Published:Updated:

பெடிக்யூர்... பட்டுப்போன்ற பாதங்களுக்கு!

கோ. இராகவிஜயா

பெடிக்யூர்... பட்டுப்போன்ற பாதங்களுக்கு!

கோ. இராகவிஜயா

Published:Updated:

ரீ-சார்ஜ் கடையைத் தேடி நடையோ நடைனு அலையுறதும், ஷாப்பிங் மாலில் ஒரு டாப் எடுக்க

பெடிக்யூர்... பட்டுப்போன்ற பாதங்களுக்கு!

நாலு ஃப்ளோர் ஏறி இறங்குறதும் பெண் களுக்கு சலிக்காம இருக்கலாம். ஆனா, பாதங்களுக்கு? இப்படி ஓவர் ட்யூட்டி பார்த்து பஞ்சர் ஆன பாதங்களுக்கான காஸ்மெடிக் ட்ரீட்மென்ட்... பெடிக்யூர்! அழுக்கு, வெடிப்பு, சொரசொரப்பு நீங்கி, நகங்களுக்கு புத்துணர்வு அளித்து, கால் தசைகளை ரிலாக்ஸ் செய்து, பட்டுப்போன்ற பாதங்களைப் பெறுவதற் கான ‘பெடிக்யூர்@ ஹோம்’ செய்முறைகள் இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1.  பக்கெட்ல வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, அதில் ரெண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா, கொஞ்சம் ஹேண்ட் வாஷ் அல்லது ஷாம்பூ கலந்து நுரை வரும் வரை கலக்குங்க. பாதங்கள் முழுக்க பக்கெட்டுக்குள் மூழ்கியிருக்க, 15 நிமிடங்கள் ரிலாக்ஸ்டா உட்காருங்க. தசைகள் மிருதுவாகவும், நகக்கண்கள் மென்மையாகவும், அழுக்குகள் நீங்கவும் இது உதவும்.

2. பிறகு பாதங்களை வெளிய எடுத்து, ஒரு காட்டன் துணியால ஒத்தடம் கொடுப்பது மாதிரி தண்ணியை ஒற்றி எடுங்க. ஒரு சொட்டு ஆலிவ் எண்ணெயை ஒவ்வொரு நகக்கண் மீதும் விடுங்க. இது நகங்களுக்குப் போஷாக்கு கொடுக்குறதோட, ஷேப் செய்ய ஏதுவா நகங்களை மென்மை யாக்கும்.

3.சில நிமிடங்கள் கழிச்சி, விருப்பத்துக்கு ஏற்ப நகங்களை ஷேப் செய்யலாம். நகம் ஊறியிருப்பதால் கட் செய்வது, ட்ரிம்மரில் ஷேப் செய்வது எல்லாம் சுலபமா இருக்கும். கவனிக்க வேண்டிய விஷயம்... நகத்தை ரொம்ப ஆழமா, சதைப்பகுதி வரை க்ளோஸா வெட்ட வேண்டாம். வெட்டி முடிச்சதும் ஒரு காட்டன் துணியால் ஆலிவ் ஆயிலை துடைச்சு எடுத்துடுங்க.

பெடிக்யூர்... பட்டுப்போன்ற பாதங்களுக்கு!

4 .நகங்கள் வேலை ஓவர். இப்போ மூவிங் டு பாதங்கள். ஸ்கரப்பரால் பாதங்களை அழுத்தித் தேய்ச்சு, பிரஷ் கொண்டு பாதங்கள், கால் விரல் இடுக்குகளில் எல்லாம் அழுக்கை நீக்கி, தண்ணீரால் அலசுங்க.

பாதம் மற்றும் பாத இடுக்குகளில் தேய்க்க...ஸ்கிரப் (கடைகளிலும் வாங்கலாம், சீனி, சீதாப்பழ கொட்டை போன்றவற்றை மிக்ஸியில் பொடித்து ஹோம்மேடு ஸ்கிரப்பும் செய்துகொள்ளலாம்). இதை பாதங்களில் தடவி கொஞ்ச நேரம் ஊற வெச்சு ஸ்கிரப் செய்து, கழுவுங்க. கால்களை நல்லா துடைச்சு, மாய்ஸ்ச்சரைஸர் தடவிக்கோங்க.

ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் பாதங்கள்!

அழகு ஒருபுறம் என்றால், பாதங்கள் ஆரோக்கியத்துக்கு எந்தளவு அஸ்திவாரமாக இருக்கின்றன என்பதைப் பற்றிச் சொல்கிறார், சித்த மருத்துவர் ராதா கண்ணன்...
‘‘ஒரு பெண் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 10,000 அடிகள் நடப்பதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்று. உடலில் மூளை, இதயம், நுரையீரல் போன்ற ராஜ உறுப்புகளுக்கு அடுத்து முக்கியமாக இயங்கும் உறுப்பு, பாதங்கள். ஆனால், அதற்கான முக்கியத்துவம் கொடுத்து யாரும் அவற்றைக் கவனிப்பதில்லை. சொல்லப்போனால், பாதங்களின் ஆரோக்கியத்தை வைத்தே ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எடைபோட்டுவிடலாம். உடலின் வெவ்வேறு உட்பாகங்களின் 7,000 நரம்புகள், பாதங்களில்தான் முடிவடைகின்றன. குறிப்பாக, கட்டைவிரலுக்குப் பக்கத்தில் உள்ள விரலில் முடிவடையும் நரம்புகள்... கர்ப்பப்பையையும், இதயத்தை இணைக்கவல்லவை. அதில் மெட்டி அணிவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்தி கர்ப்பப்பையை வலுவாக்க முடியும் என்பதால்தான் மெட்டி பெண்களுக்கு கட்டாய ஆபரணமாக்கப்பட்டது!’’

இதைத் தொடர்ந்து செய்து வந்தா, பாதவெடிப்பு, கீறல், நகக்கண் பெயர்ந்து போகும் பிரச்னைக்கு எல்லாம் கெட் அவுட் சொல்லி, பாதங்களைப் பராமரிக்கலாம் பியூட்டிஃபுல்லா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism