Published:Updated:

கேபிள் கலாட்டா!

டஸ்கி ஸ்கின்... சில்க் ஸ்மிதா கண்!

கேபிள் கலாட்டா!

டஸ்கி ஸ்கின்... சில்க் ஸ்மிதா கண்!

Published:Updated:

லிஸா ஹெய்டன்... எங்கேயோ பார்த்த ஞாபகமா?! நாம் தினமும் பார்க்கும் டி.வி விளம்பரங்கள்

கேபிள் கலாட்டா!

பெரும்பாலானவை லிஸா மேஜிக்தான். லேக் மே, பேன்டீன், மிந்த்ரா, ஸ்லைஸ் என பிராண்ட் பிராண்டாக வாங்கச் சொல்லும் பியூட்டி. 18 வயதில், கல்லூரிக்கு ஃபீஸ் கட்ட, வீட்டு வாடகை கொடுக்க என பொருளாதாரச் சூழலுக்காக மாடலிங் துறைக்கு வந்தவர் லிஸா. கொஞ்சம் டஸ்கியான சருமமும், சில்க் ஸ்மிதா போன்ற போதைக் கண்களும் பெண்ணின் ஹைலைட்ஸ். பரதம், ஜாஸ் நடனங்களை முறைப்படி கற்றுள்ள இவர், நம்ம சென்னைப் பொண்ணு. அமெரிக்காவில் மேல்படிப்பு, ஆஸ்திரேலியா அம்மாவின் சொந்த நாடு என்பதால் மூன்று ஃபேஷன்கள் கலந்த பெண். அப்பா மலையாளி, அம்மா ஆஸ்திரேலியா, கொஞ்சம் அமெரிக்கா வாசமும். அந்த கொலாஜ் அனுபவத்தில் லிஸாவை ஃபேஷன் டிசைனராகவும் மாற்றிய பெருமை, ‘மிந்த்ரா’ ஆடைகள் நிறுவனத்தைச் சேரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேபிள் கலாட்டா!

‘ஆயிஷா’, ‘ராஸ்கல்ஸ்’, ‘தி ஷாவுகீன்ஸ்’ இந்திப் படங்களில் நடித்துள்ள லிஸாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது... ‘குயின்’ படத்தின் ‘விஜயலட்சுமி’ கேரக்டருக்காகத்தான்! அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்கினாலும் செம போல்டாக பதில் கூறும் லிஸாவுக்கு, பாலிவுட்டில் ‘பாட்ஷாஹொ’, ‘ஹவுஸ்ஃபுல்’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்காகக் காத்திருக்கின்றன. இன்னொரு பக்கம், `எம் டி.வி’-யின் ‘இந்தியா’ஸ் நெக்ஸ்ட் டாப் மாடல்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கேமரா முன் நின்றுகொண்டிருக்கிறார்!

அஷ்டாவதானி!

‘‘காஜல் இல்லாம திவ்யா இல்லை!’’

ஜீ தமிழ் சேனலின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நிகழ்ச்சியில் மனோபாலா, கோவை சரளா, ரமேஷ் கண்ணா பட்டையைக் கிளப்ப, கலகலவென கண்களைத் திருடும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யாவுடன் ஒரு சிட் சேட்...

கேபிள் கலாட்டா!

‘‘பிறந்தது மட்டும்தான் பாண்டிச்சேரி. மூணே மாசத்துல சென்னை என்னை தத்தெடுத்துக்கிச்சு. ப்ளஸ் ஒன் படிக்கும்போதே மீடியா வாய்ப்பு. சன் மியூஸிக், இசையருவி, இப்போ `ஜீ தமிழ்’ மட்டுமில்லாம, இன்னும் நிறைய சேனல் நிகழ்ச்சிகளில் பிஸி. இன்ஜினீயரிங் படிச்சுட்டு மீடியாவில் இருந்தாலும், வீட்டில் ‘விரும்பினதைப் பண்ணும்மா!’னு சொல்லிட்டாங்க.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கிராண்ட் ஃபினாலேவை தொட்டது, இப்போதைய ஸ்வீட் சந்தோஷம். சின்ன வயசுலயே மீடியா என்ட்ரி என்பதால, டிரெஸ்ஸுக்கு எல்லாம் ஸ்பான்சர் கிடைச்சிடும். ஸோ, ஷாப்பிங்க்குக்கு அதிகமா செலவழிக்க மாட்டேன், ஃபேமிலிக்குதான் அன்லிமிட்டடா செலவழிப்பேன். கிராஃப்ட், ஜுவல் மேக்கிங்கில் ஆர்வம் என்பதால, என்னோட ஆக்ஸசரீஸை நானே டிசைன் பண்ணிப்பேன். கேமராவுக்கு பின்னாடி நோ மேக்கப். ஆனா, எப்பவும் காஜல் இல்லாம இருக்க மாட்டேன்!’’

கண்ணுக்கு மை அழகு!

15 வருஷ எக்ஸ்பீரியன்ஸ்!
 

 பிரதீப்... பாலிமர் சேனல் நியூஸ் ரீடர். ஃபீல்டில் 15 வருட அனுபவம் இருந்தாலும், பேச்சில் பணிவு.

கேபிள் கலாட்டா!

‘‘பிறந்து வளர்ந்தது ஈரோடு. படிச்சது இன்ஜினீயரிங்... பிடிச்சது மீடியா. ஆரம்பத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கனவோடதான் வந்தேன். ‘இந்தா பிடி... நியூஸ் படி...’னு சொல்லிட்டாங்க. ஒரு வார பயிற்சிக்கு அப்புறம் நியூஸ் ரீடர் அவதாரம் எடுத்து, இப்போ இந்த ஃபீல்டில் சீனியரும் ஆயிட்டேன். ஷாப்பிங் மோகம் கொஞ்சம் அதிகம். எங்கிட்ட இல்லாத கலெக்‌ஷன்ஸே இல்ல. ‘கோட் சூட், ஃபார்மல்ஸ், கேஷுவல்ஸ்னு ஒரு மென்’ஸ் வேர் கடையையே வீட்டுக்குள்ள கொண்டு வந்துருக்கீங்களே... ரெண்டு குழந்தைங்களுக்கு அப்பா மாதிரி கொஞ்சமாச்சும் பொறுப்பா இருங்க!’னு மனைவி சொல்றதை, காதில் வாங்கிக்கிறதில்ல. என் அனுபவத்தில் நியூஸ் உலகம் எவ்ளோ அப்டேட் ஆயிட்டு வருதுனு பார்த்து வியந்துட்டே இருக்கேன். இன்னும் சில மாற்றங்கள் வந்தா, நாமும் ஃபாரின் ரேஞ்சுக்கு நியூஸ்ல சாதனைகள் பண்ணலாம். ஃப்ரெஷர்ஸ்... `விஜே’ மட்டுமே குறிவைக்காம, கொஞ்சம் நியூஸ் ரீடர் சேர் மேலயும் விருப்பம் வைங்கப்பா!’’

நோட் இட்!

மீண்டும் `டிடி’!

கேபிள் கலாட்டா!


விஜய் டி.வி-யில் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கிய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி, ஹிட்டோ ஹிட்! ஆரம்பத்தில், ‘காபி வித் அனு’வாக அனுஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி பிரபலமானதும் `டிடி’ கையில் கொடுக்கப்பட்டு, ‘காபி வித் டிடி’ ஆக, டி.ஆர்.பி-யில் ரேட்டிங் எகிறியது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத பிரபலங்களே இல்லை எனலாம். இடையில் `டிடி’ விஜய் டி.வி-யில் நிகழ்ச்சி செய்யாமல் ஒதுங்க, ‘விஜய் டி.வி-யில் இருந்து வெளியேறினார் டிடி’ என்று றெக்கை கட்டின செய்திகள். தற்போது ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக மீண்டும் ‘காபி வித் டிடி’ ஷூட் முடிந்துள்ளது. அதன் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள `டிடி’... ‘என்னால் காத்திருக்க முடியாது. ஏனெனில் ஆயுத பூஜை ஸ்பெஷல் ‘காபி வித் டிடி’-யில் கெஸ்ட்ஸ்... விக்ரம், சமந்தா!’ என்று ட்வீட் செய்துள்ளார்!

ஒருவழியாக பஞ்சாயத்துக்கு ஃபுல்ஸ்டாப்!

ரிமோட் ரீட்டா

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ 150

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

``திங்கள் முதல் வெள்ளி வரை நியூஸ்-7 சேனலில் காலை 7.45 மணியில் இருந்து 8.15 மணி வரை `உணவே அமிர்தம்’ எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில் டாக்டர் செல்வ சண்முகம் சொல்கிறபடி, பாடகி ஒருவர் ரத்த சோகையைக் குறைக்கும் உணவுகள், உடல் எடையைக் குறைக்கும் உணவுகள், மசக்கை உணவுகள் என பல தலைப்புகளில் உணவுகளைச் செய்து காட்டி, அதனோடு தொடர்புடைய பாடலையும் பாடுகிறார். மேலும் நிகழ்ச்சியில் காய் அல்லது பழத்தின் சத்துக்களையும் பட்டியலிடுகிறார்கள். இந்த நிகழ்ச்சி, அன்றைய தினம் மாலை 4.15 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியின் முடிவில் இரண்டு சமையல் டிப்ஸ் வேறு கொடுக்கிறார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்; கரும்பு தின்ன கூலி வேறு!’’ என வியந்து பேசுகிறார் சென்னை, மதனந்தபுரத்தில் இருந்து எஸ்.ஏ.அன்னபூர்ணா.

பக்திப் பரவசம்!

‘‘பொதிகை டி.வி-யில் தினமும் காலை 6.30 முதல் 6.45 மணி வரை ஒளிபரப்பாகும் `நலம் தரும் நாராயணீயம்’ என்ற ஆன்மிக நிகழ்ச்சி... மனதுக்கு ஆறுதலாக இருப்பதுடன், தெரியாத எத்தனையோ விஷயங்களை அறிந்துகொள்ள உதவுகிறது. தினமும் ஒரு ஸ்லோகத்துக்கு அர்த்தும் தருவதுடன், பல்வேறு திருக்கோயில்களைக்காட்டி அவற்றை சொற்பொழிவாளர் விளக்கிச் சொல்வது அருமை! மொத்தத்தில் நலம் தரும் நாராயணீயம் ஒரு அற்புதமான நிகழ்ச்சி’’ என்று பாராட்டுகிறார் பெங்களூரில் இருந்து அகிலா பஞ்சாபகேசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism