‘பொண்ணுக்கு என்ன டிரெஸ் எடுக்கிறது?’ என்று பிளான் செய்யும் அம்மாக்களுக்கு இடையே, ‘என் பொண்ணுங்களுக்கு என்ன மாடல் டிரெஸ் டிசைன் பண்ணலாம்?’ என்று யோசிப்பவர், சரண்யா பொன்வண்ணன். பிரபல நடிகை என்ற அடையாளத்தை தாண்டி, பரபரப்பான ஃபேஷன் டிசைனர் ‘கம்’ டியூட்டர். சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தன் ‘டிசைனிங் ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி’யில் அடுத்த பேட்ச் அட்மிஷனில் பிஸியாக இருந்தவரைப் பிடித்தோம்!

‘‘இந்த தீபாவளிக்காக என் ரெண்டு பொண்ணுங்களுக்கு நான் டிசைன் பண்ணின டிரெஸ் இது!’’ என்று அந்த ஆடைகளைக் காட்டிய சரண்யாவின் கண்களில் மின்னல்.

‘‘என் பொண்ணுங்க பிறந்ததில் இருந்தே அவங்க டிரெஸ் எல்லாம் நான்தான் டிசைன் பண்றேன். அதைப் பார்க்கவே நிறைய பேர் காத்திருப்பாங்க. பெரிய பொண்ணு ப்ரியதர்ஷினிக்கு ட்ரெடிஷனல் டேஸ்ட். அதனால இந்த முறை அவளுக்கு க்ரீன் கலர் சில்க் மெட்டீரியல்ல ஒரு அனார்கலி. ரெண்டாவது பொண்ணு சாந்தினி எப்பவும் ட்ரெண்டியாதான் விரும்புவா. அதுவும் பிரைட் கலர்ஸ்னா அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அவளுக்கு காக்ரா. என் கணவருக்கு ஒரு குர்தால எம்ப்ராய்டரி டிசைன் போட்டுக் கொடுத்தேன்!’’ என்றவர், 20 வருடங்களுக்கு முன் தான் ஊசி, நூல் கையிலெடுத்த கதை சொன்னார்...

‘‘எங்கம்மா நல்லா தைப்பாங்க. என்னையும் டெய்லரிங் கத்துக்கச் சொல்லிட்டே இருப்பாங்க. ஒருநாள் திடீர்னு அம்மா உடம்புக்கு முடியாம இறந்துட்டாங்க. அவங்க பயன்படுத்தின தையல் மெஷின் தூசு படிஞ்சு கிடந்ததைப் பார்க்கக் கஷ்டமா இருந்தது. அம்மாவோட தோழி ஒருத்தவங்ககிட்ட, ‘பேஸிக் தையல் சொல்லிக் கொடுங்க... அம்மா மெஷின்ல நான் அப்பப்போ உட்கார்ந்துக்கறேன்...’னு சொன்னேன். அவங்க, ‘ஒழுங்கா ஒரு இன்ஸ்டிட்யூட்ல போய் முறையா கத்துக்கோ’னு சொன்னாங்க. அம்மா ஆசையை இப்போவாவது நிறைவேற்றுவோம்னு நானும் சேர்ந்துட்டேன்.அப்போ நான் ‘சீவலப்பேரி பாண்டி’ படத்துல நடிச்சிட்டிருந்த சமயம் என்பதால, எல்லோரும் என்னை ஏதோ ஸீன் போட வந்த மாதிரி பார்ப்பாங்க. ஆனா, சின்சியரா கத்துக்கிட்டு, அவுட்ஸ்டாண்டிங் சர்டிஃபிகேட் வாங்கினேன். அதில் இருந்து எனக்கும் என் பொண்ணுங்களுக்கும் நானே காஸ்ட்யூம் டிசைனர் ஆக, அதைப் பார்த்த என் ஃப்ரெண்ட் ஒருத்தவங்க, ‘எனக்கு பிளவுஸ் தைக்க மட்டும் சொல்லிக் கொடு’னு கேட்டாங்க. ‘நேரடியா பிளவுஸுக்குப் போக முடியாது... பேஸிக் விஷயங்களில் இருந்துதான் ஆரம்பிக்கணும்’னு அவங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க, ‘நாங்களும் வர்றோம்’னு இன்னும் ரெண்டு பேர் சேர்ந்தாங்க. கேள்விப்பட்டு கேள்விப்பட்டு 20 பேர் சேர்ந்து வந்து நிக்க, அப்போதான் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கிற யோசனை வந்தது.

என் குரு சுகந்தி அய்யாசாமி உதவியோட சிலபஸ் எல்லாம் தயார் செய்து, ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்னோட ‘டிசைனிங் ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி’யை (DSOFT) ஆரம்பிச்சுட்டேன். இங்க வழங்கப்படுவது ஐந்து மாத கோர்ஸ். தையல், எம்ப்ராய்டரி, டிசைனிங்னு முழுமையா கத்துக்கலாம். கோர்ஸ் முடிஞ்சதோட, ஒவ்வொருத்தரும் புராஜெக்டா ஒரு டிரெஸ் டிசைன் பண்ணணும். நல்லா பெர்ஃபார்ம் பண்ற ஸ்டூடன்ட்ஸை நல்ல கம்பெனிகளுக்கு ரெக்கமண்ட் பண்ணுவேன். நிறைய பேர், ‘நீங்க கிளாஸ் எடுப்பீங்களா..? இல்ல, உங்க அசிஸ்டென்ட்ஸ் எடுப்பாங்களா?’னு கேட்பாங்க. நானேதான் வகுப்புகள் எடுப்பேன். ஷூட் போனாலும், ஒரு ஓரத்தில் உட்கார்ந்து என் கோர்ஸுக்கான ஹேண்ட் வொர்க் எதாவது செஞ்சுட்டு இருப்பேன். அந்தளவுக்கு இதில் ஐக்கியமாயிட்டேன்!’’ - இயல்பாகப் பேசும் சரண்யாவை அமைதியாக ரசித்துக்கொண் டிருந்த அவர் கணவர் பொன்வண்ணன்...

‘‘அவங்களோட விருப்பங்களுக்கு நான் எப்பவும் மரியாதை கொடுப்பேன். அப்படித்தான் இந்த இன்ஸ்டிட்யூட்டும். உண்மையில் அவங்க ரொம்ப பிஸி. அதுக்கு இடையிலும் அழகா டைம் மேனேஜ்மென்ட் கீப்-அப் பண்ணி... வீடு, ஷூட்டிங், இன்ஸ்டிட்யூட்னு சுழன்றுட்டு இருக்காங்க. ‘பாவம்... நாம ஏதாச்சும் உதவி பண்ணலாமே’னு தோணும். ஃபேஷன் டிசைனிங்கில் எனக்கு எதுவும் தெரியாதுனாலும், மாரல் சப்போர்ட்டா இருக்கேன். இன்ஸ்டிட்யூட்டில் படிச்ச அவங்க ஸ்டூடன்ட்ஸுக்கு டிசைனிங் துறையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம், மேடத்தோட மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது!’’ என்று தன் மனைவியின் மனதைச் சொன்னார் பொன்வண்ணன்.

‘‘நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களுக்கு நம்மளால சந்தோஷம் கிடைச்சா, அதுதானேங்க பெரிய சந்தோஷம்!’’

- திரையில் பார்க்கும் ‘பாசக்கார அம்மா’வுக்கும் நிஜத்துக்கும் வேறுபாடில்லை சரண்யாவிடம்!

ந.ஆஷிகா, வெ.மோ.ரமணி படங்கள்:சு.குமரேசன்