‘கண்ணுக்கு மை அழகு’ என்பது ஓல்டு. ‘கண்ணுக்கு கூலர்ஸ் அழகு’ என்பதுதான் ஹாட். ஃபேஸ்புக் `டிபி’-க்கு கூலர்ஸ் போட ஆரம்பிச்ச கிரேஸ், கொட்டுற மழையிலும் எல்லோரும் கறுப்புக் கண்ணாடியோட சுத்துற அளவுக்கு அட்ராசிட்டியாகிக் கிடக்கு. ‘அப்படி என்னதான் இருக்கு இதுல?’னு கேட்டோம் இவங்ககிட்ட!

அஜய்

பார்க்க வேஃபர் பிஸ்கட் மாதிரி மெல்லிசா இருக்கும் இந்த ‘வேஃபர்’ டைப் கூலர்ஸ்தான் சமீப வைரல். பல கலர்ஸ்ல ஃப்ரேம் வர்றதால எல்லா கலர், வகை அவுட்ஃபிட்டுக்கும் பொருத்தமா இருக்கும். ‘ஸ்பிரின்ட்’, `எஃப்.சி.யு.கே’ பிராண்ட்ஸ் இந்த மாடலுக்கு ரொம்பப் பிரபலம். ஆரம்ப விலை 1,500 ரூபாயில் இருந்து கிடைக்கும்!

அரவிந்த்

‘குருதிப் புனல்’ கமல்ல இருந்து ‘என்னை அறிந்தால்’ அஜித் வரைக்கும் எல்லா போலீஸ் கதாபாத்திரத்துக்கும் கெத்து சேர்க்கிறது இந்த ‘அவிகேட்டர்’ வகை கூலிங்கிளாஸ்தான். நீள முகம், பெரிய கண்கள் இருக்கிறவங்களுக்கு பக்காவான சாய்ஸ். ‘ஃபாஸ்ட் ட்ராக்’, ‘ரேபன்’, ‘கிலோபஸ்’ எல்லாம் இந்த மாடலுக்கு பெயர் போன பிராண்ட்ஸ். ஆரம்ப விலை 1,800 ரூபாயில் இருந்து கிடைக்கும்!

மதுமிதா - ஷ்ருதி

நிறைய சாய்ஸ் இருந்தாலும் எங்களுக்குப் ரொம்பப் பிடிச்சது ‘கேட் ஐ’ டைப் மற்றும் ‘ஒவல்’ டைப்தான். இந்த மாடல்ஸ் மட்டும்தான் காஜல் கலையாம பாத்துக்கும். போர் அடிச்சா தலையில செருகி ஸீன் போடவும் வசதியா இருக்கும். எல்லாவிதமான வெஸ்டர்ன் அவுட்ஃபிட்டுக்கும் சூட் ஆகும். பெரிய கிளாஸா இருக்கிறதால தூசுகிட்ட இருந்து கண்களைப் பாதுகாக்கும். இதில் ‘ஸ்காட்’ பிராண்ட் எங்க ஃபேவரைட். ஆரம்ப விலை 2,000 ரூபாயில் இருந்து கிடைக்கும்.

கிரண்

‘மாஸ்’ படத்துல சூர்யா போட்ட இந்த போலராய்டு கிளாஸ்தான் நம்ம ஊர் க்ளைமேட்டுக்கு கிரேட் சாய்ஸ். என்ன வெயில் அடிச்சாலும், ஏ.சி பக்கத்துல கண்ணை வெச்சுட்டு இருக்குற ஃபீல் கொடுக்கும். ‘டாமி ஹில்ஃபிகர் (Tommy hilfiger) பிராண்ட் இதுக்கு செம ஃபேமஸ். ஆரம்ப விலை 4,000 ரூபாயில் இருந்து கிடைக்கும்!

எல்லோரும் சேர்ந்து கொடுத்த சைலன்ட் கமென்ட்... ‘‘கூலர்ஸ்... சைட் அடிக்கிறதைக் காட்டிக் கொடுக்காத சேஃப்டி டிவைஸ்! உஷ்ஷ்ஷ்..!’’

பி.நிர்மல், கோ.இராகவிஜயா, படங்கள்: மா.பி.சித்தார்த்

நன்றி: க்ளோபஸ், தி.நகர் - சென்னை