Published:Updated:

சந்தோஷ ஸ்வரங்கள்... கலக்கும் காதல் தம்பதி!

இசைத் தம்பதி

சந்தோஷ ஸ்வரங்கள்... கலக்கும் காதல் தம்பதி!

இசைத் தம்பதி

Published:Updated:

சைத் தம்பதி... ஸ்ரீராம் பரசுராம் - அனுராதா! கணவன், மனைவி ஒரே துறையைச் சேர்ந்தவர்களாக

சந்தோஷ ஸ்வரங்கள்... கலக்கும் காதல் தம்பதி!

இருக்கும்போது, அந்த வாழ்க்கையை எந்தளவுக்கு ரசித்து, ருசித்து வாழலாம் என்பதை வாழ்ந்து காட்டும் காதல் ஜோடி. கச்சேரிகள், திரைப்பாடல்கள், டி.வி நிகழ்ச்சிகள் என்று பரபரப்பாக இருப்பவர்களுடன் ஒரு பூச்செண்டு சந்திப்பு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். என் அம்மா ரேணுகா தமிழிலும், மலையாளத்திலும் பிரபல பாடகி. கே.ஜே.யேசுதாஸுக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்!’’

- ஸ்வரமாய் ஆரம்பித்தார் அனுராதா.

சந்தோஷ ஸ்வரங்கள்... கலக்கும் காதல் தம்பதி!

‘‘12 வயதிலேயே உள்நாடு, வெளிநாடுகளில் சோலோ கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தேன். சென்னை, குயின் மேரிஸ் கல்லூரியில் யூ.ஜி., பி.ஜி கோல்டு மெடலிஸ்ட். தொடர்ந்து அமெரிக்காவின் வெஸ்லியன் யுனிவர்சிட்டியில் இசை சார்ந்த கோர்ஸ் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அந்த யுனிவர்சிட்டியில்தான் ஸ்ரீராம் பிஹெச்.டி படித்துக்கொண்டிருந்தார்!’’ என்று அனு சொல்ல,

‘‘என் இன்ட்ரோவை நான் சொல்றேன்..!’’ என்று சிரித்தபடியே ஆரம்பித்தார் ஸ்ரீராம்... ‘‘மும்பையில் இசைக் குடும்பத்தில் பிறந்தவன் நான். ஏழு வயதில் இருந்தே சோலோ வயலின் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தேன். இசைக்குச் சம்பந்தமில்லாத பி.இ., எம்.பி.ஏ கோர்ஸ்கள் முடித்தேன். ஆனாலும் இசை என்னை விடாததால், வயலினில் வெஸ்டர்ன் கிளாஸிக்கில் மாஸ்டர் ஆஃப் மியூசிக் (எம்.எம்) மற்றும் பிஹெச்.டி படிப்பை அமெரிக்காவில் படித்தேன். அனுவைச் சந்தித்தேன். நண்பர்களானோம். என்னைப் பார்க்க என் குடும்பத்தினர் அமெரிக்கா வந்திருந்தபோது, அனுவை என் வீட்டுக்கு அழைத்தேன்!’’

இனி, அனுராதா வெட்கப் புன்னகையுடன் தொடர்கிறார்-

‘‘அங்கே போனபோது, அனைவரும் ஒன்றாக அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். நானும் இணைந்து ‘கல்யாணி வர்ணம்’ பாடி னேன். முதல் சந்திப்பிலேயே ஸ்ரீராம் குடும்பத்துக்கு என்னையும், எனக்கு அவர்களையும் பிடித்துப்போனது. திருமணம் செய்துகொண்டால் இசைப் பயணம் தடைப்பட்டு போகும் என்று அதுவரை எனக்கிருந்த எண்ணமும் கரைந்துபோனது. என் விருப்பத்தை நான் தான் முதலில் ஸ்ரீராமிடம் சொன்னேன். ஏனெனில், எந்த நல்ல விஷயத்தையும் தள்ளிப்போடக் கூடாதே!’’ - கலகலவெனச் சிரிக்கிறார்.

‘‘நாங்கள் இருவரும் சந்தோஷமாக காதலிக்க ஆரம்பித்தோம். படிப்புச் செலவுக்கான பணத்தை பார்ட் டைம் வேலை செய்து சம்பாதித்தோம். அந்த இரண்டு வருடங்களில் எங்களுக்கு ஏற்பட்ட ஆழமான புரிதல்தான், இன்றுவரை எங்களை வெற்றிகரமான தம்பதிகளாகச் செலுத்திக்கொண்டிருகிறது!’’ - ஸ்ரீராமின் கண்களில் மின்னல்.

‘‘எங்கள் விருப்பத்தை வீட்டுக்குச் சொன்னோம். நாங்கள் அமெரிக்காவில் படிக்கும்போதே சென்னையில் இருந்த என் குடும்பமும், மும்பையில் இருந்த ஸ்ரீராம் குடும்பமும் நாங்கள் இல்லாமலேயே எங்கள் நிச்சயதார்த்தத்தை முடித் தார்கள். பின்னர் 94-ல் இந்தியா திரும்பியதும், திருமணம் முடித்து சென்னையில் செட்டில் ஆனோம்.

இருவரும் இணைந்தும், தனித்தனியாகவும் கச்சேரிகள் செய்தோம். ஆரம்பத்தில் நானும் ஸ்ரீராமும் இணைந்தே கச்சேரிகளுக்குப் பயிற்சி எடுப் போம். அப்போது அவர், ‘சரியா பாடு... சரியா பாடு’ என்று சின்னச் சின்ன கரெக்‌ஷன்களைக்கூட விடாமல் சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கு சலிப்பாகும். ஆனால், அடுத்த நாள் கச்சேரியில் அந்தப் பயிற்சியின் பலன் கைதட்டல்களாக அதிரும். நாங்கள் இருவரும் இணைந்து இந்துஸ்தானியும், கர்னாடக சங்கீதமும் மாறிப் மாறிப் பாடும் ‘ஜுகல் பந்தி’ கச்சேரி ரொம்பவே பிரபலம். இதுவரை இருவரும் சேர்ந்து 2,500-க்கும் அதிகமான ஜுகல் பந்தி கச்சேரிகளில் பாடியிருக்கிறோம்; நூற்றுக் கணக்கான ஆல்பங்கள் வெளி யிட்டிருக்கிறோம்!’’ என்ற அனு ராதா, ஸ்ரீராமுடன் கைகோத்து தன் துறையில் முன்னேறிய கதை சொன்னார்...

‘‘கல்யாணம் முடிந்த ஆண்டே ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ‘மின்சாரக் கனவு’ படத்தில் ‘அன்பென்ற மழை யிலே’ பாடல் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து ‘ஆசை’ படத்தின் ‘மீனம்மா’ பாடல் பெரிய அறிமுகத்தைக் கொடுக்க, வாய்ப்புகள் குவிந்தன. முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரின் இசையிலும், இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறேன். குறிப்பாக, தேவா சார் இசையில் அதிகமாகப் பாடியிருக்கிறேன்.

‘5 ஸ்டார்’ படத்துக்கு நானும் ஸ்ரீராமும் இணைந்து இசையமைத்தது, மறக்க முடியாத அனுபவம். மேடைக்கச்சேரிகளில் முழுக்க நம் திறமை மட்டுமே ஒலிக்கும் என்பதால், எப்போதும் எங்களுக்குக் கச்சேரிகளே பிடிக்கும். தவிர, சேனல் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறோம். அதில் பொதிகை டி.வி-யில் ‘எல்லாமே சங்கீதம்தான்’ நிகழ்ச்சி, 150 எபிசோடுகள் கடந்திருக்கிறது!’’ என்றபோது குறுக்கிட்ட ஸ்ரீராம்,

‘‘பல விருதுகள் வாங்கியிருக்கிறார் அனு. வெஸ்டர்ன், கிளாஸிக், ஃபோக் என மல்டி டேலன்டட் பெர்சனாலிட்டி அவர். அவரிடம் இருந்துதான் நான் தமிழ்ப் பாடல்களை பிழையில்லாமல் பாடக் கற்றுக்கொண்டேன். அதேபோல, அவருக்கு இந்தி பாடல் டியூட்டர் நான்தான். அவர் பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த ‘ஒருநாள் ஒரு கனவு’ பாடலை, அடிக்கடிப் பாடச் சொல்லிக் கேட்பேன்!’’ - புன்னகை தூவிய ஸ்ரீராம் தொடர்ந்தார்...

‘‘எங்கள் பையன்கள் ஜெயந்த், லோகேஷ் இருவருக்கும் இதுவரை இசையில் ஆர்வம் வரவில்லை. அவர்களுக்காக இப்போது கச்சேரிகளைக் குறைத்துக்கொண்டிருக்கிறோம். ஒருவர் கச்சேரிக்குச் சென்றால், மற்றொருவர் பிள்ளை களைப் பார்த்துக்கொள்வோம். இசையில் ஆரம்பித்து சினிமா வரை எல்லா விஷயங்களைப் பற்றியும் நண்பர் களாகப் பேசிக்கொள்வோம். திருமணத்துக்குப் பின்னும் எங்களுக்கு இடையில் உயிர்ப்புடனே இருக்கும் அந்த ஆதி நட்புதான், எங்கள் வாழ்க்கையில் சந்தோஷ ஸ்வரங்களை மட்டுமே மீட்டிக்கொண்டிருக்கிறது!’’

- ஸ்ரீராம் சொல்ல.. அகமகிழ்ந்து போகிறார் அனுராதா!

 கு.ஆனந்தராஜ் படம்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism