கலக்குது... பீக்காக் கலர் கம்மல்!

க்வில்லிங் கிளாஸ்..!

‘‘க்வில்லிங் ஜுவல்லரியில் அடிப்படை உருவங்களைக் கத்துக்கிட்டா, கற்பனைத் திறனுக்கு ஏற்ப எக்கச்சக்க டிசைன்களை உருவாக்கலாம். திருமணத்துக்கு அப்புறம் வேலையை விட்டுட்டு, போரடிக்குதேனு கிராஃப்ட் பிசினஸை கையில் எடுத்த என்னை, இன்னிக்கு வேலைக்குப் போயிருந்தாகூட இவ்வளவு சம்பாதிச்சிருக்க முடியாதுனு நினைக்க வெச்சதில், க்வில்லிங் அயிட்டங்களுக்கும் பங்கு உண்டு!’’ - உற்சாகமாக ஆரம்பித்த பெரம்பூர் ‘மார்னிங் ஸ்டார் அகாடமி’யின் உரிமையாளர் ஜெஸி எபினேசர், சிம்பிள் அண்ட் சூப்பர்ப் பீக்காக் கலர் க்வில்லிங் ஸ்டட் செய்யக் கற்றுத் தருவதற்கு முன், அடிப்படை உருவங்களுக்கான செய்முறைகளை விவரித்தார்... 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போது பீக்காக் கலர் க்வில்லிங் ஸ்டட் செய்யலாம்...

தேவையானவை:

க்வில்லிங் கிளாஸ்..!

3 mm க்வ்ல்லிங் பேப்பர் (டார்க் புளூ - 2, ஸ்கை புளூ - 1, கோல்டன் - 1, லைட் க்ரீன் - 1, டார்க் க்ரீன் - 2),

க்வில்லிங் ஊசி, இயர் ஹூக் - 2, வளையம் - 2, கோல்டன் ஸ்டோன் - 2, ஃபெவிக்கால், கட்டர், பிளேயர்.

செய்முறை:

படம் 1:  மயிலிறகின் வண்ணத்தில் ஸ்டட் செய்வதால் ஸ்கை ப்ளூ, டார்க் ப்ளூ, கோல்டன், லைட் கிரீன், டார்க் கிரீன் என்ற வரிசையில் க்வில்லிங் பேப்பர்களை எடுத்துக்கொள்ளவும். 

படம் 2:  ஒவ்வொரு க்வில்லிங் பேப்பரின் முனையிலும் ஃபெவிக்கால் தடவி ஒன்றோடு ஒன்று ஒட்டி அதன் நீளத்தை அதிகரித்து சிறிது நேரம் காயவிடவும்.

படம் 3:  காய்ந்ததும் க்வில்லிங் ஊசியில் இருக்கும் துளையில் க்வில்லிங் பேப்பரை நுழைத்து சற்று தளர்வாக காயில் போன்று சுற்றவும்.

படம் 4:  சுற்றிய பேப்பர் உருவிவிடாதபடி காயிலின் மையத்தில் பிடித்துக்கொண்டு ஊசியிலிருந்து மெதுவாகக் கழற்றவும். 

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 5:  ஊசியிலிருந்து எடுத்த காயிலின் இறுதி முனையில் ஃபெவிக்கால் தடவி காயிலுடன் ஒட்டிக் காயவிடவும். 

படம் 6:  படத்தில் காட்டியுள்ளது போல காயிலை மெதுவாக இரண்டு விரல்களால் அழுத்தி, கோபுர பொட்டு வடிவத்துக்கு கொண்டுவரவும்.

படம் 7:  மூடியிருக்கும் வளையத்தை கட்டரால் லேசாக திறந்துவிடவும்.

படம் 8:  வளையத்தை திலகத்தின் கூர்மையான பகுதியில் நுழைக்கவும்.

படம் 9:  வளையத்துக்குள் இயர் ஹூக்கை மாட்டி, வளையத்தை மீண்டும் கட்டரால் அழுத்தி மூடிவிடவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 10:  இப்போது ஸ்டட்டின் மையத்தில் சிறிது ஃபெவிக்கால் தடவி கோல்டன் ஸ்டோன் ஒட்டிக்கொள்ளவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 11:  பீக்காக் கலர் க்வில்லிங் ஸ்டட் ரெடி... க்யூட் லுக்கில்! இதேபோன்று இன்னொரு ஸ்டட் செய்து, விரும்பினால் வார்னிஷ் அடித்துப் பயன்படுத்தலாம்!

``பக்கத்து ஃபேன்ஸி ஸ்டோரில் இருந்து ஆன்லைன் வரை இதை மார்க்கெட்டிங் பண்ணலாம். கலர்ஸ், டிசைன்ஸ்னு கஸ்டமைஸ்டா ஆர்டர் எடுத்து செய்து கொடுத்தா, கஸ்டமர்ஸ் விலகவே மாட்டாங்க. ஆரம்பத்தில் சொல்லிக் கொடுத்த அடிப் படை உருவங்களில் இருந்து, உங்க கற்பனையில் உதிக்கும் டிசைன்

களை எல்லாம் ட்ரை பண்ணப் போறீங்கதானே?!’’ - விரல் களுக்கு ஆர்வம் தூண்டி முடித்தார், ஜெஸி எபினேசர்!

- க்வில்லிங் கிளாஸ் தொடரும்...

சு.சூரியா கோமதி படங்கள்: எம்.உசேன்

க்வில்லிங் கிளாஸ்..!

‘‘கோன் வடிவம்: டைட் காயில் செய்து அதனை முக்கோண வடிவ பார்டர் படியில் வைத்து ஒருமுறை அழுத்தவும் (காயில் என்றால் வட்ட வடிவம். க்வில்லிங் செய்வதற்கான அடிப்படை டிசைன்).

க்வில்லிங் கிளாஸ்..!

ஜிமிக்கி பேஸ்: டைட் காயில் செய்து அதனை ஜிமிக்கி மோல்டில் விரும்பும் அளவில் வைத்து ஒருமுறை அழுத்தி எடுக்கவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

ஹார்ட்டின் வடிவம்: கோபுர பொட்டு வடிவம் செய்து அதன் கூர்மையான பகுதியில் பிடித்துக்கொண்டு அடிப்பகுதியை உள்நோக்கி ஒருமுறை அழுத்தவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

முக்கோண வடிவம்: திலக வடிவம் செய்து அதன் அடிப்பகுதியினை விரலால் நன்கு அழுத்திவிடவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

சதுரம்: டைட் காயில் செய்து அதனை நான்கு பக்கங்களிலும் விரலால் அழுத்தவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism