Published:Updated:

ஹேப்பி லேப்பி!

கோ.இராகவிஜயா

ஹேப்பி லேப்பி!

கோ.இராகவிஜயா

Published:Updated:

ரடி பொம்மைகளைக் கட்டிப்பிடித்துத் தூங்கிய காலம் போய், லேப்டாப்பில் கொரியன் சீரியல்கள் பார்த்துக்கொண்டோ, ஃபேஸ்புக்கில் போட்ட ஸ்டேட்டஸுக்கு எத்தனை லைக்ஸ் என்று செக் செய்துவிட்டோதான் அந்த நாளை முடித்து இமைகளை மூடுகிறோம். ஆனாலும், அதை முறையாகப் பராமரிக்காமல் ஏதாவது பிரச்னை என்றால்தான் ‘அய்யோ, வட போச்சே!’ என்று அலறுகிறோம். உங்கள் செல்ல ‘லேப்பி’யின் வாழ்நாளைக் கூட்ட சில டிப்ஸ் இங்கே..!

சார்ஜ் ... டிஸ்சார்ஜ்!

இரவு முழுக்க சார்ஜ் போட்டுவிட்டு, காலையில் பயன்படுத்துவது, லேப்டாப்பை கொடூரமாகக் கொலை செய்வது போன்றது. இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால், ஒரு மணி நேரம் உபயோகிக்க வேண்டும். பின்னர் சார்ஜ் மினிமம் லெவெலுக்கு வந்த பிறகுதான் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். இதுதான் `சார்ஜ்... டிஸ்சார்ஜ்' ஃபார்முலா. (அப்போ பாதிப் பேரு இங்க ‘லேப்பி’ கொலகாரனுங்கதான்!)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெம்பரேச்சர் கவனிக்க..!

சார்ஜ் செய்துகொண்டே வேலை செய்தால் லேப்டாப் விரைவில் சூடாவதோடு சார்ஜ் செய்யும் வேகமும் தடைபடும். அதிகமாகச் சூடேறும் லேப்டாப்களுக்கு, குளிரூட்டும் குட்டி புராசஸிங் ஃபேன் வாங்கிப் பயன்படுத்தலாம். அதேபோல ஏ.சி அறையில் லேப்டாப் பயன்படுத்திவிட்டு, உடனே வெயிலில் எடுத்துச் சென்று வேலை செய்யக்கூடாது. சீரான தட்பவெப்பம் உங்களுக்கு மட்டுமில்ல, லேப்டாப்புக்கும் மிக முக்கியம். (விட்டா சன்ஸ்கிரீனே போடச் சொல்வாங்க போல!)

ஹேப்பி லேப்பி!

வென்டிலேஷன் முக்கியம்!

சாதாரணக் கணினிகளைவிட, மடிக்கணினிகள் கொஞ்சம் சென்சிட்டிவ். லேப்டாப் உள்பாகங்கள் மிகவும் சிறியது. பயன்படுத்தத் தொடங்கியதும் புராசசர்ஸ் உடனடியாக சூடாகி மற்ற உட்பாகங்களையும் விரைவில் சூடாக்கும். எனவே, வென்டிலேஷன் சரியாக இருக்கும் இடத்தில் வைத்து லேப்டாப்பை பயன்படுத்துவது மிக முக்கியம். தலையணை, மெத்தை, கார் ஸீட் போன்ற காற்று அடைபடக் கூடிய பொருட்களுக்கு மேல் லேப்டாப்பை வைத்துப் பயன்படுத்தக் கூடாது.
(நகரு தம்பி காத்து வரட்டும்!)

லேப்டாப்.... ‘லேப்’பில் நோ!

லேப்டாப்பை மடியின் மேல் வைத்து உபயோகிப்பதால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைப் பேறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள் பல. அதனால் லேப்டாப்பை எப்போதும் நாற்காலியில் வைத்தே பயன்படுத்த வேண்டும். (அப்புறம் எதுக்குய்யா அதை ‘மடிக்கணினி’னு சொல்றாங்க?!)

கலர் கலர் கவர்!

லேப்டாப்பை எப்போதும் அதற்குரிய பையில் வைத்தே எடுத்துச் செல்ல வேண்டும். விதவிதமான டிசைன் மற்றும் கலர்களில் வரும் கவர்களை வாங்கிப் பயன்படுத்தி கெத்துக்காட்ட சொல்லித் தரவேண்டுமா என்ன?! (ரெண்டு பேக் பார்சல்ல்ல்!)

சுத்தம் அவசியம்!

வாரத்துக்கு ஒருமுறையாவது லேப்டாப்பை சுத்தம் செய்யாவிட்டால், செயல்பாடு விரைவில் பாதிப்படையும். அதற்காக வாசல் தெளிப்பது போல தண்ணீர் தெளித்துவிடாமல், அதற்கென பிரத்யேகமாக இருக்கும் க்ளீனிங் சொல்யூஷனை காட்டனில் தேய்த்து, மெதுவாக ஸ்கிரீனை சுத்தம் செய்ய வேண்டும். (நாமளே தினம் குளிக்க மாட்டோம். இதுல குளிப்பாட்டி விடுற வேல வேற..!)

எறும்புகள்... எச்சரிக்கை!

ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே, அதைக் கீ-போர்டில் சிந்திக்கொண்டே லேப்டாப்பில் வொர்க் செய்தால், மறுநாள் லேப்டாப்பைத் திறக்கும்போது குடும்பம் குடும்பமாக படையெடுக்கும் எறும்புக் கூட்டம். தொல்லை கட்டுப்படுத்த முடியாமல் போனால், ‘சிட்டி ரோபோ’ போல லேப்டாப்பை டிஸ்மான்டில் செய்துதான் சுத்தம் செய்ய முடியும்... எச்சரிக்கை! (லட்ச ரூபாய் லேப்டாப்புக்கும் தம்மாத்துண்டு எறும்பு எமனாகலாம் என்பதுதான் வாழ்க்கைத் தத்துவம்!)

இந்த டிப்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணினா, உங்க லேப்பி ஹேப்பி அண்ணாச்சி..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism