செல்போனில் ஞானேஷ் சில விநாடிகள் மௌனமாக இருந்துவிட்டு மறுமுனையில் இருந்த மணிகண்டனிடம் பேசினான்...

‘`இதோ பார் மணிகண்டன்... நாம ஒரு பிரச்னையைக் கையாளும்போது அசாத்தியமான பொறுமையும் சகிப்புத்தன்மையும் வேணும். நாம அடைச்சு வெச்சிருந்த திவாகர் தப்பிக்க முயற்சி பண்ணும்போது நீ அவனைத் தாக்கியது சரிதான். ஆனா, இரும்புக் கம்பியை எடுத்து அவனோட தலையில் அடிச்சிருக்கக் கூடாது. உடம்போட வேற ஏதாவது ஒரு பாகத்தைத் தாக்கியிருக்கலாம்.”

“ஸாரி ஞானேஷ்... ஆத்திரத்துல கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை!”

“சரி... பதற்றப்படாதே! அடிபட்ட திவாகரை மறுபடியும் செக் பண்ணு. அவனோட ரெண்டு பாதங்களையும் சூடு பறக்கத் தேய்ச்சுவிடு. அவனுக்கு எதுவும் ஆயிருக்காதுன்னு நினைக்கிறேன். பூங்கொடிக்கு இந்த விஷயம் தெரியுமா?”

“தெரியும். அவ ஒரு பக்கம் உட்கார்ந்து அழுதுட்டு இருக்கா...”

“திவாகருக்கு அப்படி ஏதாவது விபரீதம் நடந்திருந்தா அதை வெளியே காட்டிக்காதே. நான் இப்பத்தான் ஹோட்டல் மௌரியாவுக்கு வந்தேன். பேச்சுவார்த்தைகளை முடிச்சுட்டு நம்ம இடத்துக்கு வர எனக்கு எப்படியும் ரெண்டு மணி நேரம் பிடிக்கும். நான் வந்த பிறகு மேற்கொண்டு என்ன பண்றதுன்னு பேசுவோம். டென்ஷன் வேண்டாம்!”

“ஞா... ஞானேஷ்! ஒரு நிமிஷம்...”

“என்ன..?”

“திவாகரோட உடம்பு அசையுது... எந்திரிச்சு உட்கார முயற்சி பண்றான்...”

“மொதல்ல அவனை ஒரு நாற்காலியோடு சேர்த்து கட்டிப் போட்டுட்டு தலையில் ஏதாவது காயம் ஏற்பட்டு இருந்தா ஃபர்ஸ்ட் எய்டு பண்ணு!”

“சரி...”

“நீ எனக்கு போன் பண்ணாதே... ஒரு மணி நேரம் கழிச்சு நானே போன் பண்றேன்” - ஞானேஷ் செல்போனை அணைக்க, எதிர் சோபாவில் உட்கார்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஜியா கலீத் சற்றே கவலையான குரலில் கேட்டார்...

“ஏதாவது பிரச்னையா?”

ஞானேஷ் மெள்ளச் சிரித்தான். “செல்போனை அட்டெண்ட் பண்ணுகிறபோது பிரச்னை இருந்தது. இப்போது இல்லை. நாம் பேச வேண்டிய விஷயத்தைப் பற்றிப் பேசிவிடலாம்... நீங்கள் உங்களுடைய இரண்டு உதவியாளர்களையும் இந்த அறைக்கு அழைத்துவிட்டீர்களா?”

“தகவல் கொடுத்துவிட்டேன். இப்போது வந்துவிடு வார்கள்” - ஜியா கலீத் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பிஸ்கட் நிற ஃபுல் சூட்டில் அந்த இரு இளைஞர்களும் உள்ளே வந்தார்கள். தோல் சீவிய பீட்ரூட் நிற உடம்பு. இளம் பச்சை நிறக் கண்கள். நீளமான தலைமுடியை வாரி பிடரியில் பிரிப்பிரியாய் வழியவிட்டிருந்தார்கள். ஜியா கலீத் அந்த இரண்டு பேரையும் ஞானேஷுக்கு அறிமுகப்படுத்தினார்.

“இவர் பெல்ஃபோர்ட், இவர் ஸ்பைக் ஜோன்ஸ். இரண்டு பேருமே சைக்காலஜி ரிசர்ச் ஸ்காலர்ஸ். யுனிவர்சிட்டி ஆஃப் ஜோர்டான்’ஸ் இன்ஸ்டிட்யூட் ஃபார் லேர்னிங் அண்ட் பிரெய்ன் சயின்சஸ் (Institute for Learning and Brain Sciences) பிரிவில் பணிபுரிகிறார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றுள்ள இவர்கள்தான் இப்போது உங்களோடு ‘மிட்நைட் ரெயின்போ’ ப்ராஜெக்ட்டைப் பற்றி விரிவாகப் பேசப் போகிறார்கள்.”

ஞானேஷ் இருவரோடும் கைகுலுக்கி, அவர்கள் அமர்ந்ததும் எதிர் சோபாவில் தானும் அமர்ந்தான். சில விநாடிகளுக்கு நிலவிய அமைதியை பெல்ஃபோர்ட் என்கிற அந்த இளைஞன் கலைத்தான்.

“மிஸ்டர் ஞானேஷ்...! நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்த ‘எக்ஸ்பெரிமென்ட் செண்ட்ஸ் தாட்ஸ் ஓவர் நெட்' (Experiment sends thoughts over net)

என்று தலைப்பிட்ட ப்ராஜெக்ட்டை எங்களுடைய டெக்னாலஜி குரூப் ஆய்வு செய்து பார்த்தது. அந்த குழுவுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நாங்கள் குறித்துக்கொண்டு வந்திருக்கிறோம். அவர்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் தெளிவான பதில்களைச் சொல்ல முடிந்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு பேச முடியும்.”

ஞானேஷின் உதடுகள் ஒரு பெரிய புன்னகையில் விரிந்தது.

“எனக்கு கேள்வி கேட்பவர்களைத்தான் நிரம்ப

பிடிக்கும். நீங்கள் ‘மிட்நைட் ரெயின்போ’ ப்ராஜெக்ட் தொடர்பா எந்த சந்தேகம் கேட்டாலும், விளக்கம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.”

“நன்றி மிஸ்டர் ஞானேஷ்... எங்களுடைய முதல் சந்தேகமே இந்த ப்ராஜெக்ட்டுக்கு கொடுத்த பெயர்தான். அது என்ன ‘மிட்நைட் ரெயின்போ’..?”

“நான் இந்த ப்ராஜெக்ட்டை ஆரம்பித்தபோது நான் பணிபுரியும் ஐ.டி. கம்பெனியின் வைஸ் பிரசிடென்ட் என்னைக் கூப்பிட்டு, `நீ இப்போது செய்யப்போகும் ப்ராஜெக்ட் சாத்தியமில்லாத ஒன்று. பகலில் வண்ணமாய் வானவில்லைப் பார்க்கலாம். இரவில் அது எப்படிச் சாத்தியமாகும்? எனவே, இந்த ப்ராஜெக்ட் வேண்டாம். வீண் வேலை’ என்று சொன்னார். இதற்கு நான் அவரிடம் சொன்ன பதில் என்ன தெரியுமா..?”

“சொல்லுங்கள்...”

“நம்மால் முடியாது என்று நினைத்துக்கொண் டிருக்கும் ஒன்றை இந்த உலகத்தின் எந்த மூலை யிலாவது இருக்கும் யாரோ ஒருத்தர் நேற்றே செய்து முடித்திருப்பார். எனவே, முடியாத விஷயம் என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை. இரவிலும் வானவில்லைப் பார்க்கும் காலம் வரும் என்று சொன்னேன். என்னுடைய தன்னம்பிக்கையைப் பார்த்துவிட்டு இந்த ப்ராஜெக்ட்டை செய்து முடிக்க எனக்கு ஒரு வருஷ கால அவகாசம் கொடுத்தார். இந்த ப்ராஜெக்ட்டுக்கு என்ன பெயர் வைப்பது என்று நானும் என் குழுவில் இருந்த ஆறு பெண்களும் யோசித்தபோது எங்களுடைய பெயர்களின் முதல் ஆங்கில எழுத்துக்களை மட்டும் எடுத்து மாற்றி மாற்றிப் போட்டு ஒரு வார்த்தையை உண்டாக்க நினைத்தோம். எதிர்பாராதவிதமாக VIBGYOR என்ற வார்த்தை கிடைத்தது. எங்களின் கம்பெனியின் வைஸ் பிரஸிடென்ட் இரவில் வானவில்லைப் பார்க்க முடியாது என்று சொன்னார். ஆனால், ப்ராஜெக்ட்டுக்கு கிடைத்த பெயரே வானவில்லோடு சம்பந்தப்பட்ட பெயராக இருந்ததால் அதையே வைத்துக்கொண்டோம்.”

“உங்களுக்கு கீழே வேலை செய்த அந்த ஆறு பெண்களும் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டோம். அது விபத்தா... இல்லை, கொலை முயற்சியா?”

``அது விபத்து என்று போலீஸார் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முழு விசாரணை முடியும்போதுதான் உண்மை தெரியவரும். என் முயற்சியில் உருவான இந்தப் ப்ராஜெக்ட்டின் அறிவியல்பூர்வமான செயல்திட்டத்தை என்னிடமிருந்து அபகரிக்க வெளியே சிலர் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி. ஆனால், அதில் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் இருந்த இன்னொரு இளைஞனான ஸ்பைக் ஜோன்ஸ் இப்போது வாயைத் திறந்தான்...

‘’இனி ப்ராஜெக்ட்டைப் பற்றிப் பேசுவோமா..?”

“நான் தயாராக இருக்கிறேன்”

‘’எங்களுக்கு நீங்கள் அனுப்பியிருக்கும் ரிசர்ச் ரிப்போர்ட்டில் ஒரு வாசகத்தைக் குறிப் பிட்டுள்ளீர்கள். அதை நான் ஃப்ளோரஸன்ட் பேனாவால் மார்க் செய்துள்ளேன். அதை மட்டும் கொஞ்சம் வாய்விட்டுப் படியுங்கள்.”

அவன் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்து ஞானேஷ் படித்தான்... “To show that two brains can be directly linked to allow one person to guess what is on the another person’s mind, research report says.’’

- ஞானேஷ் படித்துவிட்டுக் கேட்டான்...

“இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்.?”

“இரண்டு வெவ்வேறான நபர்களின் மூளைகளை இன்டர்நெட் மூலம் இணைத்து ஒரு நபரை மட்டுமே பேசவைத்து இன்னொரு நபரின் மூளையில் பதிவாகியுள்ள செய்திகளை யும், அவர் மனதில் உள்ள எண்ணங்களையும் தெரிந்துகொள்ள முடியும் என்பதுதானே ப்ராஜெக்ட்டின் இறுதியான ரிப்போர்ட்?”

“ஆமாம்...”

‘’இது சாத்தியமாகிவிட்டதா?”

“ஆகிவிட்டது!”

“அதை நிரூபணம் செய்வதற்கான டெமோ ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?”

“இருக்கிறது!” என்று சொன்ன ஞானேஷ் தன் கார் சாவியின் கீ-செயினில் இருந்த ஸ்படிகம் போன்ற ஒரு சின்னப் பொருளை எடுத்தான் ‘’இது ஒரு பென் ட்ரைவ். இதில்தான் ‘மிட்நைட் ரெயின்போ’ ப்ராஜெக்ட்டின் முதுகெலும்பு போன்ற முக்கியமான விஷயங்கள் உள்ளன. என்னுடைய ‘லேப் டாப்’பில் போட்டுக் காட்டுகிறேன். நான் சொல்வதைவிட நீங்கள் பார்த்தால்தான் உங்கள் மனதில் இருக்கும் மற்ற சந்தேகங்களும் காணாமல் போகும்!” ஞானேஷ் பேசிக்கொண்டே தன் கையோடு கொண்டுபோயிருந்த ப்ரீஃப்கேஸைத் திறந்து அந்த அதிநவீன லேப்டாப்பை எடுத்தான். சில விநாடி நேரத்தில் அதை உயிர்ப்பித்து ஸ்படிகம் போன்று மின்னிய பென்ட்ரைவை செருகி ஆன் செய்தான்.

லேப்டாப்பின் செவ்வகத் திரை வெளிச்சம் பிடித்து அதன் மையத்தில் ‘MNR’ என்ற எழுத்துக்களைக் காட்டியது. அதன் பிறகு ஸ்லோமோஷனில் ஆங்கில வார்த்தைகள் உற்பத்தியாகி, ஸ்லோமோஷனில் மறைய... பெல்ஃபோர்ட்டும், ஸ்பைக் ஜோன்ஸும் உன்னிப்பாக படித்தார்கள்...

The experiment was carried out

In dark rooms in UW labs

located 1.5 KM apart and

involved five pairs of participants

லேப் - டாப் திரையில் டெமோ போய்க் கொண்டிருக்கும்போதே ஞானேஷ் ஒரு வர்ணனையாளராய் மாறி விளக்க ஆரம்பித் தான்...

“இந்த பிரெய்ன் டு ப்ரெய்ன் கனெக் ஷன் பரிசோதனையில் மொத்தம் ஐந்து ஜோடிகள் ஆணும் பெண்ணுமாய் கலந்துகொண்டார்கள். UW-வின் இருட் டான சோதனைச்சாலைகளில் அவர்கள் உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் மூளைகள் இன்டர்நெட்டால் இணைக்கப்பட்டு, கன்ட்ரோல் கேம்ஸ் மூலம் முதலில் பரிசோதிக்கப்பட்டார்கள். இந்த டெமோவை கண்காணித்து, உண்மை நிலைகளைக் கண்டறிய ஐந்து ரிசர்ச்சர்களும், ஐந்து என்கொயரர்களும் காதுகளில் இயர் ப்ளக்குகளைப் பொருத்திக்கொண்டு, ஒருவரை மட்டுமே விசாரித்து, இன்னொருவரின் மன ஓட்டங் களையும், அவர்களின் மூளைகளில் பதிவாகியிருந்த விஷயங்களையும் கிரகித்துக் கொண்டார்கள். இவை எல்லாமே ட்ரான்ஸ் மிட்டிங் சிக்னல்கள் பெறுவதன் மூலமாக சாத்தியமானது!’’

ஞானேஷ் சரளமான ஆங்கிலத்தில் நிதானமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே

அந்த மனித மூளை நீல நிறத்தில் லேப் டாப்பின் திரை மையத்துக்கு வந்து நின்றது.

ஞானேஷ் அதைக் காட்டியபடி சொன்னான்... “இப்போது நீங்கள் பார்க்கும் ஒரு மனித மூளையானது நீல நிறத்தில் இருப்பதற்குக் காரணம், இன்னொரு மனித மூளையின் பதிவுகளையும் எண்ண ஓட்டங்களையும் இந்த மூளை ஏற்றுக்கொண்டு பதில் சொல்லத் தயாராகிவிட்டதுதான். இதனிடம் கேள்வி நேரம் முடித்ததும் அது தன்னுடைய பழைய இளஞ்சிவப்பு நிறத்துக்குப் போய்விடும்!”

“பார்க்கும்போதே பிரமிப்பா இருக்கிறது.”

“இதன் இன்னொரு டெமோவை அடுத்த மாதத்தில் ஒருநாள் நடத்தவிருக்கிறோம். அப்போது நீங்கள் நேரடியாகவே அதைப் பார்த்து உண்மை நிலையை உணர முடியும்.”

“இப்போதுள்ள நிலைமையில் இந்த பிரெய்ன் டு பிரெய்ன் இணைப்பின் ப்ளஸ் பாயின்ட்டுகள் என்ன... மைனஸ் பாயின்ட்டுகள் என்ன..?”

“முதலில் ப்ளஸ் பாயின்ட்டுகளைச் சொல்கிறேன். இன்றைக்கு நம் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பயங்கரவாதத்துக்குக் காரணமான தீவிரவாதிகளை இந்த பிரெய்ன் டு பிரெய்ன் இன்டர்ஃபேஸ் டெமான்ஸ்ட்ரேஷன் மூலமாக நம் வழிக்குக் கொண்டுவர முடியும். இதற்கு முன்பெல்லாம் எந்தத் தீவிரவாதி காவல் துறையிடம் மாட்டினாலும் அவனிடம் இருந்து உண்மைகளை வரவழைக்க முடியாமல் அதிகாரிகள் திணறிக்கொண்டு இருந்தார்கள். அவனை சித்ரவதைகளுக்கு உட்படுத்தினாலும் அவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு பிடிவாதமாக மௌனம் சாதித்து வந்தான். ஆனால், இனிமேல் அவன் அப்படி இருக்க முடியாது. அவனுடைய மூளையை இன்னொருவரின் மூளையோடு இன்டர்நெட் மூலமாக இணைத்து அதன் மூலமாக அந்தத் தீவிரவாதியின் மூளையில் பதிவாகியிருக்கும் செய்திகளையும், அவனுடைய எண்ண ஓட்டங்களையும் அறிந்து ஒட்டுமொத்த தீவிரவாத கும்பலையும் நம்மால் கண்டு பிடிக்க முடியும். இது முதல் ப்ளஸ் பாயின்ட்.”

ஞானேஷ் சில விநாடிகள் பேச்சை நிறுத்தி விட்டு தொடர்ந்தான்...

“இரண்டாவது ப்ளஸ் பாயின்ட்... விபத்தில் சிக்கிய ஒரு நபரின் மூளையில் உள்ள நியூரான்கள் சேதம் அடையும்போது அவர் ‘மூளைச் சாவு’ அடைய வாய்ப்பு அதிகம். அந்த வாய்ப்பை இனி நம்மால் தவிர்க்க முடியும். ஆரோக் கியமான ஒரு நபரின் மூளையோடு விபத்தில் சிக்கிய நபரின் சேதமான நியூரான்களைக் கொண்ட மூளையோடு இணைத்து அந்த நியூரான்களை ரிப்பேர் செய்து மூளைச் சாவை தடுத்து அந்த நபரைக் காப்பாற்றிவிடலாம். மூன்றாவது ப்ளஸ் பாயின்ட், புத்திசாலித்தனம் குறைந்த மாணவர்களின் மூளைத்திறனை, புத்திசாலியான மாணவர்களின் மூளை யோடு இணைத்து அவர்களுடைய அறிவுத்திறனை அதிகரிக்கச் செய்யலாம். நான்காவது ப்ளஸ் பாயின்ட் - மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும், மூளை நோயால் பாதிக்கப்பட்ட நபர்களையும் டிமென்ஷியா, அம்னீஷியா போன்ற மறதி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களையும் வெகு எளிதில் குணப்படுத்திவிடலாம்!”

“இதனுடைய மைனஸ் பாயின்ட்டுகள்..?”

“ஒன்றே ஒன்றுதான்.”

“என்ன..?”

“இந்த ‘மிட்நைட் ரெயின்போ’ சம்பந்தப்பட்ட ரகசிய செயல்பாடுகள் சமூக விரோதிகளின் கைகளுக்குப் போய்விட்டால் அவர்களால் எதிர்மறை விளைவுகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. அறிவியல் விஞ்ஞானியிடம் இருந்து அவருடைய கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்களையும், உயர் ராணுவ அதிகாரியிடம் இருந்து ராணுவ ரகசியங்களையும் அவர்களால் திருட முடியும். இந்த விஷயத்தில் மட்டும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..”

“அது ஒன்றும் பிரச்னையில்லை... நாம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வதற்கு முன்பு `MNR ப்ராஜெக்ட்’டின் மதிப்பு என்ன என்பதைப் பற்றிப் பேசிவிடலாமா?”

“மதிப்பு என்ன என்பதைப் பற்றி உங்கள் தலைவர் மிஸ்டர் ஜியா கலீத்திடம் ஏற்கெனவே பேசிவிட்டேன். அவர் ஏதும் உங்களிடம் சொல்லவில்லையா?”

“சொன்னார்.... அது அதிகம் என்பதை உணர்கிறோம்!”

“நீங்கள் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். வெளிநாட்டின் பல பல்கலைக் கழகங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் தோற்றுப்போன விஷயத்தை எங்களின் பயோடெக் நிறுவனமான ஃப்யூச்சர் மிராக் கிள் கையில் எடுத்துக்கொண்டு, அந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தது. ஆண் உதவியாளர்களை நம்ப முடியாது என்கிற காரணத்தால் ஆறு பெண் உதவியாளர்களை இந்த MNR ப்ராஜெக்ட்டில் ஈடுபடுத்தினேன். இந்த ப்ராஜெக்ட் வெற்றிபெறும் தறுவாயில் என் பெண் உதவியாளர்கள் ஆறு பேரும் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார்கள். என்னுடைய உயிருக்கும் குறிவைக்கப்பட்டது. ஆனாலும் தப்பிவிட்டேன்... ஓர் உயிருக்கே விலை மதிப்பை நிர்ணயம் செய்ய முடியாது. ஆனால், ஆறு பேர்... அதுவும் இளம்பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கான மதிப்பை அளவிட்டுப் பாருங்கள். அப்போது உங்களுக்குப் புரியும்..!”

“இட்ஸ் ஓ.கே... ஐ அக்ரி வித் யூ மிஸ்டர் ஞானேஷ்!” - ஜியா கலீத் தன் இரண்டு கைகளையும் உயர்த்தி சொல்லிக்கொண் டிருக்கும்போதே ஞானேஷின் செல்போன் மெலிதாய் முணுமுணுத்தது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். சென்னையில் இருந்து அவனுடைய அப்பா பார்த்தசாரதி. செல்போனை காதுக்கு ஒற்றி மெல்லிய குரலில் கேட்டான்...

“என்னப்பா..?”

“ஞானேஷ்... நீ உயிரோடு இருக்கிறது தெரிஞ்சு போலீஸ் நம்ம வீட்டுக்கு வந்து விசாரணை அது இதுன்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நான் ரிட்டையர்ட் ஜட்ஜ்ங்கிறதால டி.ஜி.பி லெவல்ல என்கொயரி போயிட்டிருக்கு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.”

“அப்பா... இவ்வளவு நாள் பொறுத்தீங்க. ஒரு ரெண்டு நாள் பொறுங்க... அப்புறம் நம்ம திட்டப்படி எல்லாமே நடக்கும்.”

- தொடரும்...