Published:Updated:

வேஸ்ட் பொருட்களில் கொலு பொம்மை தயாரிப்பு...வருமானத்தில் ஏழைகளின் கல்விக்கு உதவி!

75 வயதில் அசத்தும் இந்திராணி

வேஸ்ட் பொருட்களில் கொலு பொம்மை தயாரிப்பு...வருமானத்தில் ஏழைகளின் கல்விக்கு உதவி!

75 வயதில் அசத்தும் இந்திராணி

Published:Updated:

தேவையற்ற பொருட்களில் இருந்து கொலு பொம்மைகளை உருவாக்கி வருகிறார், சென்னையைச் சேர்ந்த 75 வயது இந்திராணி. இந்த வருவாயைக் கொண்டு ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவது, இவருக்கு  நம்மை கைகொடுக்க வைக்கிறது!

வேஸ்ட் பொருட்களில் கொலு பொம்மை தயாரிப்பு...வருமானத்தில் ஏழைகளின் கல்விக்கு உதவி!

‘‘எனக்கு 16 வயசுலயே திருமணம் ஆகிடுச்சு. பிறந்த வீட்டுல ஆரம்பிச்சு, புகுந்த வீட்டுலயும் தொடர்ந்து கொலு வெச்சுட்டு வர்றேன். ஏதாவது புதுமையான கான்செப்ட்டில் கொலு வைக்கலாம்னு நினைச்சப்போ, 69-ம் வருஷம், காந்தியின் நூற்றாண்டு விழா வந்தது. அப்போ காந்தி பொம்மைகள், புகைப்படம்னு அவர் சம்பந்தப்பட்ட பொருட்களைக் கொண்டு கொலு வெச்சேன். அரசின் திட்டங்கள், கிராமியக் கலைகள், நாட்டுப்புறக் கலைகள், விவசாயம்னு ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு கான்செப்ட்டில் கொலு வைக்க ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10 வருஷத்துக்கு முன்னாடிதான், டீ கப், பேப்பர் கப், தயிர் கப், பிளாஸ்டிக் பாட்டில், மூடினு வேஸ்ட்

வேஸ்ட் பொருட்களில் கொலு பொம்மை தயாரிப்பு...வருமானத்தில் ஏழைகளின் கல்விக்கு உதவி!

பொருட்களில் இருந்து கொலு பொம்மைகள் செய்யும் ஐடியா கிடைச்சது. வீட்டுல கிடைக்கிறது, மார்க்கெட், வீதியில கிடைக்கிறதுனு தேவையற்ற பொருட்களை எல்லாம் சேமிச்சு, நல்லா சுத்தம் செஞ்சு, கொலு பொம்மைகளை செஞ்சேன். எங்க வீட்டுக்கு கொலு பார்க்க வந்தவங்க ‘சூப்பர்!’னு சொல்லி ரசிச்சதோட, ‘ஸ்டால் போட்டா நாங்களும் வாங்குவோம்’னு கேட்டுக்கிட்டாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்ன இருந்து, நவராத்திரிக்கு ஒரு வாரம் முன்பா என் வீட்டிலேயே ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் கொலுப் பொருட்கள் ஸ்டால் போட்டேன். வருவாய் கிடைக்க ஆரம்பிச்சுது.

இதுல கிடைக்கிற தொகையை, நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்த நினைச்சு, வருஷத்துக்கு ஓர் ஏழை மாணவியைத் தேர்ந்தெடுத்து, அவ கல்விக்காக உதவி பண்ணினேன். 2013-ம் வருஷம் கிடைச்ச இருபதாயிரம் ரூபாயை சென்னையைச் சேர்ந்த ஹேமமாலினிக்குக் கொடுத்தேன். இப்போ அவ ஃபைனல் இயர் ஆர்ட்ஸ் படிக்கிறா. போன வருஷம் கிடைச்ச பதினெட்டாயிரத்தை சென்னையைச் சேர்ந்த திவ்யாவுக்கு கொடுத்தேன். இப்போ திவ்யா பத்தாவது படிக்கிறா. கொலு பொம்மைகளை வாங்குறவங்ககிட்ட கைநீட்டி காசு வாங்காம, உண்டியல் வெச்சு, அவங்க கொடுக்கப்போற பணம் ஒரு ஏழைக் குழந்தைக்கு உதவப்போகுதுனு விவரம் சொல்லி, அதிலேயே போடச் சொல்லிடுவேன். இந்த வருஷத்துக்கான ஸ்டூடன்ட்டை தேர்ந்தெடுத்துட்டுதான் உண்டியலைத் திறக்கணும்!’’ எனும் இந்திராணியிடம் வியக்க இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன.

வேஸ்ட் பொருட்களில் கொலு பொம்மை தயாரிப்பு...வருமானத்தில் ஏழைகளின் கல்விக்கு உதவி!

ஓய்வுநேரங்களில் கைவினைப் பொருட்கள் செய்து அந்த விற்பனைப் பணத்தை பிறருக்கு உதவுவது, தினமும் காலை அரை மணி நேரம் சைக்கிளிங், மாலை ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்வது என பரபரப்பாக இருக்கிறார் பாட்டி.

‘‘எதுக்கு ஓய்வுகாலத்துல வேலை செய்றீங்கனு சிலர் கேட்பாங்க. உடல் ஒத்துழைக்கிற வரைக்கும் எதுக்கு ஓய்வு?!’’ - ஆரோக்கியப் புன்னகை தருகிறார், இந்திராணி!

கு.ஆனந்தராஜ் படங்கள்:  எம்.உசேன்

`` எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்''!

இந்திராணி பாட்டி உதவியுடன் கல்விப் பயணத்தில் வெற்றிநடை போட்டுக்கொண்டிப்பவர்கள் நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள்...

ஹேமமாலினி: ``நான் எத்திராஜ் காலேஜ்ல பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிச்சுட்டு இருக்கேன். குடும்ப வறுமை காரணமா, 2013-ல் பி.பி.ஏ., முதலாம் ஆண்டுல சேரமுடியாம தவிச்சுட்டு இருந்தேன். அப்போதான் சென்னையில செயல்பட்டுவரும் `ஃபியூச்சர் கிட்' அறக்கட்டளையின் கீர்த்திவாசன் சார் மூலமா, இந்திராணி பாட்டியின் அறிமுகம் எனக்கு கிடைத்ததுடன், அவருடைய முதலாம் ஆண்டின் இருபதாயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையும் கிடைத்தது. இந்திராணி பாட்டியின் உதவியால், இன்றைக்கு வெற்றிகரமா ஃபைனல் இயர் படிச்சுட்டு இருக்கிறேன். இந்திராணி பாட்டிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்!'' என்று கூறுகிறார் ஹேமமாலினி.

திவ்யா: ``நான் சென்னை பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில படிச்சுட்டு இருக்கிறேன். என்னோட அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால, போன வருஷம் என் எக்ஸாம்  ஃபீஸை கட்ட முடியாத சூழ்நிலையில இருந்தோம். எங்க குடும்ப உறவினரான பத்மினியின் மூலமா, இந்திராணி பாட்டியின் பதினெட்டாயிரம் ரூபாய் உதவித்தொகை எனக்கு கிடைச்சது. இந்திராணி பாட்டியால் நல்ல முறையில தேர்வில் வெற்றி பெற்று, இப்போ பத்தாவது படிச்சுட்டு இருக்கேன். தக்க சமயத்துல உதவி செய்த பாட்டிக்கு மிக்க நன்றி'' என்கிறார் திவ்யா.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism