Published:Updated:

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

Published:Updated:

ற்சாகம், பரபரப்பு, ஆடை அலங்காரம், சுற்றம் - நட்புடன் கூடி மகிழ்தல் என புத்துணர்வுக் கலவையாக விளங்குவது தீபாவளி கொண்டாட்டம். தீபாவளி பலகாரங்களுக்குத் தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு வாங்கி, விதம்விதமாக தயாரித்து, பலருக்கும் வழங்கி, பல நாட்கள் வைத்திருந்து சாப்பிட்ட

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

காலம் மலையேறி... ஸ்வீட் ஸ்டாலில் அரை கிலோ, கால் கிலோ பாக்கெட்டுகளை வாங்கும் வழக்கத்துக்கு பலரும் ஆளாகிவிட்டோம்.  என்னதான் அவசர உலகம் என்றாலும், நாமே தயாரித்து, சாப்பிடக் கொடுத்து, `வாயில் போட்டதுமே கரையுதே...’ `அட்டகாசமா இருக்கு!’, `இன்னொண்ணு கிடைக்குமா?’ என்பது போன்ற வார்த்தைகள் காதில் விழும்போது, மனதில் பரவும் திருப்தி அலாதிதானே?! இந்த மனத்திருப்தியை உங்களுக்கு பெற்றுத்தரும் விதத்தில், சூப்பர் ஸ்வீட் வகைகளின் ரெசிப்பிகளை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீபஒளி திருநாள் சமயத்தில், உங்கள் மனம் எனும் நதியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோட வாழ்த்துகள்!

காஜு கத்லி

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

தேவையானவை: முந்திரிப்பருப்பு - கால் கிலோ, சர்க்கரை - 100 கிராம், சர்க்கரை சேர்க்காத கோவா - 50 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த பிஸ்தா/பாதாம்/முந்திரி - சிறிதளவு.

செய்முறை: மிதமான சூடுள்ள நீரில் முந்திரியைப் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, இந்த விழுதை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டுக் கிளறவும்.

கலவை நன்கு சுருண்டு வரும்போது சர்க்கரை, கோவா இரண்டையும் சேர்த்துக் கிளறவும்.

கலவை வாணலியில் ஒட்டாத பதத்தில் வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி ‘டைமண்ட்’ வடிவத்தில் கட் செய்து, பொடித்த பிஸ்தா/பாதாம்/முந்திரி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

கோதுமை அல்வா

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

தேவையானவை: கோதுமை - 2 கப், பாதாம் பருப்பு - 100 கிராம், முந்திரி - 100 கிராம் (நெய்யில் சிவக்க வறுத்து ஒன்றிரண்டாக உடைக்கவும்), நெய் - 2 கப், சர்க்கரை - 5 கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை.

செய்முறை: கோதுமையை முதல் நாள் ஊறவைத்து, மறுநாள் காலை கிரைண்டரில் நைஸாக அரைத்து பால் எடுக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு 3 முறை பால் எடுக்கவும்.

பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, தோலெடுத்து, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். கோதுமைப் பாலில் தெளிந்த நீரை இறுத்துவிடவும்.

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

அடிகனமான வாணலியில் ஒன்றரை கப் நீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கெட்டிக் கம்பிப் பாகாகக் காய்ச்சவும். அரைத்த பாதாம் பருப்பைக் கோதுமைப் பாலுடன் சேர்த்து, வாணலியிலுள்ள சர்க்கரைப் பாகில் ஊற்றிக் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் குங்குமப்பூ, கேசரி பவுடர் சேர்த்து கரைத்து விட்டு, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும். நெய் தனியே பிரிந்து சுருண்டு வரும் சமயம் முந்திரி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மினி  ஜாங்கிரி

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

தேவையானவை: உளுந்து - 200 கிராம், அரிசி மாவு - 25 கிராம், கேசரி பவுடர் - கால் டீஸ்பூன், உப்பு  ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

சர்க்கரைப் பாகு செய்ய: சர்க்கரை - 200 கிராம், தண்ணீர் - 100 மில்லி, குங்குமப்பூ - சிறிதளவு, ஆரஞ்சு ஃபுட்கலர் - ஒரு சிட்டிகை, பன்னீர் (சுத்தமானது) - 2 டீஸ்பூன்.

செய்முறை: உளுந்தை ஊறவைத்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் அரிசி மாவு, உப்பு, கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலக்கி ஒரு பாத்திரத்தில் அரை மணி நேரம் மூடி வைக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து, பாகு காய்ச்சி அதனுடன் குங்குமப்பூ, பன்னீர், ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து இறக்கி ஆறவிடவும்.

அடிகனமான வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, ஜாங்கிரி பிழிவதற்காக இருக்கும் துளையிட்ட காடா துணியில் (ரிட்) மாவுக் கலவையை நிரப்பி, எண்ணெயில் சிறிய ஜாங்கிரிகளாக பிழியவும் (வேகமாகப் பிழிய வேண்டும்). மிதமான சூட்டில் வெந்தவுடன் எடுத்து, செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஜாங்கிரி பிழிவதற்கான `ரிட்’ கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கிறது.

சன்னாதால் பர்ஃபி

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

தேவையானவை: கடலைப் பருப்பு, மில்க் மெய்டு - தலா 100 கிராம், பால் - 3 கப், தேங்காய்த் துருவல், நெய் - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, மிகவும் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா - தேவையான அளவு.

செய்முறை: கடலைப் பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். பின்னர் அதனுடன் 2 கப் பால் சேர்த்து நன்றாக குழைய வேகவைத்து இறக்கி லேசாக ஆறவிடவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

அடிகனமான வாணலி யில் நெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த பருப்பு விழுது, மீதமுள்ள ஒரு கப் பால் சேர்த்துக் லேசாக சிவக்கும் வரை கிளறவும். பின்னர் அதனுடன் மில்க்மெய்டு சேர்த்து, கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் வரை நன்கு வேகவிட்டு கிளறவும். பிறகு, தேங்காய்த் துருவல், பாதாம், பிஸ்தா, ஏலக் காய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவைத்து துண்டுகள் போடவும்.

டிரை குலோப் ஜாமூன்

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

தேவையானவை: சர்க்கரை இல்லாத கோவா - 300 கிராம், மைதா மாவு - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், ஜாதிக் காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 100 கிராம், சர்க்கரை - 750 கிராம், எண்ணெய் அல்லது நெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரை யுடன் 500 மில்லி நீர் சேர்த்து, காய்ச்சி நன்கு கொதித்ததும் இறக்கி வைக்கவும்.

கோவா, மைதா மாவு, ஏலக்காய்த்தூள், ஜாதிக் காய்த்தூள், சிறிதளவு நீர் எல்லாவற்றையும் நன்கு கலந்து 100 கிராம் நெய் சேர்த்து மிகவும் மிருதுவாக பிசைந்து (கைக்கு மிகவும் அழுத்தம் கொடுக்காமல் பிசையவும்) சிறிது சிறிதாக எடுத்து உருட்டவும். மிதமாக காய்ந்த எண்ணெய் (அ) நெய்யில் உருட்டிய ஜாமூன்களை பொரித் தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும்.

ஜாமூன் நன்கு ஊறியதும் எடுத்து ஒரு தட் டில் அழகாக அடுக்கி பரிமாறவும்.

இனிப்பு சேவ்

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றேகால் கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவுடன் நெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். சர்க் கரையில் தண்ணீர் சேர்த்து கெட்டிப்பாகு காய்ச்சி இறக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை காராசேவு கரண்டியில் போட்டு தேய்த்து பொரித்து எடுக்கவும். பொரித்தவற்றை சர்க்கரைப் பாகில் போட்டுக் கிளறி ஆறவிட்டு பரிமாறவும்.

குறிப்பு: காராசேவு கரண்டி இல்லாவிட்டால், மாவை தேன்குழல் போல செய்து, சிறியதாக உடைத்துக்கொள்ளலாம்.

திரட்டுப்பால்

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை அல்லது பொடித்த கருப் பட்டி - ஒரு கப், தயிர் - ஒரு

வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான வாணலியில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் நன்கு சுண்டி கால் பாகம் ஆனதும், அதில் சர்க்கரை, தயிர் சேர்த்து நன்கு கிளறவும். சற்று தளர்வாக இருக்கும்போதே கீழே இறக்கி, நன்கு கிளறிக்கொண்டே இருந்தால், ஆற ஆற நன்கு கெட்டிப்படும் (சுருளக் கிளறி இறக்கினால் ஆறியதும் உதிர்ந்துவிடும் ஆனால், சற்று தளர்வான பதத்தில் இறக்கினால், ஆறியதும் சரியான பக்குவத்தில் திரட்டுப் பால் ரெடியாகும்).

குறிப்பு: கருப்பட்டி சேர்த்து செய்வதானால், தயிர் சேர்க்கத் தேவையில்லை.

படங்கள் :எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism