பேப்பர் கொண்டு கலைப் பொருட்களை உருவாக்கும் க்வில்லிங் கலையை கற்றுத்தரும் இந்த `க்வில்லிங் கிளாஸ்' பகுதியில் இம்முறை சென்னையைச் சேர்ந்த சுந்தரி கிளாஸ் எடுக்கிறார்.

க்வில்லிங் கிளாஸ்..!

‘‘படித்தவர்கள்தான் சம்பாதிக்க முடியும் என்பதெல்லாம் இல்லை. திறமையும், ஆர்வமும் இருந்தால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்வில்லிங் கிளாஸ்..!

யாரும் அளவில்லாத வருமானம் ஈட்டலாம்!’’ என்று எனர்ஜெட்டிக்காக ஆரம்பித்தார் சுந்தரி.  இவர் சென்னை, தியாகராய நகரில் உள்ள ‘சில்பா ஆர்ட்ஸ்’ஸின் உரிமையாளர். 50 வயதான இவர், கிராஃப்ட்டில் மாதம் 25,000 ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டி வருபவர். க்வில்லிங் செய்யத் தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் க்வில்லிங்கின் அடிப்படை வடிவங்களை நமக்குக் கற்றுத்தருகிறார் சுந்தரி...

1. க்வில்லிங் ஊசி - க்வில்லிங் பேப்பர் சுற்ற வசதியாக மேல்புறம் துளை மற்றும் பிளாஸ்டிக் கைப்பிடி உடையது.

2. 3எம்.எம் க்வில்லிங் பேப்பர் -  க்வில்லிங் ஜுவல் லைட் வெயிட்டாக வேண்டாம் என்பவர்களுக்கான சாய்ஸ். 

3. 5எம்.எம்  க்வில்லிங் பேப்பர் - க்வில்லிங் ஜுவல் கனமாக வேண்டும் என்பவர்களுக்கான சாய்ஸ்.

4. க்வில்லிங் மோல்டு - ஜிமிக்கி போன்ற குழிந்த வடிவங்களைச் செய்ய, இதில் வைத்து ஒருமுறை அழுத்தினால் போதும்.

க்வில்லிங் கிளாஸ்..!

5. க்வில்லிங் கம்ப்ரஸர் - டாலர் போன்ற தட்டையான உருவம் சரியான வடிவம் பெற, இதில் வைத்து ஒருமுறை அழுத்தவும். 

6. க்வில்லிங் சீப்பு - ஜிக்-ஜாக் (zig-zag) வடிவங்கள் செய்யப் பயன்படும். இது இல்லை எனில், வீட்டில் உள்ள பெரிய பல் சீப்பையும் பயன்படுத்தலாம். முக்கோணம், சதுரம், வட்டம் என வித்தியாசமான வடிவங்களில் நகை செய்யப் பயன்படுபவை, பார்டர் படிஸ்...

7. முக்கோண வடிவ பார்டர் படி.

8. வட்ட வடிவ பார்டர் படி.

9. சதுர வடிவ பார்டர் படி.

10. க்வில்லிங் டிசைனர் மெஷின் - இதில் க்வில்லிங் பேப்பரை ஒருமுறை சுற்றி எடுத்தால் பேப்பர் சற்று வளைந்து நெளிந்து கிடைக்கும், ஜுவல் நவீன லுக்கில் உருவாகும்.

11. க்வில்லிங் வார்னிஷ் - க்வில்லிங் ஜுவல்ஸில் இந்த வார்னிஷ் அடித்துப் பயன்படுத்தினால், ஷைனிங் கூடுவதுடன் நீண்ட நாட்கள் உழைக்கும்.

12. கட்டர்-பிளேயர் - ஜுவல்களில் பயன்படுத்தும் பின்களை வளைத்துவிடப் பயன்படும்.

13. கத்தரிக்கோல் - க்வில்லிங் பேப்பரை கட் செய்வதற்கு.

14. ஐ பின் - ஜுவல்ஸின் வடிவங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கப் பயன்படும்.

15.   லூப் பின் - சக்ரி, கோல்டன் பால் ஆகியவற்றை இணைக்க லூப் பின்னை வளைத்துப் பயன்படுத்த வேண்டும்.

க்வில்லிங் கிளாஸ்..!

16. ஜிமிக்கி கேப் - ஜிமிக்கியின் தலைப்பகுதியில் வைக்கும்போது ரிச் லுக் கிடைக்கும்.

17. ஸ்டெட் பேஸ் - தோடு செய்யும்போது அந்த வடிவத்தின் பின்புறம் இதனை ஒட்டி வாஷர் அணிந்து பயன்படுத்தலாம்.

18. இயர் பின் ஹூக் - நீளமான கம்மல் செய்யும்போது பயன்படும்.

19. சக்ரி - ஜுவல்லை மேலும் அழகுபடுத்தும். ஸ்டோன் வைத்த சக்ரியும் கடைகளில் கிடைக்கிறது.

20. வளையம் - வடிவங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கப் பயன்படும்.

21. பேக் செயின் - நெக்லஸ் மற்றும் டாலர் செயினின் பின்புறம் இதை மாட்டி, நீளத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

22. பேக் வயர் - பேக் செயின் வேண்டாம் என்றால், பேக் வயர் பயன்படுத்தலாம்.

23. கியர் வயர் - நகைக்காகச் செய்து வைத்துள்ள வடிவங்களை ஒன்றாகக் கோக்கப் பயன்படும்.

24. கியர் லாக் - வடிவங்கள் செய்யவும், அழகுக்காகச் சேர்க்கும் சக்ரி, கோல்டன் பால்ஸ் உருவாமல் இருக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.

க்வில்லிங் கிளாஸ்..!

25. பெவிக்கால் - ஒட்டும் வேலைகளுக்கு.

26. கலர் ஸ்டோன்

27. முத்து ஸ்டோன்

28 .வொயிட் ஸ்டோன்(இந்த ஸ்டோன்கள்  ஃபேன்ஸி ஸ்டோர்களில் இன்னும் பல்வேறு நிறங்களில், வடிவங்களில் கிடைக்கும்.)

29. ஸ்டோன் பால் - ஸ்டோன் பாலை நகைக்கு பார்டர் லுக் கொடுக்கப் பயன்படுத்தலாம். ராயலாக இருக்கும்.

அடுத்த வாரம் இன்னும் புதிய வடிவங்கள் மற்றும் புதுமையான ஜுவல் மாடலுடன்...

- க்வில்லிங் கிளாஸ் தொடரும்...

சு.சூர்யா கோமதி   படங்கள்:எம்.உசேன்

அடிப்படை உருவங்கள் செய்வோம்..!

டைட் காயில்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: விரும்பும் வண்ணத்தில் க்வில்லிங் பேப்பர்களை எடுத்து, அதன் முனையை ஒன்றோடு ஒன்று ஃபெவிக்கால் தடவி ஒட்டி, நீளத்தை அதிகரிக்கவும்.

படம் 2: க்வில்லிங் ஊசி துளையில் க்வில்லிங் பேப்பரை நுழைத்து இறுக்கமாகச் சுற்றவும்.

படம் 3: சுற்றி முடித்த பிறகு ஊசியில் இருந்து கழற்றி ஃபெவிக்கால் தடவி ஒட்டிவிடவும். இதுதான் அனைத்து வடிவங்களுக்கும் அடிப்படை.

திலகம்

க்வில்லிங் கிளாஸ்..!

டைட் காயில் ஒன்று செய்து அதன் மேல் பகுதியினை லேசாக இழுத்து விட்டால், திலக வடிவம் ரெடி.

க்வில்லிங் கிளாஸ்..!

பீட்டல் வடிவம்

திலகம் வடிவத்தின் கூர்மையான பகுதியினை சற்று வளைத்துவிட்டால், கிடைக்கும் அசத்தலான பீட்டல் ஷேப்.

க்வில்லிங் கிளாஸ்..!

ஸ்மார்ட் போனில் படிக்கலாம்!

ந்த பகுதியில் இடம் பெற்றுள்ள செய்திகள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க, உங்கள் ஸ்மார்ட்போனில் QR Code reader என்னும் இலவச ஆப்ஸை முதலில் டவுன்லோடு செய்யுங்கள். பிறகு உங்கள் செல்போன் மூலம் QR code-ஐ ஸ்கேன் செய்து படித்தும் பார்த்தும் புதுவித அனுபவத்தை உணருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism