Published:Updated:

ஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்!

ஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்!

ஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்!

ஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்!

Published:Updated:

‘கிரிம்ஸன் பீக்’ - சமீபத்தில் வெளியான ஹாலிவுட் ஹாரர் படம். 19-ம் நூற்றாண்டின் பணக்கார

ஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்!

வர்க்கத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படத்தின் ஹைலைட்... காஸ்ட்யூம்ஸ். வெல்வெட்டும், லெதர்களும் ஆட்சி செய்த அந்தக் காலத்தின் உடை இயல்பை... நுணுக்கமாகவும், வியக்கும் வித மாகவும் நம் கண்களுக்கு விருந்தாகக் கொடுத்திருக்கும் காஸ்ட்யூம் டிசைனர் கேட் ஹாவ்லே... ஒரு பெண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்!

1880  மேல்தட்டு மக்களின் விருந்து உபசார விழாக்கள், நடனங்கள் என விரியும் காட்சிகளில் பெரிய பெரிய கவுன்கள், வசீகரிக்கும் பஃப் கைகள், பழங்கள், பட்டாம்பூச்சிகளைக் கோத்து தைத்தது போன்ற ஆடைகள் என படம் முழுக்க கேட் ஹாவ்லே... உருவாக்கிய உடைகள் ஆட்சி செய்கின்றன.

‘‘கதை, பிரிட்டனின் விக்டோரியா மகாராணி காலத்தில் நடப்பது. விக்டோரியா மகாராணி, இறந்துபோன தன் அம்மாவின் முடி, பக்கிள் பகுதிக்கு கைகளின் எலும்புகள் கொண்டு தனது பெல்ட்டை உருவாக்கினார் என்ற சர்ச்சை உண்டு. அதே பாணியில், நானும் இந்தப் படத்தில் உண்மையான முடியால் பெல்ட் தயாரித்தேன். சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் தவிர்த்து, விக்டோரியா ராணியின் மாடலிலேயே காஸ்ட்யூம் டிசைன் செய்தேன். வெல்வெட்டால் ஆன பழங்கள், பூக்கள் என நிறைய ஹேண்ட் வொர்க் செய்தோம். ஹீரோயின் மியா போட்டிருக்கும் சின்ன கம்மல், க்ளோஸ் அப் ஷாட்களில் கண்களைத் திருடும். அது நவரத்தினக் கற்களால் ஆனது. ஆடைகளை ஹைலைட் செய்யும் வகையில் ஷாட்கள் நிறைய வைக்கப்பட்டன. ஒவ்வொரு ஸீனுக்கான உடைகளையும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் பலமுறை ஆலோசித்தே வடிவமைத்தேன். இப்போது, செல்வந்தர்கள் மத்தியில் இந்த காஸ்ட்யூம்களுக்கு பலத்த வரவேற்பு!’’ என்று மகிழ்ச்சி சொல்லும் கேட் ஹாவ்லே..., ‘ஆபிரகாம் லிங்கன்: வேம்பயர் ஹன்டர்’, ‘தி ஹாபிட்’ போன்ற புகழ்பெற்ற படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் என்பதுடன், இவர் ஒரு கன்செப்ட் ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்!

சரி, ‘கிரிம்ஸன் பீக்’கின் கதையயையும் கொஞ்சம் பார்ப்போமா?!

இளம்பெண் எழுத்தாளரான மியா, சிறுவயதிலிருந்தே தான் சந்திக்கும் தொடர் அமானுஷ்யங்கள் குறித்து கதை எழுத, ‘உன் வயசுக்கு நீ காதல் கதை எழுது’ என்று நிராகரிக்கிறார் சீனியர் எழுத்தாளர். மியாவின் ஹாரர் கதைகளைப் படித்துவிட்டுப் பாராட்டும் அயல்நாட்டு வணிகர் டாம் மீது காதல்கொள்கிறார் மியா. மியாவின் பணக்கார அப்பா, டாமையும் அவருடைய சகோதரியையும் மிரட்டுகிறார். இதற்கிடையில் மியாவின் அப்பா கொடூரமாகக் கொல்லப்பட... தனிமை, அமானுஷ்யங்களில் இருந்து மீள காதலனைக் கைப்பிடிக்கிறாள் மியா. ஆனால், தன் கணவனின் கொடூர குணம் தெரிய வர, அவனிடம் இருந்தும், அவன் வீட்டில் தன்னை நெருங்கும் ஆபத்துகளிடம் இருந்தும் மியா எப்படித் தப்பிக்கிறாள் என்பது மீதிக்கதை.

ஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்!

பயமுறுத்தும் காட்சிகள் இல்லை. என்றாலும், எதிர்பாராத திருப்பங்கள், மர்ம முடிச்சுகளால் டெரர் காட்டுகிறார் இயக்குநர் கில்லர்மோ டெல் டோரா.

ஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்!

படம் பார்க்கலாம்... ஹாரர்க்கு கொஞ்சம் பயப்படலாம்... ஆடை களை நிறைய ரசிக்கலாம்!

-ஷாலினி நியூட்டன்