Published:Updated:

சிரிப்பு வெடி!

சிரிப்பு வெடி!

சிரிப்பு வெடி!

சிரிப்பு வெடி!

Published:Updated:
சிரிப்பு வெடி!

ண்டிகைக் கால சந்தோஷத்தை அதிகப்படுத்த, தீபாவளி ஸ்பெஷல் சிரிப்பு வெடிகள் கொளுத்துகிறார்,

சிரிப்பு வெடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரபல நகைச்சுவைக் கலைஞர் ‘மதுரை’ முத்து! இந்த இதழில் ஆங்காங்கே அவை வெடித்துச் சிதறுகின்றன... ரசித்துக் களியுங்கள்!

சிரிப்பு வெடி!

ட்டாசுக் கடைக்கு ஒருத்தன் பட்டாசு வாங்கப் போனான். 15 அடி உயரமிருந்த வெடியை, ‘இது என்ன வெடி?’னு கடைக்காரன்கிட்ட கேட்க, ‘யானை வெடி’ன்னான் அவன். ‘சரி, இது ஏன் ஈரமா இருக்கு?’னு நம்மாளு கேட்க, ‘ம்... அது நீர்யானை வெடி!’னான் குசும்புக் கடைக்காரன்!

சிரிப்பு வெடி!

செல்போன் வெடியை பலமுறை பத்த வெச்சுப் பார்த்தும் வெடிக்காததால அப்பா டயர்டாக, மகள் கூலா சொன்னாள்... ‘அப்பா... அது சைலன்ட் மோடில் இருக்கு!’

சிரிப்பு வெடி!

‘நான் இன்னிக்கு அதிரசம், முறுக்கு சுட்டேன்’னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டாங்க ஒரு அம்மா. கொஞ்சம் லைக்ஸ்தான் வந்திருந்தது. அந்த அதிரசத்தை சாப்பிட்டு வயித்தால போயி ஆஸ்பத்திரியில கெடந்த தன் வீட்டுக்காரரை போட்டோ எடுத்துப் போட்டாங்க.... வைரல் ஆயிருச்சு. நமக்கு லைக்ஸ்தான் முக்கியம்!

சிரிப்பு வெடி!

தீபாவளிக்கு ஜவுளி எடுக்க அந்தத் தம்பதி கடைக்குப் போனப்போ, ‘நான் உள்ள வர மாட்டேன்’னு ஸ்ட்ரைக் பண்ணினார் வீட்டுக்காரர். புடவைக்கு 800 ரூபாய் பில் போட்டுட்டு மனைவி வெளியில வந்தா, டீ, தம்மு, பன்னு, வடை, சமோசானு பக்கத்து டீ கடையில ஐந்நூறு ரூபாய்க்கு பில் போட்டிருந்தார் வீட்டுக்காரர்.

நாங்களும் கெத்துதான்... நாங்களும் கெத்துதான்!

சிரிப்பு வெடி!

தீபாவளி அன்னிக்கு பல வீடுகளில் கணவன்மார்கள், பலகாரங்களை டேஸ்ட் பண்ணுவாங்க. சில வீடுகளில் கணவன்கிட்ட கொடுத்து ‘டெஸ்ட்’ பண்ணுவாங்க! 

தீபாவளி அன்னிக்கு பலகாரம் சுட்டு, பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு கொடுத்துவிட்டா என் மனைவி. அவங்க அதை அப்படியே எதிர்வீட்டுக்காரங்களுக்கு கொடுக்க, அவங்க சைடு வீட்டுல கொடுக்க, இப்படியே மாறி மாறி அது எங்க வீட்டுக்கே வந்து சேர்ந்துச்சு. அதைக் கடைசியா நாய்க்குக் கொடுத்தோம். அன்னியிலிருந்து இன்னிவரைக்கும் ஒவ்வொரு தீபாவளியிலும் செத்துப்போன அந்த நாய்க்கு திதி கொடுத்துட்டு இருக்கோம்!

சிரிப்பு வெடி!

மேனேஜர்கிட்ட பியூன் வந்து, ‘உங்க நண்பர்னு சொல்லி ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருக்காரு சார்’னு சொன்னார். ‘வர்றவங்க எல்லாரும் அப்படித்தான் சொல்வாங்க. சொந்தம், நட்புனு யாரு வந்தாலும் உள்ள அனுப்பாதே’னு சொல்லிட்டார். தீபாவளிக்கு ஷாப்பிங் போன மேனேஜரோட மனைவி, அப்படியே ஆசைக் கணவனை ஆபீஸ்ல பார்க்க வந்து, பியூன்கிட்ட ‘நான் மேனேஜரோட மனைவி.... பார்க்கணும்’னு சொன்னாங்க. `வர்ற எல்லாருமே அப்படித்தான் சொல்றாங்க. உள்ளே விடமாட்டேன்’ கொஞ்சம்கூட யோசிக்காம சொல்லிவிட்டார், பியூன்.

சிரிப்பு வெடி!

மேனேஜருக்கு தீபாவளி தீபாவளிதான்!

 லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட் (நாங்க மட்டும் பன்ச் சொல்லக் கூடாதா..?!)... எல்லார் வீட்டுலயும் `ஈகோ’வை (Ego) ‘யூ கோ’னு (You go) அனுப்பிட்டா, ஒவ்வொரு நாளும் தீபாவளிதான்!

சிரிப்பு வெடி!

ந்தம்மா அடுப்படியில சமைச்சுட்டே டி.வி-யில் சமையல் குறிப்பைக் கேட்டுட்டு இருந்தாங்க. ‘கூந்தல் கருகருவென வளர, வேரோடு பிடுங்கி ஈரப்பதமான நிலத்தில் நடணும்’, ‘பற்களின் இடைவெளி குறைய, எருமைச்சாணியைக் கொண்டு அடைக்கணும்’, ‘முகத்தில் முகப்பரு மறைய, மண்வெட்டியால கொத்திவிடணும்’னு ஒலிபரப்பாக, தலைசுத்திப்போன அம்மா ஹாலுக்கு வந்து டி.வி-யைப் பார்த்தா, ரிமோட்டில் சேனலை மாத்தி மாத்தி விளையாண்டிருக்கான் அவங்க பையன்!

சிரிப்பு வெடி!

தீபாவளிக்கு ஷாப்பிங் போன ஒரு கெட்டிக்காரர், 200 ரூபாய் சொன்ன கூடையை 100 ரூபாய்க்குக் கேட்டார். கடைக்காரர், ‘உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்... 150 ரூபாய்’னு சொல்ல, இன்னும் இறக்கி 80-க்கு கேட்டார். கடுப்பான கடைக்காரர், ‘சும்மாவே வெச்சுக்க’னு சொல்ல, நம்ம கெட்டிக்காரர் கேட்டார்... ‘அப்போ ரெண்டு கூடை கிடைக்குமா?!’

சிரிப்பு வெடி!

 தொகுப்பு: கு.ஆனந்தராஜ் ஓவியங்கள்: ராஜேஷ் ஆர்.வி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism