கறுப்பு, வெள்ளைக் கட்டங்களில் விளையாடி, வெற்றிகள் குவிக்கும் இளம் திறமை... பொன்.கிருத்திகா!

சதுரங்கத்தில் மூன்று முறை காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், இரண்டு முறை உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி, பலமுறை ஆசிய, இந்திய அளவில் சாம்பியன்ஷிப் பதக்கங்கள் என்று நிமிர்ந்து வரும் கிருத்திகா படிப்பது... சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்!

''அப்பா, குருநானக் கல்லூரியில் பேராசிரி யர். அம்மா, ஹோம் மேக்கர். சின்ன வயசில் எனக்கு செஸ் விளையாடக் கற்றுக்கொடுத்து, அதில் ஆர்வத்தை ஏற்படுத்தினது... என் பாட்டி. வேணும்னே தான் தோற்று, என்னை ஜெயிக்க வெச்சு, 'சூப்பரா விளையாடுறியே!’னு உற்சாகப்படுத்துவாங்க.

நான் படிச்ச நங்கநல்லூர் மாடர்ன் ஸ்கூல்ல ஏதாவது ஒரு 'எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி’ தேர்ந்தெடுக்கச் சொல்லி, சிறப்புக் கோச்சிங் கொடுப்பாங்க. நான் தேர்ந்தெடுத்தது... செஸ்! ரவிச்சந்திரன் மாஸ்டர்தான் என் குரு. ஸ்கூல் பிரின்ஸிபால் சீதாலக்ஷ்மி மேடம், அந்த வயதில் என் முயற்சிகளுக்குப் போட்ட பெட்ரோல்லதான்... இவ்வளவு தூரம் நான் ஓடி வந்திருக்கேன்னு நம்புறேன்.

ஆறாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தப்ப, கொல்கத்தாவில் நடந்த நேஷனல் லெவல் டோர்னமென்ட்டுக்கு, ஒரு மாதம் ஸ்பெஷல் லீவ் கொடுத்து அனுப்பினாங்க பிரின்ஸிபால். நம்ம ஸ்டேட்டில் இருந்து போனவங்கள்ல நான்தான் முதல் இடம். ஆனா, ஒட்டுமொத்தமா பார்த்தா... 23-வது இடம். மேடம் திட்டுவாங்களேங்கிற பயத்தோட ஸ்கூல் போனேன். 'பார்டிஸிபேஷன்தான் முக்கியம். அந்த ஸ்பிரிட் இருந்தா, பிரைஸ் தானா வரும்!’னு அணைச்சுக்கிட்டாங்க.

அடுத்ததா நான் தொடர்ந்து மூணு டோர்னமென்ட்கள்ல வின் பண்ணிட்டு, கப்களோட மேடம் முன்னாடி போய் நின்னப்போ, அவங்க முகத்தில் மலர்ந்த பரவசம்... இப்பவும் என் கண்ணுக்குள் இருக்கு. மேடம் கொஞ்ச நாளைக்கு முன்ன தவறிட்டாங்க''

- வருத்தம் படர்கிறது கிருத்திகாவின் குரலில்.

''ஆர்வமா மட்டுமே எனக்குள்ள இருந்த செஸ், வெறியா மாறினது... விஸ்வநாதன் ஆனந்த் சாரைப் பார்த்தப்போதான். அவர் ஒருமுறை சாம்பியன்ஷிப் வின் பண்ணிட்டு வந்தப்போ, சென்னை ஏர்போர்ட்ல அவரை வரவேற்ற கூட்டத்தில் நானும் நின்னேன். ஹய்யோ... அவரைக் கூட்டம் கொண்டாடினதில் அசந்தே போயிட்டேன். 'நாமளும் இந்த மாதிரி பெஸ்ட் பிளேயர் ஆகணும்!’னு வைராக்கியத்தை ஏத்திக்கிட்டேன்.

தினமும் 8 - 12 மணி நேரம் பயிற்சி எடுப்பேன். அப்போ செஸ்ல பரபரப்பா இருந்த விஜயலட்சுமி மேடம், எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். அவங்க பொதுவா தடுத்து ஆட மாட்டாங்க. எதிராளியை அட்டாக் பண்ணி திக்குமுக்காட வெச்சுடுவாங்க. நானும் அந்த ஸ்டைல்ல ஜெயிச்ச போட்டிகள் நிறைய.

2005-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் எனக்கு 17-வது இடம்தான் கிடைச்சுது. சோர்ந்து போகாம, அடுத்த வருஷமும் கலந்துக்கிட்டேன். டேபிள் டாப்பரா இருந்த ஒரு பொண்ணுகூட, எனக்கு கடைசி ரவுண்ட். பயத்தை தூக்கி தூர வெச்சுட்டு விளையாடினேன். பல இழுபறிக்கு அப்புறம் 'டிரா’ ஆச்சு. அடுத்ததா மூணு பேர்கூட மோதி, இடையில் பிரேக் பண்ணி, 4-வது இடம் ஜெயிச்சேன். 17-வது இடத்தோட சோர்ந்து போயிருந்தா, மறு வருஷமே இந்த 4-வது இடம் கிடைச்சு இருக்குமா!''

- உணர்ந்து சொல்கிறார் கிருத்திகா.

''பல பதக்கங்கள் ஜெயிச்சு இருந்தா லும், எனக்கு மறக்க முடியாத சந்தோஷம், என்னோட இன்ஜினீயரிங் கவுன்சிலிங்தான். ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல எனக்காக ஒதுக்கப்பட்ட தினத்தன்னிக்கு, டோர்னமென்ட்டுக்காக நான் பாரீஸ் போயிட்டேன். அப்பாவும், அம்மாவும்தான் கவுன்சிலிங்க்ல கலந்துகிட்டு, எனக்கான ஸீட்டை உறுதிப்படுத்தினாங்க. அப்ப அவங்க பட்ட சந்தோஷம்... அதுதான் என்னை இத்தனை தூரம் வளர்த்து ஆளாக்கினவங்களுக்கு என்னால் திருப்பிக் கொடுக்க முடிஞ்ச சின்ன பரிசு!

பிள்ளைங்களோட ஆர்வத்தை, திறமையைப் புரிஞ்சு பெற்றோர்கள் ஊக்குவிச்சா, எல்லா வீட்டுலயும் கல்பனா சாவ்லா, சானியா உருவாவாங்க!''

- மெஸேஜ் சொல்லி முடிக்கிறார் கிருத்திகா!

- பூ.கொ.சரவணன்
படங்கள்: ப.சரவணகுமார்