Published:Updated:

சான்ஸே இல்ல!

காலேஜ் சினி ரிவியூ

சான்ஸே இல்ல!

காலேஜ் சினி ரிவியூ

Published:Updated:

‘தல்வார்’... பாலிவுட்டின் சமீபத்திய சென்சேஷனல் க்ரைம் த்ரில்லர். மேக்னா குல்ஸார் இயக்கத்தில், இர்ஃபான்கான் உள்ளிட்ட, பாலிவுட் உச்சங்கள் நடித்த படம். 2008-ம் ஆண்டு, இந்தியாவையே உலுக்கிய இரட்டைக் கொலை வழக்கின் திரைப்பதிவு!

டெல்லியை ஒட்டிக்கொண்டிருக்கும் நொய்டா நகரைச் சேர்ந்த ராஜேஷ் தல்வார்- நுபு தல்வார் மருத்துவ தம்பதியின் ஒரே மகள் ஆருஷி, தன் படுக்கையில் கொலையுண்டு கிடந்தாள். மொட்டைமாடியில் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜின் சடலம். இந்த மர்மக் கொலைகள் பற்றிய வழக்கின் விசாரணைச் செய்திகள், நேஷனல் நியூஸ் ஆக, ஆருஷிக்கும் ஹேம்ராஜுக்கும் இருந்த தொடர்பால், பெற்றோரே கொலைகளைச் செய்தனர் என மருத்துவ தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்.

சான்ஸே இல்ல!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வழக்கின் உறைய வைக்கும் பின்னணி, மீடியாக்கள் இந்த வழக்கை சுடச்சுட செய்தியாக்கி பார்த்த வியாபாரம், சி.பி.ஐ விசாரணைக்கு மாறிய பிறகு வழக்கில் ஏற்பட்ட திடுக் திருப்பங்கள், உண்மையில் கொலைகளைச் செய்தது யார் என்று விடைதெரியாமலே நீளும் கேள்விகள்... இவையெல்லாம்தான் ‘தல்வார்’!

படம் குறித்த கல்லூரி மாணவர்கள், மாணவிகள் சிலரின் மனப்பதிவு இங்கே!

இந்திரா டூபே: ‘‘இது ஆருஷி பெற்றோர் மேல சாஃப்ட் கார்னரோட எடுக்கப்பட்ட படம். தங்களோட 14 வயசுப் பொண்ணை வேலைக்காரனோட தப்பா பார்த்த ஒரு தந்தை, உணர்ச்சி வேகத்துல செஞ்ச கொலைனு தீர்ப்பே எழுதப்பட்ட வழக்கில், வேலைக்காரனும் அவனோட ஃப்ரெண்ட்ஸும் ஆருஷியைக் கொலை செஞ்சதா இன்னொரு கோணத்தைப் படத்துல காட்டியிருக்காங்க. சி.பி.ஐ அமைப்பில் இருக்கறவங்களோட ஈகோ அரசியல், ஒட்டுமொத்த வழக்கையும் தலைகீழா புரட்டிப் போடுறதை படத்தில் காட்டியிருக்கும் விதம், அதிர்ச்சி!’’

உமேஷ்: ‘‘வடஇந்திய மீடியாக்கள், தங்களோட டி.ஆர்.பி. ரேட்டிங்குக்காக எந்தளவுக்குக் கதைகளா எழுதி பரபரப்பு கிளப்பினாங்கனு, சாட்டையடியா சொல்லுது படம். இந்த சமுதாயத்தில் உண்மையைக் கண்டடையறதில் உள்ள நெடுந்தொலைவையும், நம்மைச் சுத்தி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிற க்ரைம் உலகம் பத்தின அதிர்வையும் திகிலோட உணர வைக்குது.’’

ப்ரிதா: ‘‘சி.பி.ஐ அதிகாரி இர்ஃபான் கான், தன் மனைவி விவாகரத்துக் கேட்டு மனு செஞ்சிருக்குற நேரத்துல இந்தக் கேஸ் இன்வெஸ்டிகேஷனை ஆரம்பிச்சாலும், பெர்சனல் மனநிலையை வேலையில் காட்டாத அந்தக் கேரக்டரின் சமநிலை சூப்பர்.’’

சான்ஸே இல்ல!

மெஹூல்: ‘‘லோக்கல் இன்ஸ்பெக்டர், விசாரணையை ஒழுங்கா நடத்தாததுதான், இந்தக் கொலை வழக்கு இப்பவரைக்கும் குழப்பமா இருக்குறதுக்குக் காரணமே! அந்த இன்ஸ்பெக்டரை தனி ரூம்ல வெச்சு இர்ஃபான் கான் லத்தியால் பின்புறத்துல அடிச்சுக்கிட்டே, ‘நீ மட்டும் ஒழுங்கா விசாரிச்சிருந்தா நாங்கள்லாம் நிம்மதியா சாப்பிட்டு வாழ்ந்திருப்போம்!’னு சொல்றது, செம ப்ளாக் ஹியூமர்.”

ப்ரீத்தி: ‘‘வழக்கை தொடர்ந்து ஃபாலோ பண்றதால ஒரு விஷயத்தை சொல்றேன்... ஆருஷியோட அப்பாவுக்கு வேறொரு பொண்ணோட தொடர்பு இருந்தது ஹேம்ராஜுக்குத் தெரியும். தன்னோட வீக்னஸை சாதகமாக்கி தன் பொண்ணை தன் வயசுல உள்ள ஒருத்தன் நாசமாக்கிட்டானேனு எழுந்த ஆத்திரம்தான் இந்த இரட்டைக் கொலைக்கு மூலகாரணம்னு அழுத்தமா இப்போ வரைக்கும் சொல்லப்படுது. ஆனா, இந்த சந்தேகத்தைப் படத்தில் அணுகவே இல்லை.’’

நிதின்: ‘‘ஆருஷியின் பெற்றோர் அப்பாவிகள்னு நிஜ கேஸை முதல்ல விசாரிச்ச அருண்குமார் என்ற சி.பி.ஐ அதிகாரி, இப்போ வரை ஊடகங்கள்ல போல்டா சொல்றார். கௌரவக்கொலை செய்றவங்க, அதை அதே வறட்டுக்கௌரவத்தோட ஒப்புக்கத்தான் முன்வருவாங்க, மறுக்க மாட்டாங்க. இப்போ டெல்லி சிறையில் இருக்கும் ஆருஷியோட பெற்றோர், கோர்ட்டில் மேல்முறையீடு செஞ்சிருக்காங்க. இந்த நிலையில, இந்தப் படம் நீதித்துறை நோக்கி எழுப்புற கேள்விகள், அழுத்தமானது!’’

 பொன்.விமலா,
எஸ்.கே.பிரேம்குமார்,
படங்கள்:  எம்.உசேன்,
மா.பி.சித்தார்த், ஜெ.விக்னேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism