‘‘பழங்கள் மற்றும் காய்கறிகள் பேக், சரும அழகை மெருகூட்டும்!’’ என்று `ஜில்’ செய்தி சொல்லும் சென்னை, வளசரவாக்கம் ‘மியா’ சலூனின் உரிமையாளர் ஃபாத்திமா, அதன் செய்முறை மற்றும் பலன்கள் பற்றி சொல்கிறார் இங்கு...

ஸ்ட்ராபெர்ரி

இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால்/தயிருடன் இரண்டு ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். வாரம் மூன்று நாட்கள் என தொடர்ந்து செய்து வர, சூரிய ஒளியினால் கறுத்த சருமம் (சன் டேன்) மீண்டும் பழைய நிறத்தை அடைவதுடன் கிளியர் சருமத்தையும் பெறலாம்.

செர்ரி

ஐந்து செர்ரி பழங்களுடன் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து, முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறுவதுடன், கருந்திட்டுக்கள் நாளடைவில் மறையும்.

பிளம்ஸ்

கொட்டை நீக்கிய மூன்று பிளம்ஸுடன் மூன்று ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து... முகத்தில், குறிப்பாக முகப் பருக்களின் மீது தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். வாரம் மூன்று முறை இதனைத் தொடர்ந்து செய்து வர, பருக்கள் இருந்த தடம் தெரியாமல் மறையும்.

கிவி

`சன் டேன்’ பிரச்னைக்கு சிறந்த நிவாரணியான கிவி பழத்தை அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும். இரண்டு ஸ்பூன் தயிருடன் இந்த ஜூஸில் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவினால், மாசு மரு நீங்கி சருமம் பொலிவு பெறுவது மட்டுமின்றி சன் டேன் வராமல் தடுக்கலாம்.

வெங்காயம்

சரும நிறம் ஒரே சீராக இருக்கவும் பளபளப்பு பெறவும், இரண்டு சிறிய வெங்காயத்தை பேஸ்ட்டாக

அரைத்துக்கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் கடலை மாவு, அரை ஸ்பூன் சந்தனப் பொடி, ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, சில சொட்டுக்கள் பால் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இக்கலவையை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு `ஜில்’ தண்ணீரில் முகம் கழுவவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், நிறத்தையும் கூட்டும்.

கேரட்

ஒரு முழு கேரட்டுடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்து விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் போடவும். நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், முகம் தகதகவென ஜொலிக்கும். கேரட்டில் உள்ள பீட்டா கெரொட்டீன், விட்டமின்-சி மற்றும் விட்டமின்-கே போன்ற சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும், சருமத்தில் வழியும் அதிக எண்ணெயைக் கட்டுப்படுத்தி சுருக்கங்கள் ஏற்படாமல் காக்கும், இதில் கலந்துள்ள தேன், முகப்பரு வராமல் தடுப்பதோடு சருமத்தை ஈரப்பதமாக்கும்!

அழகு... இனி அடுப்படியிலேயே!

இந்துலேகா.சி