கல்லூரிப் பெண்கள் ஓரிடத்தில் கூடினாலே திருவிழாதான். அதிலும், 'அவள்’ நடத்தும் 'டீன் ஃபேஷன்’ திருவிழா என்றால் சொல்லவும் வேண்டுமா! இனிமையும், இளமையும் ததும்பக் கலக்கினார்கள் திண்டுக்கல், பார்வதி’ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள்!

மொத்தம் 39 மாணவிகள் கலந்து கொண்ட ஃபேஷன் பரேடுக்கு, மார்க் போடும் பேனா... திண்டுக்கல் நகரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் கெஜலட்சுமி வசம்!

தொடங்கியது 'கேட் வாக்’!

சேலையில் மங்களகரமாக என்ட்ரி கொடுத்தார் அனுஷ்யாதேவி. மேடையில் வெட்கத்தை அடக்க மிகவும் சிரமப்பட்ட சம்பூரணி அணிந்திருந்தது, ஷிஃபான் சேலை. கையில் விளக்குடன் வந்து கேரள சேச்சியாக அசத்தினார் சுவாதி. தடதடவென மேடையேறி, திசை நான்கையும் கவர் செய்து 'வாக்’கிய மகாலட்சுமிக்கு அத்தனை அப்ளாஸ்.

வொயிட் டி-ஷர்ட், ப்ளூ ஜீன்ஸில் கலக்கலாக மேடையேறி அசத்தலாக போஸ் கொடுத்த வைஷாலியின் ஸ்டைலில் அரங்கு அதிர்ந்தது. மணப்பெண் அலங்காரமும், நளினமும் அணிந்து வந்த மெகபூப் பேகம், நார்த் இண்டியன் உடையில் வந்த நஸ்ரீன் பாத்திமா... இருவருக்கும் அவர்களின் உடைகள் அத்தனை பொருத்தம். ஏதோ புரொஃபஷனல் மாடல் போல் அத்தனை ஸ்டைலாக 'போஸ்’ கொடுத்தார் திக் ப்ளூ கலர் டிசைனர் சேலை அணிந்து வந்த பத்மாவதி. நீல நிற 'பார்ட்டி வேர்’ல் வந்து நின்ற சுஹைலாதனஸ், சுத்தி சுத்தி கொடுத்த 'ஃப்ளையிங் கிஸ்’, காற்றில் பறந்து க்ளாப்ஸில் கரைந்தது!

மழை ஓய்ந்த மாலைபோல, வந்தது ரிசல்ட் நேரம். ''ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்னாலும்... ஆடை, அலங்காரங்கள் மேல் உங்களுக்கு இருக்கிற ஆர்வமும், அறிவும் சூப்பர். புடவை, சோளி, ஜீன்ஸ்லயே இவ்வளவு வெரைட்டிகள் கொடுத்திருக்கீங்க... அதுவும் நீங்களே ஃபேஷன் டிசைனராவும் இருந்து'' என்று பாராட்டிய கெஜலட்சுமி,

''தேர்ட் பிரைஸ் கோஸ் டூ...'' என நிறுத்த, அரங்கம் அமைதியானது. ''வைஷாலி!'' என்றதும் ''ஹேய்ய்ய்ய்!'' பாடினார்கள் பெண்கள். ''டி-ஷர்ட், ஜீன்தான். ஆனாலும், ஒரு ஃபேஷன் ஷோவுக்கு ஏற்ற மாதிரி பெர்ஃபார்மன்ஸ் கொடுத்ததால், வைஷாலிக்கு இந்தப் பரிசு!'' என்று காரணமும் சொன்ன கெஜலட்சுமி, இரண்டாவது பரிசை சுஹைலாதனஸுக்கு அறிவித்தார்.

''அந்த ப்ளூ கலர் பார்ட்டிவேர் மட்டும் இல்லை, நீங்களும் ஹிட். தயக்கம், கூச்சம் எதுவும் இல்லாம மேடையை நீங்க பயன்படுத்தின விதம் சூப்பர்!'' என்றதும் சுஹைலாதனஸுக்கு அத்தனை பரவசம்.

''முதல் பரிசு... எனி கெஸ்..?!'' என்று கெஜலட்சுமி ஆடியன்ஸைத் தூண்ட,

''கார்த்திகா, கார்த்திகா!'' என்று கோஷம் பாடினார்கள் கேர்ள்ஸ்.

''அவரேதான்! இந்த மாடர்ன் மேடையிலும் பட்டுச் சேலையில், ஆர்ப்பாட்டம் இல்லாத அலங்காரத்தோட வந்து அப்ளாஸ் அள்ளின கார்த்திகாவுக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ்!'' என்றதும், 'செல்லே லம்மா... சேலை லேலம்மா' என்று கிளம்பிய ஆராவாரம் அடங்க வெகு நேரமானது.

முதல் பரிசாக மெகா மேக்-அப் கிட், இரண்டாவது பரிசாக ஹேர் டிரையர், மூன்றாவது பரிசாக ஃபேன்ஸி வாட்ச் மற்றும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பாடி ஸ்பிரே ஆகியவை வழங்கப்பட்டன.

''எங்க காலேஜ்ல நடந்த முதல் ஃபேஷன் ஷோ இதுதான். எங்க பொண்ணுங்க இவ்வளவு ஆர்வமா கலந்துக்குவாங்கனு நாங்களே எதிர்பாக்கலை!'' என்றனர் நிகழ்ச்சியை ரசித்த கல்லூரி விரிவுரையாளர்கள்!

அடுத்தது உங்கள் ஊராகவும் இருக்கலாம்... தயாராக இருங்கள்!

- ஜி.பிரபு, ஆர்.குமரேசன்
படங்கள்: வீ.சிவக்குமார்