Published:Updated:

கிருஷ்ணர் அல்ல... இங்கு ராமரின் தீபாவளி!

தீபாவளி கொண்டாட்டம்

கிருஷ்ணர் அல்ல... இங்கு ராமரின் தீபாவளி!

தீபாவளி கொண்டாட்டம்

Published:Updated:

தென்மாநிலங்களைவிட வடமாநிலங்களில் கொண்டாடப்படும் தீபாவளி மிகவும் வித்தியாசமானது. அதிலும் ஐந்து நாள் கொண்டாட்டம் என்பதால், தென்னகத்து பொங்கல் திருநாட்கள் போல படுவிமர்சையாக நடக்கும். அத்தகைய வடநாட்டு தீபாவளியின் பழக்கவழக்கங்களை இங்கே பகிர்கிறார், ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை டாக்டர் என்.லக்ஷ்மி அய்யர்.

கிருஷ்ணர் அல்ல... இங்கு ராமரின் தீபாவளி!

தென்நாட்டில் தீபாவளிப் புராண மானது... ஸ்ரீகிருஷ்ணர், சத்யபாமா சமேதராக யுத்தத்துக்குச் சென்றார். பூதேவியின் வடிவமான சத்யபாமா, நரகாசுரனைக் கொன்றாள் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், வட

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிருஷ்ணர் அல்ல... இங்கு ராமரின் தீபாவளி!

மாநிலங் களில் தீபாவளியானது ஸ்ரீராமருக்கான பண்டிகை!

தீபாவளிக்கு முன்பு வரும் நவராத்திரி அல்லது தசராவை ராஜஸ்தான் மக்கள், ராமர் கதையுடன் சேர்த்து, தீபாவளிக்கும் தசராவுக்கும் ஒற்றுமையை நிலைநாட்டுகிறார்கள். அவர்கள் புராணப்படி, ராமர் நவராத்திரியில் 9 நாட்கள் விரதம் இருந்து, ஒவ்வொரு நாளும் தேவியை பக்தியுடன் 108 நீலத்தாமரை மலர்களால் பூஜை செய்து, விஜயதசமி அன்று ராவணனை வீழ்த்துகிறார். இடையில் அவரை சோதிக்க நினைத்து ஒன்பதாவது நாள் ஒரு தாமரை மலரை எடுத்துக்கொண்டு மறைந்துவிடுகிறாள் தேவி.

கிருஷ்ணர் அல்ல... இங்கு ராமரின் தீபாவளி!

பூஜையிலிருந்து எழுந்தால் விரதம் தடைப்படும் என்று கவலைப்படும் ராமருக்கு தன் தாயான கோசலை, தன்னைச் சிறுவயதில் ‘தாமரைக் கண்ணா’, ‘ராஜீவநயனா’, ‘கமலநயனா’ என்று அழைத் துக் கொஞ்சுவது நினைவுக்கு வருகிறது. உடனே, துர்க் கைக்கு தன் கண்ணை 108 தாமரை மலர்களுள் ஒன்றாக எண்ணி, அதை அம்பினால் எடுக்க முயற்சிக்கிறார் ராமர். அவரின் பக்திக்கு மகிழ்ந்து, ராமர் வெற்றி பெற வாழ்த்தி மறைகிறாள் தேவி. விஜயதசமி அன்று ராவணனை வதம் செய்கிறார் ராமர்.

வடமாநில மக்கள் அமாவாசையிலிருந்து ஒன்பது நாட்கள் விரதம் இருந்து விஜயதசமி அன்று காகிதம், காய்ந்த மூங்கில்களால் செய்த பத்து தலையுள்ள ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரின் உருவங்களை, அம்பால் நெருப்பிட்டு எரித்து மகிழ்வார்கள். ராவணனைக் கொன்ற ராமர், சீதா, லக்ஷ்மணன், அனு மாருடன் தீபாவளியன்று அயோத்தியாவில் அடி எடுத்து வைக்கிறார். மக்கள் அந்த அமாவாசையில் விளக்கேற்றி அவர்களை வரவேற்கிறார்கள்.

கிருஷ்ணர் அல்ல... இங்கு ராமரின் தீபாவளி!

இதை தீபாவளி, தீவாலி என்று கொண்டாடு கின்றனர். ஒன்பது நாட்கள் நவராத்திரி, பிறகு பத்தாவது நாள் தசமி, இருபதாவது நாள் தீபாவளி என வடமாநிலங்களின் நாட்டுப்புற பாடல் சொல்கிறது.

ஐந்து நாள் கொண்டாட்டம்..!

முதல் நாள்: திரையோதசியன்று  (9 நவம்பர் 2015) லக்ஷ்மி தன்வந்திரி பிறந்தநாளை ஒட்டி, ஒரு மண்

கிருஷ்ணர் அல்ல... இங்கு ராமரின் தீபாவளி!

உண்டியல் வாங்கி பணம் போட்டு சாமி படங்களின் முன்பாக வைத்துவிடுவார்கள். மண்ணில் செய்த லக்ஷ்மி கணேச அல்லது லக்ஷ்மி குபேர பொம்மையில் (ஐந்து விளக்குடன் இங்கு விற்கப்படும்) நெய் விட்டு தீபம் ஏற்றுவார்கள். பிறகு, வீட்டுக்கு உட்புறமும் வெளிப்புறமும் தீபம் ஏற்றி இனிப்புகள் பரிமாறி பட்டாசு கொளுத்துவார்கள்.

இரண்டாவது நாள்: நரக சதுர்தசியன்று ‘சோடி தீவாலி’ (சிறிய தீபாவளி). ‘காளி சௌதஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. லஷ்மியையும் ராமனையும் வழிபடுவார்கள்.

மூன்றாவது நாள்: தீபாவளி அல்லது படீ தீவாளி (பெரிய தீபாவளி) எனும் இந்நாள், ராமன் அயோத்தியாவுக்கு சீதை, லக்ஷ்மணன், அனுமருடன் வந்த அமாவாசை நாள். அன்று மாலை கணேச, லக்ஷ்மி மற்றும் குபேர பூஜை நடைபெறும்.

நான்காவது நாள்: கோவர்தன் பூஜா, படுவா அன்னகூட் என அழைக்கப்படும் இந்நாளில்தான், கிருஷ்ண பரமாத்மா கோவர்தன மலையை தன் சிறுவிரலால் தூக்கி மக்களைக் காத்தார். கிருஷ்ணர் கோயிலில் அனைவரும் வழிபட்டு ‘அன்னகூட்’ பிரசாதம் பெற்று வருவார்கள்.

ஐந்தாவது நாள்: சகோதரிகள் தன் சகோதரர்களுக்கு திலகம் வைத்து நீண்ட ஆயுளைத் தர இறைவனை வேண்டி, அவர்கள் வாழ்வில் வளம்பெற வாழ்த்துவார்கள். அண்ணன் அல்லது தம்பிமார்கள் தம் தகுதிக்கேற்ப பரிசுகளைத் தருவார்கள்.

பாரத நாட்டில் எந்த மாநிலமானாலும் சரி, தீயசக்திகளை வீரம், இறையருளுடன் ஜெயித்து அன்பு, பாசம், நேசம், ஒற்றுமை நிறைந்த மனித நேயத்தை சமுதாயத்துக்குத் தரும் இந்தியக் கலாசாரத்தின் வெளிப்பாடாகவே கொண்டாடப்படுகிறது தீபாவளி!

தொகுப்பு: எம்.மரிய பெல்சின்

பூனை தீபாவளி!

தீபாவளி கொண்டாட் டாட்டம் நடைபெறும் ஐந்து நாட்களும் விளக்குகளால் இரவிலும் பகலாய் வடமாநில நகரங்கள் ஒளிரும்! இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு. தீபாவளியன்று ஓர் அறையில் பட்டு வஸ்திரம் விரித்து, இனிப்புகள், பாயசம் வைத்து கதவை இரவு முழுவதும் திறந்து வைப்பார்கள். பூனையை லக்ஷ்மி அன்னையின் தூதராக எண்ணி, அன்று பூனையைக் கண்டால் பொன் சேரும் என்று மகிழ்வார்கள்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism