தேவதர்ஷினி - சேத்தன்... சின்னத்திரை சக்சஸ்ஃபுல் ஜோடி! ‘மர்மதேசம்’ சீரியலில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து, காதலித்து, கரம் பிடித்து, இன்று ஒரு பெண் குழந்தை நியத்தியுடன் ‘ஹேப்பி ஃபேமிலி’யாக கொண்டாடிக்கொண்டிருப்பது வரை, 14 ஆண்டுகளாக அவர்கள் கைகோத்து பயணிக்கும் கதையில், அன்பு, அக்கறை, புரிதல், பொறுமை என வழியெல்லாம் நேசம்!

‘‘லேடீஸ் ஃபர்ஸ்ட்டுங்க..!’’ என்று தேவதர்ஷினியைக் கைகாட்டிவிட்டு, மனைவியின் பேச்சை ரசிக்க ஆரம்பித்தார் சேத்தன்! ‘‘காதலிக்கும்போது மட்டும் எப்படி தேனா பேசினீங்க? கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி மாறிட்டீங்களேங்கிற புலம்பல், நிறைய காதல் தம்பதிகள் வீடுகள்ல கேட்கும். ஆனா, எங்க வீட்டில் இல்ல. ‘அப்டியா?! இப்பவும் சேத்தன் அவ்ளோ ரொமான்டிக்கா?’னு கேட்குறீங்களா..? அதான் இல்ல. அப்போவே அவர் `ரஃப் அண்ட் டஃப்’ ஆகத்தான் பேசுவார். மனசுல பட்டதை பட்டுனு சொல்லிடுவார். ஆரம்பத்தில் எனக்கு, ‘என்ன இந்த மனுஷன், இதையே கொஞ்சம் நல்ல வார்த்தைகள்லயாச்சும் சொல்லியிருக்கலாமே..?’னு கடுப்பா வரும். ஆனா, பழகிருச்சு. ‘இந்த டிரெஸ் உனக்கு அட்டகாசம் தேவி!’னு அவர் இப்போ ஏதாச்சும் தேனா பேசினா, எனக்குத் திருப்தியாவே இருக்காது. அப்படி என்னை ட்யூன் பண்ணிட்டாரு இந்த மனுஷன்!’’ என்று தேவதர்ஷினி செல்லமாக சேத்தனை முறைக்க,

‘‘கல்யாணத்துக்கு முன்னாடி, பின்னாடி எப்பவும் சேத்தன் ஒரே மாதிரிதான்னு நல்ல பேரு வாங்கிட்டேன்ல!’’ என்று கண்ணடித்துத் தொடர்ந்தார், சேத்தன்.... ‘‘நான் தேவியை மனைவிங்கிற ஸ்தானத்தில் ரொம்ப ரசிப்பேன். ஆனா, அம்மாங்கிற பொறுப்பில் அவங்களை நிறைய மதிப்பேன். எங்க பொண்ணு நியத்தியை நான்கூட கோபத்துல ரெண்டு வார்த்தை சொல்லிடுவேன். ஆனா, ‘அவ குழந்தை. பொறுமையாதான் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கணும்!’னு 100 பர்சன்ட் பெர்ஃபெக்ட் அம்மாவா அசத்துவாங்க. பொதுவா மீடியாவில் இருக்கிற நாங்க நேரம்காலம் பார்க்காம ஓடிட்டே இருக்கணும். ஆனா, அவங்க குழந்தைக்கான நேரத்தை தன்னோட வேலை எப்பவும் டிஸ்டர்ப் பண்ணாமப் பார்த்துக்குவாங்க. ‘கிரேட்!’னு பாராட்டினோம்னா, ‘நாம எதுக்காக ஓடி ஓடி உழைக்கிறோம்... நம்ம குழந்தைக்காகத்தானே? நிகழ்காலத்தில் அதை மிஸ் பண்ணிட்டு, அதோட எதிர்காலத்துக்குச் சேர்க்கிறது என்ன லாஜிக்னு ஒரு நிமிஷம் உட்கார்ந்து யோசிச்சோம்னா, தானா அவங்களுக்குச் செலவழிக்க நேரத்தைக் கண்டுபிடிச்சுடுவோம்!’னு எனக்கும் அட்வைஸ் பண்ணுவாங்க. நியத்திக்கு நான் குட் அப்பா; தேவி பெஸ்ட் அம்மா!’’ - சேத்தனின் வார்த்தைகளில் பெருமிதமும், பாராட்டும்!

‘‘பொறுமை ரொம்ப நல்ல விஷயம். ஆனா, இவங்க பொறுமை சமயங்களில் நம்ம பொறுமையை சோதிச்சிடும்...’’ - தொடர்ந்தார் சேத்தன்... ‘‘அவசரமா ஒரு ஃபங்ஷனுக்குக் கிளம்பும்போது, ‘இந்த டிரெஸ் ஓ.கேவா?’னு கேட்டா, அப்போதான் நம்மளை சுத்தி சுத்தி வந்து ரசிச்சுப் பார்த்துட்டு, அப்புறம்தான் கமென்ட்ஸ் சொல்லுவாங்க. ‘உன் பொறுப்பு உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா?’னு டென்ஷனாகும் நமக்கு. இப்படித்தான் நான் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்துலயும், ரொம்ப யோசிச்சுதான் முடிவெடுப்பாங்க தேவி... அது அன்னிக்கு சமையலுக்கான மெனுவா இருந்தாலும் சரி... என் ப்ராஜெக்ட்ஸ் பத்தின ஆலோசனைகளா இருந்தாலும் சரி!’’ என்று சேத்தன் அன்பு பொங்க...

‘‘அவர் சம்பந்தப்பட்ட எந்த விஷயமுமே எனக்கு ஸ்பெஷல்தான். அதே அக்கறையை அவர் எனக்கு ரிட்டர்ன் பண்ணுவார். எந்தப் பிரச்னையுமே கண்ணுக்கு பக்கத்துல வெச்சுப் பார்க்கும்போது பெருசா தெரியும். தூர வெச்சுப் பார்த்தா தீர்க்கும் வழி தெரியும். எங்க வீட்டில் ஒரு வழக்கம் உண்டு. எங்க ரெண்டு பேருக்குமே தொழில் ரீதியா நிறையப் பிரச்னைகள் இருக்கும். அதைப் போட்டுக் குழப்பிக்காம, ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஷேர் பண்ணி, தீர்வுகளை யோசிப்போம். அதேபோல, ‘ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கு... கொஞ்ச நேரம் தனியா இருந்துட்டு வர்றேன்...’னு அவர்கிட்ட சொல்லிட்டு நான் ரிலாக்ஸ் பண்ணிக்கிற பிரைவஸியையும் எனக்கு அவர் கொடுப்பார்!’’ என்றபோது, தேவர்தர்ஷினியின் குரலில் நன்றி!

‘‘தேவி சூப்பரா சமைப்பாங்க. அவங்க செய்ற ‘தாய் வெஜ்கறி’ என்னோட ஆல்டைம் ஃபேவரைட். கொஞ்சம் சீரியஸா பேசணும்னா, இந்த ஃபீல்ட் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனா, ஒரு நாளும், ‘இதை ஏன் செஞ்சீங்க?’, `அதை ஏன் செய்யல?’னு அவங்க என்னைக் கேட்டதில்ல. வெற்றி, தோல்வினு எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியான அன்பைத்தான் தருவாங்க. அதுதான் எங்க உறவோட பெரிய பலம். ‘வாய்ப்பு கிடைக்க தாமதமாச்சுன்னா, அதை கடவுள் கொடுத்திருக்கிற ரெஸ்ட்னு நினைச்சுக்கணும்!’னு ஆதரவா பேசுவாங்க. ஒரே துறையில் இருக்கும் தம்பதிகளுக்கு, இணையோட தொழில் சூழலைப் புரிஞ்சுக்கிறது சுலபம் என்றாலும், அது அந்த தனிப்பட்ட மனுஷங்களோட இயல்பைப் பொருத்ததும்கூட! அந்த வகையில் தேவி என்னை அதிர்ஷ்டசாலி ஆக்கிட்டாங்க!’’ என்ற சேத்தனை நிறுத்தி தேவதர்ஷினி,

‘‘ஓவர் சீரியஸ் டாக் உடம்புக்கு ஆகாது. உங்ககிட்டதான் இப்படியெல்லாம் பேசி மார்க் வாங்குறாரு... உண்மையில் இவருக்கும் இவர் பொண்ணுக்கும் வீட்டுல நான் காமெடி பீஸ். அக்கா, தங்கை, அண்ணினு நான் பண்ற எல்லா ரோல்களையும் இவரும் நியத்தியும் இமிட்டேட் செஞ்சே என்னைக் கலாய்ப்பாங்க. மொத்தத்துல, நாங்க கொண்டாட்ட ஃபேமிலி. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை!’னு எல்லோரும் கைகோத்து ஆடி வேணும்னா காட்டட்டுமா..?!’’ என்று தேவதர்ஷினி கேட்க, பெருகுகிறது அங்கு சிரிப்பும் சந்தோஷமும்!

வே.கிருஷ்ணவேணி படம்:சு.குமரேசன்