Published:Updated:

இளகிய மனசுக்காரி!

வெள்ளித்திரை 18 சாதனைப் பெண்கள்

இளகிய மனசுக்காரி!

வெள்ளித்திரை 18 சாதனைப் பெண்கள்

Published:Updated:

ன்சிகா மோத்வானி... கோலிவுட்டின் தற்போதைய ‘மோஸ்ட் லவ்வபிள்’ நடிகை. இன்னொரு பக்கம், 30

இளகிய மனசுக்காரி!

ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வரும் அவர் அக்கறை... ‘ஹேட்ஸ் ஆஃப் ஹன்சிகா!’ என்று சொல்ல வைக்கிறது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘தெலுங்குப் படத்தில்தான் அறிமுகமானேன். தொடர்ந்து ஒவ்வொரு பட வாய்ப்பா கிடைக்கும்போதும், மேக்கப் போட்டு கேமரா முன்னாடி போய் நின்னோம்னு இல்லாம, முன்பிருந்ததைவிட அதிகமா இந்த ஃபீல்டில் கத்துக்கணும்னு நினைக்கிறேன்.

இளகிய மனசுக்காரி!

எல்லோரும் நினைக்கிற மாதிரி ஹீரோயினா இருக்கிறது சொகுசானது இல்லை. அதுவும் ஒரு வேலைதான். தூங்க, சாப்பிடக்கூட நேரமில்லாம ஃப்ளைட்ல பறக்க வேண்டியிருக்கும். மறக்க முடியாதது, ஒரு தெலுங்குப் படத்துக்கு தொடர்ந்து மூணு நாட்கள் நடந்த ஷூட்டிங். அது நடந்த ஏரியாவில் தங்க ஹோட்டல்கள் எதுவும் இல்ல; ரெஸ்ட் எடுக்க கேரவனும் கிடையாது. கார்லயே கொஞ்சம் ரெஸ்ட், மறுபடியும் ஷூட்டிங்னு துளிகூட தூக்கமில்லாம ஓடினதில், மூணாவது நாள் ஷூட்டிங் முடிச்சப்போ என்னால எழுந்து நடக்கக்கூட முடியல. காய்ச்சல் வந்து, உடம்பு நெருப்பா கொதிச்சது. அப்பவும், `ஏண்டா இந்த சினிமாவுக்கு வந்தோம்’னு நினைச்சதில்ல. சினிமா கொடுக்கும் சம்பளமும், ஹைடெக் வாழ்க்கையும், புகழும் சந்தோஷமா இருக்கும்போது, அது தர்ற கஷ்டத்தையும் பொறுத்துக்கத்தானே வேணும்னு நினைச்சுப்பேன்.

என் புரொஃபஷனில், `டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் பண்ண மாட்டேன்... ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தர்ற ஸ்டோரிதான் வேணும்' இப்படியெல்லாம் எந்த டிமாண்டும் வைக்க மாட்டேன். நாலே ஸீன்களில் நடிச்சாலும், ‘நச்’னு மனசுல பதியற கேரக்டர்கள் போதும்னு நினைப்பேன். இந்த ஃபீல்டில் காதல், கிசுகிசுக்கள், கிண்டல்கள், துயரம் எல்லாம் கடக்க வேண்டியவை. அதுக்காக ஃபீல் பண்ணி உட்கார்ந்தா, நம்ம கிராஃப் கீழ் நோக்கிப் போயிடும். இந்தப் பக்குவமெல்லாம் எனக்கு எப்படி வந்ததுனு, எனக்கே அப்பப்போ ஆச்சர்யமாதான் இருக்கும். பார்க்க வேண்டிய வேலையில் சின்சியரா இருந்தோம்னா, பாஸ்ட் எல்லாம் தன்னால கடந்து போயிடும்.

எனக்கு ஆறு வயசு இருக்கும்போது, என் வயதுள்ள ரெண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து, அவங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாங்க எங்கம்மா. நான் பார்ன் வித் சில்வர் ஸ்பூன்னு சொல்ல மாட்டேன். ஆனா, கஷ்டம் தெரியாமதான் வளர்ந்தேன். இருந்தாலும், நானும் எதிர்காலத்தில் இப்படி யாருக்காச்சும் உதவணும்னு மனசுல தோணும். நடிகையாகி நிறைய சம்பாதிச்சதும், அதைச் செய்றதுக்கான நேரம் வந்துருச்சுனு நினைச்சேன். இப்போ 30 குழந்தைகளைத் தத்தெடுத்து ஒரு இல்லத்துல வளர்க்கிறேன். இது ஏதோ விளம்பரத்துக்குச் செய்றதில்ல.

சினிமாவுக்குத்தான் மேக்கப் எல்லாம், என் மனசுக்குப் பவுடர் தேவையில்லை. ஏன்னா, இயல்பிலேயே எனக்கு அழகான மனசு!’’

- புளிப்புமிட்டாய் சாப்பிடுவது போன்ற தன் டிரேட்மார்க் சிரிப்பில் ரசிக்க வைக்கிறார் ஹன்சிகா!

 எம்.குணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism