கொஸ்டீன் ஹவர்!

''பி.பி.ஏ. இரண்டாமாண்டு மாணவியான என்னுடைய மேற்கல்வி ஆசை, எம்.பி.ஏ. மார்க்கெட்டிங். 'கல்லூரி மாணவியாக இருந்துகொண்டே இன்ஷூரன்ஸ் முகவராக பணியாற்றினால், மார்க்கெட்டிங் துறையில் அதிக அனுபவம் கிடைக்கும். பிற்பாடு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை பெறலாம்' என்று ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். இன்ஷூரன்ஸ் முகவர் ஆவதற்கான தகுதிகள், செலவுகள் மற்றும் பணிச்சூழல் பற்றிய தகவல்கள் கிடைக்குமா..?'' என்று கேட்டிருக்கும் குன்னூர் மாணவி வை.சுமித்ராவுக்காக ஆலோசனைகள் தருகிறார்... சென்னையை சேர்ந்த, எல்.ஐ.சி-யின் முதன்மை ஆயுள் காப்பீட்டு ஆலோசகரான ஜவஹர்.

''மார்க்கெட்டிங் துறையில் மேற்படிப்பைப் பெற ஆர்வமாக இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு... படிப்பு, வேலைவாய்ப்பு இரண்டுக்குமே இந்த முயற்சி திடமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். மேலை நாடுகளோடு ஒப்பிடும்போது நம் நாட்டில் இன்ஷூரன்ஸ் எடுத்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. வளரும் பொருளாதாரம், அதிகரிக்கும் தனிநபர் வருமானம் போன்றவை இன்ஷூரன்ஸ் துறைக்குப் பிரகாசமான எதிர்காலத்தைக் காட்டுகின்றன. எனவே, உங்களிடத்தில் துடிப்பும் ஆர்வமும் இருந்தால், இந்தக் களத்தில் இறங்கி வருமானமும் ஈட்ட முடியும்.

இன்ஷூரன்ஸ் முகவராவதற்கு... கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் பத்தாம் வகுப்பும், நகர்ப்புறத்தினர் ப்ளஸ் டூ-வும் தேறியிருக்க வேண்டும்.. 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் தேர்வுக்குத் தயாராவது, தேர்வுக் கட்டணம் மற்றும் லைசென்ஸ் வாங்குவது உள்ளிட்ட செலவுகளுக்கு அதிகபட்சமாக 1,000 ரூபாய் மட்டுமே தேவைப்படும். இந்தத் தேர்வுக்கான பயிற்சிக்காக அதிகபட்சம் 20 நாட்கள் பகுதி நேரமாகவோ, முழுநேரமாக ஒதுக்க வேண்டியிருக்கும். பயிற்சியை ஆன்லைன் மூலமாகவும் பெறலாம். தேர்வை யும் ஆன்லைன் மூலமாகவே எழுதலாம். உங்கள் பகுதியிலிருக்கும் பொதுத்துறை அல்லது தனியார் இன்ஷூரன்ஸ் அலுவலகக் கிளையை அணுகினால், இதற்கான ஏற்பாடுகள் மற்றும் உதவிகளைச் செய்வார்கள்.

முகவர் ஆகிவிட்ட பிறகு, படிப்பை பாதிக்காத வகையில் நேரத்தை திட்டமிட வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் வேலை நேரம்... காலை அல்லது மாலையாக இருப்பதால், ஒரு நாளின் பாதி நேரம் உங்களுக்கு இதுபோன்ற பணிக்கு தோதாக இருக்கும். இன்ஷூரன்ஸ் பாலிசியை பரிந்துரைப்பதற்காக நீங்கள் சந்திக்க உள்ளவர்களைப் பற்றியும், அவர்களது வசதியான நேரம் குறித்தும் திட்டமிட வேண்டும். உங்களுக்குப் பரிச்சயமான உறவினர் மற்றும் நட்பு வட்டத்தை முதலில் தேர்வு செய்வது நல்லது. இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகளே இதுபோன்ற சந்திப்புகளில் உடனிருந்து உதவுவார்கள். அவர்களின் அணுகுமுறை, பேச்சு போன்றவற்றை உற்று நோக்கி உங்களுக்கான தனித்துவத்துடன் அவற்றை வெளிப்படுத்தக் கற்றுக் கொள்ளலாம்.

நேரம், ஈடுபாடு, ஆர்வம், பொறுமை இவை மட்டுமே இந்தப் பணியில் முதலீடு. வருமானத்தைப் பொறுத்த வரையில், ஒரு வெற்றிகரமான பாலிசியின் மூலம் வாடிக்கையாளர் அளிக்கும் பிரீமியத்தொகையில் முதல் வருடத்தில் அதிகபட்சமாக 35 சதவிகிதம் உங்களுக்குக் கிடைக்கும். அடுத்தடுத்த வருடங்களில் 5 சதவிகிதம் வரை கிடைத்துக் கொண்டிருக்கும். மேலும், ஒரு

வாடிக்கையாளர் உங்கள் சேவையில் திருப்தி அடையும்பட்சத்தில் அவரது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று உங்களையே பரிந்துரைப்பார்.

இப்பணியில் வியாபார வாய்ப்புக்கும், வருமான வாய்ப்புக்கும் வானமே எல்லை. இளம்பருவத்தில் இப்பணியில் பகுதி நேரமாக ஈடுபட்டு வெற்றி கண்ட பலரும், தங்கள் ஏனைய வாழ் நாளுக்குமான பகுதி அல்லது முழு நேரப்பணியாக இதைத் தொடருகிறார்கள். பலதரப்பட்ட மனிதர்களை அணுகுவதால், உங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள், நீங்கள் எந்த வேலைக்குப் போனாலும் நிச்சயம் உதவியாக இருக்கும்.

கூடுதலாக ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றின் முகவராகவும் மாறி, மருத்துவம், வாகனம், கட்டடங்கள், சுற்றுலா, திருமணம் என தங்கள் காப்பீட்டுப் பணி மற்றும் வருமான வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ளலாம். பரஸ்பர நிதி எனப்படும் 'மியூச்சுவல் ஃபண்டு’ ஆலோசகராகவும் லைசென்ஸ் பெற்று, ஏற்கெனவே கைவசம் இருக்கும் வாடிக்கையாளர்களைக் கொண்டே வெற்றி பெற முடியும்.''