Published:Updated:

``நடிச்சு பழிவாங்குனது போதாதா?!’’

பட்டிமன்ற ஹீரோ

``நடிச்சு பழிவாங்குனது போதாதா?!’’

பட்டிமன்ற ஹீரோ

Published:Updated:

தீபாவளி, பொங்கல் சிறப்புப் பட்டிமன்ற மேடை ஹீரோக்களில் ஒருவர்... மோகனசுந்தரம் செல்வராஜ். நாட்டுநடப்பு, மாறிப் பாழாகும் வாழ்க்கை முறை பற்றியெல்லாம் சிரிக்கப் பேசி, சிந்திக்க வைப்பவர்.

``நடிச்சு பழிவாங்குனது போதாதா?!’’
``நடிச்சு பழிவாங்குனது போதாதா?!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நான் சென்னை ஆளு. எம்.பி.ஏ ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சுட்டு, பட்டிமன்றப் பேச்சா ளரான வரலாறு உடையவன். இப்போ ஹாஸ்பிடல் அட்மினிஸ் டேட்டரா இருக்கேன். சென்னைத் தமிழ்தான் என் ஸ்பெஷல். ஆனா, சிலர் எங்கிட்ட, `என்ன சார். மேடையில லோக்கல் லாங்குவேஜ் பேசுறீங்க. உங்க பிம்பமே மாறுதே’னு கேப்பாங்க. `பொறந்த ஊருல பேசி வளர்ந்த லோக்கல் தமிழ்தான்யா என் அடையாளமே. நாகரிகம்னு நாக்கை மாத்திப் பேச எனக்குத் தெரியாது’னு சொல்லுவேன். ஊருக்காக சாயம் பூசிக்கிற பல விஷயங்கள்ல ஒண்ணாதான் இன்னிக்கு தீபாவளியும் ஆகிப்போச்சு!’’ என்ற மோகன சுந்தரம் செல்வராஜ் வெடித்த  `சர சிரிவெடிகள்’ இதோ...

•  ‘‘வருஷம் ஒரு நாள் தீபாவளி வருது, அந்த நாள்ள காலைல நேரத்துலயே எந்திரிச்சு குளிச்சிட்டு கிருஷ்ணன வேண்டி இருக்கோமா? `ஏ... கிருஷ்ணா, ஜனங்கள துன்பப்படுத்தின நரகாசுரனை அழிச்சதுக்கு நன்றி. ஆனா, நீ அத்தோட நிறுத்திட்ட... இப்ப வந்து பாரு. ஏகப்பட்ட நரகாசுரன்கள் இருக்காங்க. எங்க ஆபீஸ்லயே மூணு பேரு இருக்கான்’னு யாராவது வேண்டிக்கிறோமா? ஆனா, தீபாவளிக்கு மறுநாள், ‘இந்த தீபாவளிக்கு மதுவிற்பனை 50 கோடியைத் தாண்டியது’னு பேப்பர்ல போட்டிருப்பான். இப்படி குடிக்கச் சொல்லி எந்த மத புராணத்துல சொல்லி வெச்சுருக்கு? இப்போ புரியுதா தீபாவளியை பல பேரு எங்க ‘கொண்டாடுறாங்க’னு?!

•  இந்த நுகர்வோர் கலாசாரம், தீபாவளி சமயத்துல தலைவிரிச்சு ஆடும். துணிக்கடையில இருந்து நகைக்கடை வரை நம்ம பர்ஸைக் குறிவெச்சு, விளம்பரக் குண்டு போடுவாங்க. இப்போ மொபைல் கடையில டிஸ்கவுன்ட் கொடுக்கறானுங்க... `விநாயகர் சதுர்த்திய முன்னிட்டு’னு! மொபைலுக்கும், விநாயகருக்கும் என்னடா சம்பந்தம்? அட்வர்டைஸ்மென்ட் இன்னும் பயமாருக்குது, ‘உன்னதமானவர்கள் வாங்கும் ஒரே வேஷ்டி’ங்கறான். அந்த வேஷ்டிய வாங்காதவன் கேடுகெட்டவன்னு அர்த்தமா?

•  சிலர் துணி வாங்குனா செடி கொடுத்து... அந்த செடிய வாங்கறதுக்கு அடிதடியே நடக்குது. நான் துணிக்கடைக்கு கிளம்புறேன், என்னோட வொய்ஃப் ‘அந்தக் கடையில செடி கொடுக்கறாங்க... வாங்கிட்டு வாங்க’னுது. பாயை சுருட்டி வைக்கவே வீட்ல எடம் இல்ல! எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆட்டோ டிரைவரு ரெண்டு செடி வாங்கிட்டுப் போனார். `நீ குடிசைமாற்று வாரிய வீட்டுலத்தான இருக்கிற.. இந்த செடிய எங்க வளர்ப்ப’னு கேட்டா,  ‘யார் சார் வளர்க்கறது அத.. காயவெச்சு பாய் லர்ல போடுவேன்.. சுடு தண்ணிக்கு ஒதவும்’னு சொல்றாரு.

•  போன வருஷம் சிக்கன தீபாவளி கொண் டாட முடிவெடுத்தேன். உடனே என் பக்கத்து வீட்டுக்காரர், ‘ஏங்க... உங்க குடும்பத்துல யாராச்சும் செத்துப் போயிட்டாங்களா?’னு கேட்குறாரு. இப்படித்தான் அடுத்தவன் கேள்வி கேட்பான்கிறதுக்காகவாவது, தாம்தூம்னு தீபாவளி கொண்டாட வேண்டியிருக்கு!

•  இப்ப இருக்கற குடும்பங்கள்ள பத்துப் பேரு இருக்கான்னா, நாலு பேருக்கு சர்க்கரை வியாதி இருக்கு. தீபாவளிக்கு இரண்டு நாள் கழிச்சு சர்க்கரை வியாதி ஹாஸ்பிடல்ல போய்ப் பாருங்க... அவ்ளோ கூட்டம் நிக்குது! ஆனாலும், வீடுகள்ல விஷப்பரீட்சை எல்லாம் பண்ணுவாங்க. ஏதாவது ஒரு ஸ்வீட்ட அப்பத்தான் புதுசா ட்ரை பண்ணுவாங்க. போன தீபாவளிக்கு என்னோட வொய்ஃப், சிவப்பா ஒண்ணு கொண்டு வந்து வெச்சா. என்னனு பார்த்தா... தீபாவளி லேகியம்.  ‘ஏம்மா, உனக்குத்தான் லேகியம் பண்ணத் தெரியாதே... எப்படிப் பண்ணே?னு கேட்டேன். டி.வி-யில அந்த நடிகை இதை செஞ்சு காண்பிச்சாங்கனுச்சு. ‘ம்... நடிச்சு பழிவாங்குனது போதாதா?!’னு நினைச்சுக்கிட்டேன்.

•  குடும்பத்துல எல்லாரும் மகிழ்ச்சியா இருப்பாங்கனு ரொம்ப கஷ்டப்பட்டு, இடிபட்டு கடைக்குப் போயி துணிமணி, பட்டுப்புடவ வாங்கி, அதை டெய்லர்கிட்ட கொடுத்து, இப்டி தைக்கல, அப்டி தைக்கலனு சண்டப்போட்டு வாங்கிட்டு வருவாங்க பொம்பளைங்க. ஆனா, பண்டிக நாளன்னிக்கு அந்த புதுத் துணிய அவங்க உடுத்தறாங்களானா இல்ல. வீட்டுல இருக்கிற மொத்த வேலையையும் முடிக்கிறதுக்குள்ள... தாவு தீர்ந்துடும். கடைசி வரைக்கும் புதுத் துணியைப் போடவே மாட்டாங்க. ஆனாலும்கூட மத்தவங்கள்லாம் ஊர் முழுக்க `ஹேப்பி தீபாவளி!’னு செல்போன்ல கூவிக்கிட்டிருப்போம்.

இத்தனை இம்சைகள் இருந்தாலும்... இந்தத் தீபாவளிக்கும் ரயில்வே ஸ்டேஷன்ல டி.டி.ஆர் கோட்டைப் புடிச்சு தொங்கிட்டு, உறவுகளைப் பார்க்க ஊருக்குப் போகத் தவிச்சுக் கிடப்பான் பாருங்க... துணி, வெடி, ஸ்வீட்ஸ், டி.வி-யை எல்லாம்விட, அந்த அன்புச் சங்கமம்தான் தீபாவளி!’’

வே.கிருஷ்ணவேணி படம்:சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism