Published:Updated:

மேக்கப் ஆர்ட்டிஸ்ட்!

அழகுக் கலை 18 சாதனைப் பெண்கள்

மேக்கப் ஆர்ட்டிஸ்ட்!

அழகுக் கலை 18 சாதனைப் பெண்கள்

Published:Updated:

ஸ்ரீதேவி ரமேஷ்... சென்னை, அண்ணாநகரில் உள்ள ‘ஸ்ரீ  பிரைடல் மேக்கப் ஸ்டுடியோ’வின் உரிமையாளர்.

மேக்கப் ஆர்ட்டிஸ்ட்!

கமர்ஷியல் விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகள், மாடல்கள், ஃபேஷன்  ஷோக்களின் ராம்ப் வாக் மாடல்கள், ஃபேஷன் போட்டோகிராஃபர்களின் போர்ட்ஃபோலியோ மற்றும் ஃபேஷன் போட்டோ ஷூட்கள்... எல்லா ஏரியாக்களிலும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்கும் ‘ஆல்வேஸ் பிஸி’ பெண்! இந்த வருடம் ‘தி ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ்’ வழங்கிய ‘பாப்புலர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் - 2015’ அவார்டு வாங்கியுள்ள உற்சாகம் ஸ்ரீதேவியின் குரலில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேக்கப் ஆர்ட்டிஸ்ட்!

‘‘சின்ன வயசுல இருந்தே என்னை நான் நல்லா க்ரூம் பண்ணிப்பேன். என் டீன் ஏஜ்ல, பார்க்கிறவங்க எல்லோரும் எங்கிட்ட மேக்கப் டிப்ஸ் கேட்கிற அளவுக்கு அதில் இஷ்டமா இருந்தாலும், படிச்சது ஹோம் சயின்ஸ். கல்யாணம் முடிஞ்சதும் மஸ்கட்ல செட்டில் ஆகிட்டேன். என்னோட கணவர், ‘ஆர்வம் இருந்தா ஏதாச்சும் கோர்ஸ் பண்ணு’னு சொன்னதும், துபாய்ல இருக்கும் லண்டன் காலேஜ் ஆஃப் மேக்கப்ல சந்தோஷமா சேர்ந்துட்டேன். சென்னைக்கு ரிட்டர்ன் ஆனதும், ‘ஸ்ரீபிரைடல் மேக்கப் ஸ்டுடியோ’வின் திறப்பு விழா.

பிசினஸ் நல்லா போயிட்டிருந்தாலும். இன்னும் ஏதாச்சும் சாதிக்கணுங்கிற ஆர்வத்துல, எல்லா மேகசின்லயும் வரும் ஃபேஷன் ஷோ பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் எங்கெல்லாம் ஃபேஷன் ஷோ நடக்குதுன்னு தேடிப் போய் அறிமுகப்படுத்திக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் என்னோட கேரியர் ஹை ஸ்பீடுல போக ஆரம்பிச்சுது. ஆகமொத்தம், 15 வருஷம் அழகுத் துறையில் அனுபவம் எனக்கு.

ஐஸ்வர்யா ராய், கேத்ரினா கைஃப், தீபிகா படுகோன் போன்ற டாப் பாலிவுட் ஆர்ட்டிஸ்ட்களின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஓஜஸ் ரஜானி மற்றும் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் - 6’ ஹாலிவுட் படத்தின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உஸ்மா யாகூப்... இவங்க ரெண்டு பேருமே என்னோட குரு. இவங்ககிட்ட மேக்கப் கத்துக்கிட்டேன். 

குறிப்பா, என்னோட மேக்கப்ல ஸ்பெஷல் டச் ஆன ஐமேக்கப்ல, உஸ்மாவின் தாக்கம் இருக்கும். அதேபோல, ஹேர் டிரெஸ்ஸிங்கில் லண்டனைச் சேர்ந்த இன்டர்நேஷனல் ஹேர் டிரெஸ்ஸர் பாட்ரிக் கேமரான், என் ஆதர்சம். விரைவில் லண்டனில் ஒரு பியூட்டி கோர்ஸ் படிக்கவிருக்கேன்.

உலகத்துல எந்தெந்த நாட்டுக்கு எல்லாம் டிராவல் பண்றேனோ, அங்கயெல்லாம் ஒரு ஷார்ட் டேர்ம் பியூட்டி கோர்ஸ் முடிச்சிடுவேன். எந்த ஃபீல்டுலயும் நிலைச்சு நிக்க, அப்டேட் முக்கியம்தானே?!’’

- கேள்வியிலேயே தன் சக்சஸ் ஃபார்முலாவைச் சொல்லிவிட்டார், ஸ்ரீதேவி!

இந்துலேகா.சி   படம்:எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism