Published:Updated:

கேபிள் கலாட்டா!

மறக்க முடியாத தீபாவளி!

கேபிள் கலாட்டா!

மறக்க முடியாத தீபாவளி!

Published:Updated:

‘இந்தத் தீபாவளியை எப்படிக் கொண்டாடப் போறீங்க?’, `உங்களுக்கு மறக்க முடியாத தீபாவளி எது?’

கேபிள் கலாட்டா!

- ரெண்டே கொஸ்டீன்ஸ். தினமும் நம்ம வீட்டு வரவேற்பறைக்கு வந்துட்டுப் போற சின்னத்திரை ஸ்டார்ஸை டார்கெட் செய்து கிளம்பினோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈரோடு மகேஷ்

கேபிள் கலாட்டா!

‘‘ரொம்ப வருஷமாவே நான், என் மனைவி, குழந்தைனுதான் தீபாவளி கொண்டாடிட்டு இருக்கோம். இந்த வருஷம், எங்க அப்பா, அம்மாகூட சேர்ந்து கொண்டாடப் போறோம்... அதான் ஸ்பெஷல். என் மனைவி பொதுவா `அது வேணும், இது வேணும்’னு கேட்க மாட்டாங்க. அவங்களுக்கு செம ஸ்பெஷலா ஒரு கிஃப்ட் கொடுக்கணும். தீபாவளி பர்ச்சேஸ் இனிமேதான் ஸ்டார்ட் ஆகப் போகுது!’’

மறக்க முடியாத தீபாவளி: ‘‘சின்ன வயசுல எனக்கும் அண்ணனுக்கும் வெடி வாங்க ஆளுக்கு 20 ரூபா கொடுப்பாரு எங்கப்பா. ஒருமுறை என் காசுல நான் வெடி வாங்கி மாடியில காய வெச்சிருந்தேன். மழை வந்து எல்லாம் நனைஞ்சு போச்சு. அப்பா கண்டிப்பா இன்னொரு 20 ரூபாய் தர மாட்டாருன்னு என் கண்ணுலயும் மழை வந்தப்போ, எங்க அண்ணன் அவரோட 20 ரூபாயை எனக்குக் கொடுத்து வெடி வாங்கிக்கச் சொன்னாரு. அதிலிருந்து ஒவ்வொரு வருஷமும் அவரோட பட்டாசுக் காசையும் எனக்குக் கொடுத்துடுவாரு. அப்பா, அம்மா, அண்ணனை நல்லா பார்த்துக்கணும், எப்பவும் எல்லோரும் ஒரே குடும்பமா இருக்கணும்... தீபாவளி பிரேயர் மட்டுமில்ல, என் டே டு டே பிரேயரும் இதுதான்!’’

ரியோ

கேபிள் கலாட்டா!

‘‘ரொம்ப வருஷமாவே எனக்கு ஆபீஸ்லதான் தீபாவளி. இந்த வருஷமும் தீபாவளி ஸ்பெஷல் ஷோஸ் பண்ணப்போறேன். மக்களை மகிழ்விக்கிறதுதானே நம்ம கடமை? அப்புறம்... தல படம் வருது, தெறிக்கவிடணும்!’’

மறக்க முடியாத தீபாவளி: ‘‘சின்ன வயசுல ரொம்பக் கஷ்டம். கடைசி நேரத்துல காசு திரட்டி அம்மா, அப்பா டிரெஸ் வாங்கிக் கொடுப்பாங்க. நான் ஹோண்டா கம்பெனியில வேலையில சேர்ந்தப்போ, முதல் முதலா நான் சம்பாதிச்ச பணத்துல கொண்டாடின தீபாவளி சூப்பர்! ஒரு தீபாவளிக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் வெள்ளை வேட்டி - சட்டை போட்டுக்கிட்டு ஊருக்குள்ள அட்ராசிட்டியா சுத்தினது, செம கொண்டாட்டம்!’’

தணிகை

கேபிள் கலாட்டா!

‘‘ஏழு வருஷம் ஆச்சுங்க குடும்பத்தோட தீபாவளி கொண்டாடி. மீடியா வேலைக்கு வந்ததில் இருந்து சிறப்பு நிகழ்ச்சிகள்தான் பண்டிகைக் கொண்டாட்டம்னு ஆயிடுச்சு. இந்த வருஷம் நோ ஷோஸ்... ஒன்லி ஃபேமிலி!’’

மறக்க முடியாத தீபாவளி: ‘‘அதெல்லாம் ஸ்கூல் டேஸோட முடிஞ்சு போச்சு. ஸ்பெஷல் தீபாவளி சென்டிமென்ட்னா, ஒவ்வொரு வருஷமும் எங்கம்மா வாங்கிக் கொடுக்கிற டிரெஸ்ஸைதான் தீபாவளிக்குப் போட்டுக்குவேன். நான் எடுத்துக் கொடுக்கிற புடவையைத்தான் எங்கம்மா கட்டிக்குவாங்க. இந்த வருஷம் அம்மா எனக்கு அக்கவுன்ட்ல பணம் போட்டுட்டாங்க. பர்சேஸுக்குதான் நேரமில்ல!’’

ப்ரியங்கா

கேபிள் கலாட்டா!

‘‘புது வீடு வாங்கியிருக்கேங்க. இந்த வருஷம் அங்க தீபாவளி கொண்டாடப் போறதுதான் ஸ்பெஷல். பக்கத்து வீட்டுல எல்லாம், ‘ஏய்... விஜய் டி.வி ஆங்கர் பிரியங்கா’னு ஆச்சர்யமா பார்க்குறாங்க. அந்த கெத்தை மெயின்டெயின் பண்ணணும். அப்புறம்... ஒரு ஸ்வீட்ஸ் மாமா இருக்காரு. அவர்கிட்ட கிலோ கணக்குல ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்தாச்சு. பட்டாசெல்லாம் பிரியங்கா வெடிக்க மாட்டா. சுற்றுச்சூழல் மாசுனு எல்லாம் அடிச்சுவிட மாட்டேன். அந்தப் புகை பட்டா முகப்பொலிவு போயிடும்ங்கிற சுயநலம்தான். அதுதானே நமக்கு மூலதனம்?!’’

மறக்க முடியாத தீபாவளி: ‘‘சின்ன வயசுல ஒரு தடவை ராக்கெட் விட்டு, பக்கத்து வீட்டு மாடியில காயப்போட்டிருந்த லுங்கி எரிஞ்சிடுச்சு. ஆனா, அதைத் தடயமே இல்லாம அழிச்சுட்டேன்ல. நாங்கள்லாம் அப்போவே அப்படி!’’

ரஞ்சித்

கேபிள் கலாட்டா!

‘‘நாம நியூஸ் ரீடரா இருக்கோம். நல்ல விஷயங்களை மக்களுக்கு மெக்கானிக்கலா சொல்லாம, நாமளும் கொஞ்சம் எடுத்துக்கணும்ல? ஸோ, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நான் ஒரு ஏழெட்டு வருஷமா பட்டாசு வெடிக்கிறதில்ல. இந்த வருஷமும் பட்டாசு இல்லாத தீபாவளிதான். அப்புறம் வழக்கம் போல புது டிரெஸ் போட்டுட்டு, ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, நியூஸ் வாசிக்கக் கிளம்பிடுவேன்!’’

மறக்க முடியாத தீபாவளி: ‘‘தலைதீபாவளிதான். மாமனார் வீட்டில் எனக்கு எண்ணெய் வெச்சு, மோதிரம் எல்லாம் போட்டுவிட, நான் ஒரு முறுக்கோட போய் நின்னு, ‘இதுதான் மாப்பிள்ளை முறுக்கு!’னு சொல்ல, கலகலதான்!’’

நித்யா தாஸ்

கேபிள் கலாட்டா!

‘‘நான், கேரளா பொண்ணு. அதனால தீபாவளி அவ்ளோ ஸ்பெஷல் இல்ல. ஆனா, என் கணவர் பஞ்சாபிங்கிறதால செம செம ஸ்பெஷல் தீபாவளியா இருக்கும். நிறைய நிறைய ஸ்வீட்ஸ் கொடுத்து, ஊரே ஜொலிக்க விளக்கேத்தினு, இந்த வருஷமும் கொண்டாட ரெடியாகிட்டேன்!’’

மறக்க முடியாத தீபாவளி: ‘‘எங்க தலைதீபாவளிக்கு கணவர் என்னை காஷ்மீர் கூட்டிட்டுப் போனார். சரியா தீபாவளி அன்னிக்கு ஃப்ளைட்ல இருந்து காஷ்மீரைப் பார்க்கிற சான்ஸ். மேப்ல சீரியல் லைட் போட்ட மாதிரி, ஊரெல்லாம் விளக்கொளி. இப்போ சொல்லும்போதே எக்ஸைட்டடா இருக்கு!’’

ப்ரியா பவானி ஷங்கர்

கேபிள் கலாட்டா!

‘‘இந்த வருஷம் எனக்கு சூப்பரா ஒரு புடவை எடுத்துக் கொடுக்கிறதா அம்மா சொல்லியிருக்காங்க. ஒரே ஒரு கண்டிஷன்மா... நீங்க கட்டுற மாதிரி எடுக்காம, நான் கட்டுற மாதிரி ட்ரெண்டியா, கிராண்டா எடுங்க!’’

மறக்க முடியாத தீபாவளி: ‘‘சென்னையில வீட்டுக்குள்ள உட்கார்ந்துட்டுக் கொண்டாடுற தீபாவளி எல்லாம் இல்லை எங்க வீட்டுல. சின்ன வயசுல தீபாவளிக்கு மயிலாடுதுறை போயிடுவோம். குடும்பத்துல மொத்தம் 25 பேராவது இருப்போம். எப்பவும் கிச்சன்ல சமையல் நடந்துட்டே இருக்கும். ஒரே கலாட்டாதான்... சந்தோஷம்தான். ஆனா, இப்போ என் பசங்களுக்கு அந்தக் கூட்டுக் குடும்ப தீபாவளி சந்தோஷம் கிடைக்கலைங்கிறதுதான் வருத்தம்!’’

ரிமோட் ரீட்டா

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ 150

ஆஹா... ஆனந்தம்!

``ஞாயிறுதோறும் மாலை 4.30 மணிக்கு மெகா தொலைக்காட்சியில் `என்றென்றும் எம்.எஸ்.வி’ எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இப்போது நம்மிடையே எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இல்லாத குறையை போக்கி... அவர் உயிருடன் உள்ளது போன்றதொரு பிரமையை ஏற்படுத்துகிறது இந்நிகழ்ச்சி. தொகுத்து வழங்கும் ஆதவன், எம்.எஸ்.வி ஐயாவிடம் கேட்கும் கேள்விகளுக்கு ஐயாவின் பதிலும், நினைவலைகளும்... ஆஹா, ஆனந்தம்!’’ என்று மெய்சிலிர்க்கிறார் அயனாவரத்தில் இருந்து எஸ்.சிநேஹா.

தவறான தகவல் தர வேண்டாமே..!

``விஜயதசமியன்று `ஜீ தமிழ்’ சேனலில் ‘அதிர்ஷ்டலக்ஷ்மி’ நிகழ்ச்சி பார்த்தேன். தொகுப்பாளர் அர்ச்சனா, நிகழ்ச்சியில் பங்கேற்ற திவ்யா என்பவரிடம் முருகனின் அறுபடை வீடுகள் எங்குள்ளன என்று கேட்டார். அவருக்கு சரிவர சொல்லத் தெரியவில்லை. உடனே தொகுப்பாளர்... திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை என்று சொல்லி விட்டு கடைசியில் பழமுதிர் சோலை என்பதற்குப் பதிலாக மருதமலை என்று தவறாகச் சொன்னார். கேள்வி கேட்குமுன் அதற்கான தகுந்த பதிலை அறிந்துகொண்டு வருவது தொகுப்பாளர்களின் கடமையல்லவா?!’’ என்று கேள்விக்கணை தொடுக்கிறார் மதுரையில் இருந்து வ.சந்திரா மாணிக்கம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism