‘பைக் வெச்சிருக்கிறவன்... மனுஷன், ஹெல்மெட் வெச்சிருக்கிறவன்... பெரிய மனுஷன்!’
பன்ச் மொக்கையா இருந்தா, ஃப்ரீயா விடுங்க. மேட்டர் என்னன்னா, பசங்களோட ஹெல்மெட் காதல் ஸ்கேனிங். ஒவ்வொரு மாடலையும் பார்க்கப் பார்க்க, ஒரு பாதுகாப்பு சாதனத்தைக்கூட, நம்ம பசங்க எவ்வளவு ஃபேஷனபிளா விரும்புறாங்கனு புரிஞ்சது. ஹெல்மெட் மாடல்கள் பத்தின டாக் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?
• ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்... தலை, முகம் முழுக்க கவர் பண்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
(அச்சச்சோ... உலகம் எப்படி நம்ம அழகைப் பார்க்கும்?!)
• த்ரீ குவார்ட்டர் ஹெல்மெட்... தாடை தவிர்த்து, தலை, முகம் கவர் பண்றது.
(முக்கா மூஞ்சி ஹெல்மெட்னு கூச்சப்படாம சொல்லுங்க!)

• மாடுலர் ஹெல்மெட்... ஃபுல், குவாட்டர்னு ரெண்டு அம்சமும் கலந்தது.
(அதாவது, வேணும்னா ஃபுல்லா போடலாம், இல்லைன்னா குவாட்டர் மட்டும் போட்டுக்கலாம். ஹெல்மெட்டைச் சொன்னோம்!)
• ஹாஃப் ஹெல்மெட்டில், தலைப்பகுதி மட்டும் கவர் ஆகும். பெண்கள் இதை அதிகமா விரும்புறாங்க.
(அப்புறம்... போட்ட மேக்கப் எல்லாம் வேஸ்ட்டாயிடக் கூடாதுல்ல?!)
• ஆஃப் ரோடு ஹெல்மெட், எதிர்க்காற்றை சமாளிக்க உதவும். ரேஸ்களுக்கு அதிகமா விரும்பப்படுற மாடல்.
(நாங்க ரோட்டுலயே ரேஸ்ல மாதிரிதான் ஓட்டுவோம்... அஹ்ஹாங்..!)
• லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... கெத்துக்கு வாங்கறதோட நிக்காம, சேஃப்டிக்கு அதைக் கண்டிப்பா போட்டுட்டும் போங்க பாஸ்!
பா.அபிரக்ஷன்
படங்கள்: மா.பி.சித்தார்த்