தங்களின் ஸ்வீட் தீபாவளிக் கொண்டாட்டங்களை ஷேர் பண்ணுறாங்க, ச்சுவீட் ஹீரோயின்ஸ்!

விஜயலட்சுமி

''இந்த வருஷ தீபாவளி, எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, இது என் கணவர் செரோஸுடன் சேர்ந்து கொண்டாடப் போற தலைதீபாவளி. எப்பவும் தீபாவளிக்கு அம்மா நிறைய ஸ்வீட்ஸ் பண்ணினாலும், தீபாவளி அன்னிக்கு காலையில அப்பா செய்ற இட்லி, மட்டன் கிரேவிதான் என்னோட ஆல்டைம் ஃபேவரைட். அவ்ளோ சூப்பரா, சுள்ளுனு இருக்கும். மதியம் பிரியாணியை வெளுத்து வாங்குவோம். எப்பவும் தீபாவளியை எங்க வீட்டுலதான் கொண்டாடியிருக்கேன். ஃப்ரெண்ட்ஸைகூட மீட் பண்ணப் போறதில்ல. இந்த வருஷம் செரோஸ் ஏதாச்சும் சர்ப்ரைஸ் தர்றாரா பார்ப்போம்!''

இட்லி, மட்டன் கிரேவி.... கிரேட் காம்பினேஷன்யா!

சிருஷ்டி

''நான் மும்பைப் பொண்ணு. அங்க எல்லாம் அஞ்சு நாட்கள் தீபாவளி கொண்டாடுவோம். சாயந்திரம் ஆனா வீட்டைச் சுத்தி விளக்கேற்றி, சிட்டியே ஜொலிக்கும். காலையில் அஞ்சு டு ஏழு மணி, மாலையில் ஆறு டு ஒன்பது மணினு அஞ்சு நாளும் பட்டாசு வெடிப்போம். தினமும் வீட்டுக்கு உறவினர்கள் வருவாங்க. ஸ்வீட்ஸ் கமகமக்கும், பார்ட்டி பண்ணுவோம். அம்மா மஹாராஷ்டிரா ஸ்பெஷல் கரந்தி, சக்ரி, சந்திரமா, நான்கு வகை லட்டு, மூணு வகை குலாப்ஜாமூன், ஜிலேபி, ரசகுல்லா செஞ்சு அசத்திடுவாங்க. பட், ஜிலேபி மட்டும் எனக்குப் பிடிக்காது. அஞ்சாவது நாள்... ஊரே ஹைபர் மூடுல இருக்கும். ஆடித் தீர்த்திடுவோம். தமிழ்நாட்டுல தீபாவளி எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது. மே பி... இந்த வருஷம் எனக்குத் தமிழ்நாட்டுத் தீபாவளியாவும் இருக்கலாம்!''

சக்ரி, சந்திரமா எல்லாம் கொஞ்சம் பார்சல் ப்ளீஸ்மா!

ரேஷ்மி மேனன்

''நான் மலையாளி. அதனால என்னோட தீபாவளி ரொம்ப ஸ்பெஷலா எல்லாம் இருக்காது. ஸ்வீட்ஸ் நிறைய சாப்பிட்டு, ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமா சேர்ந்து படத்துக்குக் கிளம்புவோம். இந்த வருஷம் தல படம் பார்க்கிறதுதான் தீபாவளி பிளான். வரிசையா ஷூட்டிங் போயிட்டு, தீபாவளி லீவ் புண்ணியத்துல ஒரு வருஷம்கழிச்சு கேரளாவுல எங்க வீட்டுல இருக்கேன். என்ஜாய் பண்ணணும்... செமையா என்ஜாய் பண்ணணும்!''

படத்துக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சா?!

ஐஸ்வர்யா ராஜேஷ்

''சின்ன வயசுல இருந்த தீபாவளி சந்தோஷம் வளர வளர குறைஞ்சிடுச்சுனு தோணுது. இன்னிக்கு தினம் தினம் கொண்டாட்டமா போகுது. ஆனா, அப்போ வருஷத்தில் ஒரு நாள் வர்ற தீபாவளிதான் பெரிய செலிப்ரேஷனா இருக்கும். நாங்க காலனியில இருந்ததால, யாரு முதல்ல தீபாவளி டிரெஸ் போட்டு, வெடி வெடிக்க ஆரம்பிக்கிறாங்கனு குட்டீஸ்குள்ள ஒரு போட்டி இருக்கும். ஃப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸுக்கு எல்லாம் எங்க வீடுதான் தீபாவளி ஜங்ஷன். அப்பா, அண்ணா, அம்மானு எங்க வீட்டில் எல்லோருமே சூப்பரா விருந்தோம்பல் பண்ணுவோம். மில்க் ஸ்வீட்ஸ், ரசகுல்லா, ரசமலாய் பாக்ஸ் எல்லாம் தீர்ந்து போறதுக்கு ஐஸ்வர்யாதான் பொறுப்பு. இப்போ எல்லாம் தீபாவளிக்கு புடவை கட்டிக்கிட்டு, வெடியை வேடிக்கை மட்டும்தான் பார்க்கிறேன். இந்த தீபாவளிக்கு எங்க வீட்டுல சிக்கன், மட்டன், ஃபிஷ்னு என் சமையல்தான் மணக்கப் போகுது.

வெல்கம்!''

ரொம்ப நல்லவங்க! நீங்க மட்டும்தாங்க இன்வைட் பண்ணியிருக்கீங்க!