கு வந்துட்டேன்.

கோவையில் எங்களோட பெரிய வீட்டில் நிறைய மலையாளப்பட ஷூட்டிங் நடக்கும். அதைப் பார்த்து எனக்கும் சினிமா ஆர்வம் வர, ஆறு குறும்படங்கள் இயக்கினேன். அதை கவனிச்ச மலையாளத் திரையுலகின் பெரிய எழுத்தாளரும் இயக்குநருமான லோகிததாஸ், 2006-ல் வெளியான ‘சக்கரமுத்து’ மலையாளப் படத்தில் என்னை நடிக்க வெச்சார். நிறைய பாராட்டுகள். டப்பிங் கொடுக்காததால கேரள மாநில அரசின் விருது நழுவிப்போச்சு.

மலையாளத்துல மூணு படங்கள் நடிச்சதும், பொண்ணுங்களோட மேற்படிப்புக்காக சென்னையில் குடியேறினேன். கணவரும் பணி மாற்றல் வாங்கி சென்னை வந்தார். கொஞ்ச நாள் சினிமாவுக்கு பிரேக். ‘பிரிவோம் சந்திப்போம்’ படம் மூலமா ரீ-என்ட்ரி. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தினு 45-க்கும் அதிகமான படங்களில் நடிச்சிருக்கேன். உதவி இயக்குநர் அனுபவமில்லாம, நேரடியா ‘ஆரோகணம்’ படத்தில் இயக்குநரா களம் இறங்கினேன். திரைப்படங்களில் நடிக்கும்போது, தொழில்நுட்பங்களைக் கத்துக் கிட்டது, இயக்குநர் பணிக்கு ரொம்பவே கைகொடுத்துச்சு. பெண் மனதின் நுட்பமான உணர்வுகளைப் பேசிய அந்தப் படத்துக்கு, ‘நீ நூறு படங்கள் எடுக்கணும்!’னு சொன்ன கே.பாலச்சந்தர் சார் வார்த்தைகள் உட்பட, மரியாதையான வரவேற்பு.  இப்போ நான்காவது பட வேலைகளை ஆரம்பிச்சிருக்கேன்.

40 வயதானாலே பெண்கள் ஏதோ வாழ்க் கையை நகர்த்துற மனநிலைக்கு வந்துடுறாங்க. உண்மையில், வாழ்க்கையைக் கொண்டாட... தன்னை நிரூபிக்க வயது ஒரு தடையல்ல.

30 வயதானாலே பெண்கள் ஓரங்கட்டப்படுற திரைத்துறையிலேயே, மூணு குழந்தைகளுக்கு அம்மாவா பிரவேசித்து, ‘யார் இந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்?’னு கேட்க வெச்சேன்னா, அதுக்கு திறமையும், அர்ப்பணிப்பும்தான் காரணம். 36 வயதினிலே மட்டுமில்ல... 46, 56 வயதிலும் வாழ்வோம் ருசித்து!’’

- ரசித்துச் சொல்கிறார், லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

கு.ஆனந்தராஜ்   படம்:ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism