Published:Updated:

விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

Published:Updated:
விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

‘எப்பப் பார்த்தாலும் மொபைல்லயும் கம்ப்யூட்டர்லயும் மாத்தி மாத்தி கேம்ஸ் ஆடுறது... இதெல்லாம் எங்க உருப்படப் போகுது'ன்னு பேரன்ட்ஸ்கிட்ட திட்டு வாங்குறீங்களா? அப்படினா, உங்க மம்மி-டாடிகிட்ட மறக்காம சொல்லுங்க... கேம்ஸ் விளையாடவே’ கேம் டெக்னாலஜி’னு ஒரு கோர்ஸ் இருக்குன்னு. ஆனா, பாருங்க... நம்ம தமிழகத்திலேயே ’கேம் டெக்னாலஜி கோர்ஸ்’-ஐ சொல்லிக் கொடுக்க ஒரே ஒரு காலேஜ்தான் இருக்கு. அது சென்னை, ‘ஐ கேட்’ கல்லூரி. அந்த காலேஜோட கேம் டெக்னாலஜி ஹெச்.ஓ.டி. பாலப்பிரியா, இந்த கோர்ஸ் படிக்கறதுக்கான ஈஸி ஸ்டெப்ஸ் பத்தி சொல்லித் தராங்க இங்கே!

விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

மூன்று வருட கோர்ஸான பி.எஸ்ஸி, கேம் டெக்னாலஜி கோர்ஸில் சேர்வதற்கான தகுதி, இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி. பத்தாவது முடித்து டிப்ளோமா படிப்புகள் முடித்தவர்களுக்கும் வாய்ப்புண்டு. வயது வரம்பு இல்லை.

 ண்டுதோறும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரம் (அதாவது, மாணவர்கள் ப்ளஸ்

விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

டூ படித்துக்கொண்டிருக்கும்போதே), எங்கள் கல்லூரி வளாகத்தில் கோர்ஸுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். தொடர்ந்து, அம்மாதத்தின் இறுதியில் மாணவர்களின் கேம் டெக்னாலஜி ஆர்வம் மற்றும் கற்பனைத்திறனை சோதிக்கும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடனடியாக அட்மிஷன். பன்னிரண்டாம் வகுப்பை முடித்ததும் தேர்ச்சி சான்றிதழைக் கொடுத்து கல்லூரிக்கு வரலாம். ஒரு செமஸ்டருக்கு ரூபாய் 45,000 முதல் கட்டணம்.

விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

கோர்ஸில் பிராக்டிகல் வகுப்புகளே அதிகம். கேம் டெக்னாலஜியில் மொபைல் கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் என மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் பயிற்சி வழங்கப்படும். கேமில் ரியாலிட்டியை உருவாக்குவது, கேரக்டர்களை இயக்குவது கோடிங்குடன் கற்றுத்தரப்படும். இந்தத் துறையில் கேம் டெவலபிங், கேம் டிசைனிங் ஆகிய உட்பிரிவுகள் அடக்கம்.

விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

கேம் டெவலப்மென்ட்டில் நன்கு பயிற்சி பெற்ற பின், மாணவர்கள் கோர்ஸ் பீரியடில் தாங்களே உருவாக்கிய புதிய கேம்ஸ்களை சமூக வலைதளங்களில் அப்லோடு செய்து, படிக்கும்போதே சம்பாதிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதோடு கோர்ஸ் முடித்தவர்களில் 90% மாணவர்களுக்கு பெரிய நிறுவங்களில் வேலைவாய்ப்புகள் உண்டு. ஆரம்ப சம்பளமே ரூபாய் 30 ஆயிரம் பெறும் வாய்ப்புகள் உண்டு. சொந்தமாகவும் தொழில் தொடங்கலாம்.

ஸ்டெப் 5

கேம் டெவலப்பிங்கில் ஒரு வருட எம்.எஸ்ஸி முதுகலை படிப்பு முடிப்பவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. வயது வரம்பில்லாத இந்த கோர்ஸ் முடித்து, பெண்கள் திருமணத்துக்குப் பிறகு வீட்டில் இருந்தே கேம்ஸ்களை உருவாக்கி, நிறுவனங்களுக்குத் தருவதன் மூலம் சம்பாதிக்க முடியும்.

Completed!

ஸ்மார்ட் போனில் பார்க்கலாம்!

விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

இதன் வீடியோவைப் பார்க்க, உங்கள் ஸ்மார்ட்போனில் QR Code reader என்னும் இலவச ஆப்ஸை முதலில் டவுன்லோடு செய்யுங்கள். பிறகு உங்கள் செல்போன் மூலம்  QR code-ஐ ஸ்கேன் செய்து புதுவித அனுபவத்தை உணருங்கள்.

விளையாடி... விளையாடிப் படிக்கலாம்!

இனி, கேம் விளையாடறவங்கள பார்த்து, `இது என்ன சின்னப் பிள்ளத்தனாமல்ல இருக்கு?'ன்னு யாராச்சும் சொல்வீங்க?!

சு.சூர்யா கோமதி
 படங்கள்: ரா.சதானந்த், மீ.நிவேதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism