Published:Updated:

லெஹாங்காவுக்கு மாற்று... எத்னிக் கவுன்!

காஸ்ட்யூம் ஸ்டுடியோ!

லெஹாங்காவுக்கு மாற்று... எத்னிக் கவுன்!

காஸ்ட்யூம் ஸ்டுடியோ!

Published:Updated:

தீபாவளி என்றாலே புத்தாடைகளுக்கான பிளானிங் தடபுடலாக இருக்கும். ‘கொஞ்சம் வித்தியாசமா,

லெஹாங்காவுக்கு மாற்று... எத்னிக் கவுன்!

இன்னும் கிராண்டா...’ என்று விரும்பும் பெண்களுக்கு... சென்னை, அண்ணா நகரில் உள்ள ‘ஸ்டுடியோ 149 பை ஸ்வாதி’ பொட்டிக்கின் உரிமையாளர் ஸ்வாதி ரெக்கமண்ட் செய்வது... எத்னிக் கவுன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லெஹாங்காவுக்கு மாற்று... எத்னிக் கவுன்!

‘‘பொதுவா பொங்கல்னா பட்டுப் பாவாடை, தாவணி, புடவைனு டிரெடிஷனல் ஸ்டைலில் டிரெஸ் தேர்வு செய்ற நம்ம பொண்ணுங்க, அதுவே தீபாவளிக்கு கொஞ்சம் ட்ரெண்டியா, கிராண்டா அனார்கலி சுடி, லெஹங்கானு நார்த் இண்டியன் டச்ல டிரெஸ் தேடுவாங்க.

லெஹெங்காவைப் பொறுத்தவரை எல்லாருக்கும் சூட் ஆகாது. உயரமா, பாடி ஷேப் ஃபிட்டா இருக்கிறவங்கதான் அதை கான்ஃபிடன்ஸோட அணியலாம். நம்ம ஊர் பொண்ணுங்க பெரும்பாலும் ஆவரேஜ் ஹைட்தான். அவங்களுக்கு லெஹங்கா போடும்போது மொத்தமா போர்த்துன மாதிரி, பாடி ஷேப் தெரியாமப் போயிடும்.

லெஹெங்காவோட இன்னொரு மைனஸ், இடுப்பு தெரியறது மாதிரியான டிசைன். நம்ம ஊர்ல கொஞ்சம் ஹை சொசைட்டியில இதை ஒரு விஷயமா எடுத்துக்க மாட்டாங்க. ஆனா... மிடில் கிளாஸ்ல, ஆசையா லெஹங்கா வாங்கிட்டு, இடுப்பை மறைக்கத் துப்பட்டாவை புடவை மாதிரி சுத்திப்பாங்க. இதனால அழகா, அகலமா குடைமாதிரி டிசைன்ல வரும் லெஹெங்காவோட கவர்ச்சியே காணாமல் போயிடும். கூடவே, லெஹெங்காவோட ஹைலைட் ஆன ஹெவி வொர்க்கையும் துப்பட்டா மறைச்சுடும். இதுல இத்தனை சிக்கல்கள் இருக்கிறதாலதான், லெஹங்காவுக்கு மாற்றா நான் எத்னிக் கவுனை சஜஸ்ட் பண்றேன்!’’ எனும் ஸ்வாதி, மாடல், நடிகை பார்வதி ஓமனக் குட்டனுக்கு டிசைன் செய்திருக்கும் இந்த எத்னிக் கவுன் டிசைனைக் கைகாட்டுகிறார்.

“பார்ட்டி வேர் வெஸ்டர்ன் கவுன். அதை அப்படியே எத்னிக் டச்ல டிசைன் பண்ணியிருக்கேன். இடுப்புப் பகுதி கொஞ்சம் அகலமா இருக்கிற நம்ம பொண்ணுங்களுக்கு இது பொருத்தமா இருக்கும். பொதுவா லெஹெங்கானாலே ஹெவி வொர்க்தான். ஆனா, எத்னிக் கவுன்ல ஹெவியாவும் வொர்க் பண்ணிக்கலாம்,... வொர்க்கே இல்லாம சில்க், ஷிம்மர் ஜியார்ஜெட் மாதிரியான ரிச் மெட்டீரியல்ல சிம்பிளா டிசைன் பண்ணாலும் கிராண்ட் லுக் கிடைச்சுடும்.

லெஹாங்காவுக்கு மாற்று... எத்னிக் கவுன்!

எத்னிக் கவுனோட இன்னொரு ப்ளஸ் பாயின்ட், கம்ஃபர்ட்னெஸ். லெஹெங்கா நாள் முழுக்க போட கம்ஃபர் டபிளா இருக்காது. பொம்மை மாதிரி ஒரே இடத்தில் செட்டில் ஆக வேண்டியதுதான். ஆனா, எத்னிக் கவுன் போட்டுக்கிட்டா மான் மாதிரி துள் ளிக் குதிச்சாலும் சௌகரியமா இருக் கும்!

சல்வார், லெஹெங்கானு போரடிச்சுப் போன பொண்ணுங்க, எத்னிக் கவுன் டிக் பண்ணலாம். இதை கிராண்ட் ஃபங்ஷனுக்கும் போடலாம், ஆக்சஸரீஸ் தவிர்த்து ஒரு லாங் கம்மல் மட்டும் போட்டுட்டு காலேஜ் ஃபங்ஷனுக்கும் ஆஜராகலாம்!’’ என்று  சொன்னவரிடம்,

சென்ற இதழில் சஸ்பென்ஸோட முடித்திருந்த ‘ஸ்டுடியோ 149 பை ஸ்வாதி’ கடைப் பெயரின் காரணம் கேட்டோம்.

“இது என்னோட 149-வது ஷோரூம் இல்ல... இந்த ஷோரூமோட டோர் நம்பர் 149...’’

- குறும்பாகக் கண்ணடித்தார் ஸ்வாதி!

•  பார்வதி போட்டிருக்கும் கவுனோட டாப் பார்ட்டுக்கு, சில்க் அண்ட் டிஷ்யூ மெட்டீரியல் பயன்படுத்தியிருக்கேன். அதுல ஜியோமெட்ரிக்கல் டிசைன்ல மிரர் வொர்க் டிசைன். டாப் அண்ட் பாட்டத்தை பார்டிஷன் பண்ண ஒரு சின்ன இன்ட்ரஸ்டிங் எலிமென்ட்டா மிரர் அண்ட் ஜர்தோஸி வொர்க்ல பெல்ட் மாதிரியான ஒரு டிசைன்.

•  பாட்டம் பார்ட்டுக்கு ஷிம்மர் ஜியார்ஜெட் மெட்டீரியல்ல ‘டை அண்ட் டை’ சாயம் மூலமா, ஒரே கலரில் லைட் அண்ட் டார்க் ஷேட் கொண்டு வந்திருக்கேன். இப்போதைய ட்ரெண்டான பிரைட் நியான் கலர்களுக்குப் பதில், நம்ம எத்னிக் கலர்ஸையே பிரைட்டா காட்ட முடியும்.

•  டாப்போட மேல் பகுதியின் ஜியாமெட்ரிக் டிசைனுக்கு கான்ட்ராஸ்டா, பாட்டம் ஸ்கர்ட்டோட கீழ்ப்பகுதியில ஜர்தோஸி பூ வேலைப்பாடு, டிசைனின் மெருகு கூட்டுது. மொத்தமா பார்க்கும்போது, அது கண்களை உறுத்தாத வகையில் மெர்ஜ் ஆகிடும்.

•  பாட்டம் பகுதியின் ஷிம்மர் ஜியார்ஜெட் மெட்டீரியல் ட்ரான்ஸ்பரன்டா இருக்கிறதால பாவடைக்குள் காட்டன், சாட்டின்னு மொத்தம் ஐந்து லேயர் லைனிங் இருக்கு. அது உடலோட ஒட்டாம கொஞ்சம் பஃபியா காட்டும்.

•  கவுனின் பின் பக்கம், எவர் க்ரீன் ட்ரெண்டான பேக்லெஸ் வித் டோரி (கயறு) வொர்க் டிசைன். இதை ஒல்லி, குண்டுனு உடல்வாகுக்கு ஏத்த மாதிரி டைட்டாவும் லூஸாகவும் அட்ஜஸ்ட் செய்துக்கலாம். மாடல் கம் நடிகைனா...  பேக்லெஸ் ஓகே. நம்ம பொண்ணுங்க அந்த ஓபன் டிசைனை சீ த்ரூ நெட் மெட்டீரியல் அல்லது டிஷ்யூ மெட்டீரியலில் கவர் செய்து டிசைன் பண்ணிக்கலாம். இதே டிசைனில் விரும்பினால் ஸ்லீவ்ஸும் அட்டாச் பண்ணிக்கலாம்.

இந்துலேகா.சி   படங்கள்:எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism