பண்டிகைப் பட்டாம்பூச்சி எல்லோர் மனதிலும் பறக்கும் நேரம் இது. புத்தாடை, பட்டாசு, விருந்தினர்கள் என

தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்கூட்டியே அனைவரும் திட்டமிட்டுவிடுவோம். ஆனால், அழையா விருந்தாளியாக தீபாவளி இரவில் வந்து பாடாய்ப்படுத்தும் அஜீரணக் கோளாறு, பட்டாசுப் புகையினால் ஏற்பட்ட தொண்டைப் புண் போன்றவை! அந்தப் பிரச்னைகளை எளிதில் விரட்டவல்லது தீபாவளி லேகியம். இந்த லேகியம் வெவ்வேறு முறைகளில் செய்யப்படுகிறது. அவற்றில் ஒன்றினை செய்யக் கற்றுத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

தேவையானவை: சீரகம் - 3 டீஸ்பூன், மல்லி (தனியா) - 3 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், ஓமம் - 25 கிராம், சுக்கு - ஒரு துண்டு, கண்டந்திப்பிலி - 12 குச்சி, நெய் - கால் கப், வெல்லம்/கருப்பட்டி - 100 கிராம், பொடித்த ஏலக்காய் - சிறிதளவு.

செய்முறை: சீரகத்தையும் மல்லியையும் (தனியா) 10 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். மிளகு, ஒமம், சுக்கு மற்றும் கண்டந்திப்பிலி ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். சூடு ஆறியதும் இந்தக் கலவையை ஊறவைத்த சீரகம், தனியாவுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் அடிகனமான கடாயை வைத்து சிறிது நெய் ஊற்றி உருகியதும்... ஏலக்காய்ப் பொடி தூவி, அரைத்து வைத்த விழுது, பொடித்த வெல்லம் (அ) கருப்பட்டி சேர்த்து, சிறிது சிறிதாக நெய் ஊற்றிக் கிளறவும் (அதிக நேரம் அடுப்பில் இருந்தால் கலவை இறுகிவிடும்... கவனம்). கலவை நிறம் மாறி அல்வா பதம் வந்ததும், இறக்கி ஆறவைத்துச் சாப்பிடவும்.

குறிப்பு: தீபாவளி சமயம் மட்டுமல்ல, இந்த லேகியம் எப்போதும் வீட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். கைபடாமல் பயன்படுத்தினால் நீண்டநாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். ஞாயிறுதோறும் ஓர் உருண்டை சாப்பிட்டு வந்தால், நன்கு ஜீரணமாகி வயிற்றுக்கோளாறுகள் அண்டாமல் இருக்கும். உடல் வலி, கை, கால் அசதி, ஜலதோஷம் என எல்லாப் பிரச்னைகளுக்கும் அருமருந்து இந்த லேகியம்!

பலகாரம் செய்வதோடு மறக்காமல் செய்யுங்கள் லேகியமும்!

சு.சூர்யா கோமதி படம்:எம்.உசேன்